ஆசை
ஆதி மனிதர்களாய்
இருக்க ஆசை;
ஆடையற்றவர்களாய் அல்ல
ஜாதியற்றவர்களாய்!
——————————————
காதல்
அருகில் நீயிருந்தால்
அகிலத்தையே மறக்கிறேன்;
அகன்று நீ சென்றால்
அக்கணமே உயிர்துடிக்கிறேன்!
——————————————
காதலிக்காக..
மீரா –
கண்ணனுக்காக காத்திருந்தாள்
கையில் வீணையோடு;
உனக்காகவே காத்திருக்கிறேன்
இதயம் முழுதும் நான், காதலோடு!
——————————————
கல்லறை பூக்கள்
பெண்கள் பூக்கள் தான்
மண்மீது பூக்கும் பூக்களல்ல;
ஆண்களின் –
கல்லறை மீது பூக்கும் பூக்கள்!
——————————————
தி. தமிழினியன்
//ஆதி மனிதர்களாய் இருக்க ஆசை;
ஆடையற்றவர்களாய் அல்ல
ஜாதியற்றவர்களாய்!//
இவரை திரும்பிப் பார்க்க வைத்த கவிதை, ஜாதியின் கொடூர முகத்தை கவிதையில் கத்தி செய்து குத்தி கிழித்திருக்கிறார்.
இன்னும் நிறைய கவிதைகளை சமூகம் சார்ந்து படைக்க என் வாழ்த்துக்கள்பா..
வித்யாசாகர்
LikeLike
அதென்ன! கல்லறை மீது பூக்கும் பூக்கள்!
பெண்களை இகழ்கிற கவிதையா!
பாதிக்கப்பட்டு எழுதியதோ?
தீ என்ற பெயருக்கு உரிய கருத்தோ!
LikeLike
இருக்கலாம் சகோதரி. நானும் முதலில் பிரசுரிக்க யோசித்தேன் பிறகே பதிந்தேன். ஆனால் பெண்களை இகழும் கருத்தென்று இல்லை, காதலனின் இன்னொரு பார்வை இது என்று எண்ணிக் கொள்ளளாம்.
பெண்களை நம்பாதே கண்களே…பெண்களை நம்பாதே, பொம்பளைங்க காதலைத் தான் நம்பிவிடாதே.., ஆண்பாவம் போன்ற பாடல்கள் படங்களின் வரிசை போல்!
இவைகளை கடந்து மிக கருத்துமிக்க இவரின் பல சமுக கவிதைகள் உள்ளன. ஆயினும், அவர் பதிவதையே நாம் எடுத்துப் பதிகிறோம். பெண்களை மிகவும் மதிக்கும் போற்றும் அவரின் கவிதைகளையும் அவரிடம் கண்டுள்ளேன், இனி அவைகளையும் இங்கே பதிவாறெனில் மகிழ்வோம்!
LikeLike
கல்லறை மீது பூக்கும் பூக்கள்!
பெண்களை இகழ்கிற கவிதையா!
பாதிக்கப்பட்டு எழுதியதோ?
தீ என்ற பெயருக்கு உரிய கருத்தோ!//
கவிதை அருமையாக இருக்கிறது ஆனால் பெண்களின் மீது கொண்ட கருத்தை மற்றும் மாற்றி எழுதுங்கள் கவிஞரே
LikeLike
அதை காலம் மாற்றும் சரளா. அல்லது மாறுபட்ட கவிதைகளில் எழுதிக் கொள்ள சொல்லலாம்.
ஏன் சரளா உங்களுக்குக் கூட // ஆதி மனிதர்களாய் இருக்க ஆசை; ஆடையற்றவர்களாய் அல்ல ஜாதியற்றவர்களாய்// இக்கவிதை பெரிதாக தெரியவில்லையா???
எதையும் தன்னை வைத்து மட்டுமே பார்க்காதீர்கள். உலகம் சுற்றி பாருங்கள். உலகில் இக்கவிதையை மாற்ற வேண்டாம் என்பதற்கான பெண்களும் இருக்கிறார்கள் தான். ஆகையால் இக்கவிதையை அவர்களுக்கென ஒதுக்கிவிடுவோம்; மொத்த பெண்களுக்கென இன்னும் ஆயிரமாயிரம் கவிதைகள் படைப்போம்!
//அருகில் நீயிருந்தால் அகிலத்தையே மறக்கிறேன்; அகன்று நீ சென்றால் அக்கணமே உயிர்துடிக்கிறேன்// இதை எழுதிய அந்த இதயம் காரணமில்லாமலா அதை எழுதும்?
இது அவர் அனுபவம். அவர் சொல்ல உரிமை உண்டு. வேறுபட்ட உணர்வுகளை தனக்குள் பதிந்துக் கொள்வதே இலக்கியம் இல்லையா? வேண்டுமெனில் அவரை சந்திக்கையில் அல்லது மின்னஞ்சல் செய்தாவது அவருக்கு உங்களின் மறுப்பினை தெரிவிக்கிறேன். மிக்க நன்றி!
LikeLike
மன்னிக்கவும் சகோதரிகளே; அவர் தீ. தமிழினியன் அல்ல.
தி. தமிழினியன். திருத்திவிட்டேன்.
மிக்க நன்றி!!
LikeLike
சரி, சரி, வித்யாசாகர்! எல்லா வகைக் கருத்துகளும் கூற எல்லோருக்கும் உரிமையுண்டு. மிக மோசமான பெண்களும் இருக்கிறார்கள் தான் இல்லையென்று நான் கூற மாட்டேன். மிக மோசமான பெண்ணால் பாதிப்படைந்துமுள்ளேன். தி.தமிழினியனுக்கு வாழ்த்துகள். ஆசை, காதல், காதலிக்காக அனைத்தும் நல்ல வரிகளாக, கவித்துவ வரிகளாகவேயுள்ளன. இப்படிக் கருத்துகள் கூறி உரையாடுவதும் சுவை தானே! தேமே என எழுதுவதில் என்ன சுவை இருக்க முடியும்!
வித்யாசாகர்! நிலாவின் விழாவில் உங்கள் தாயாரைக் கண்டது மகிழ்வு.
LikeLike
மிக்க நன்றி சகோதரி. தாராளமாக கூறலாம். உங்களுக்கில்லாத உரிமையா. கருத்து பரிமாறிக் கொள்வது பிறரின் சந்தேகங்களுக்கும் விடை கொடுக்கிறது என்ற பட்சத்தில் நல்லது தான் சகோதரி. நன்றாக எழுதி வரும் புதிய படைப்பாளிகளை பெருமை படுத்துவதே நம் நோக்கமாக இருக்கும் என்பதை நீங்களும் அறிவீர்கள் தானே. தவிர, தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி, அம்மாவிடமும் பேசுகையில் சொல்கிறேன். மிக்க அன்பும் உரிமையும் மனதில் நிறைகிறது. மிக்க நன்றி சகோதரி!
LikeLike