அவளெனக்கு எழுதிய
எந்த கடிதத்திலுமே என்னை
காதலிப்பதாக சொல்லவில்லை
நானும் நிறைய கடிதமெழுதியதுண்டு
வரிக்கு வரி காதலாகவே கரைந்ததுண்டு
கடைசி வரை அவள்
காதலிப்பதாக
சொல்லவேயில்லை
நானும் வற்புறுத்தியதில்லை
இன்று
எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும்
அந்த அவளெழுதிய கடிதங்களை
எடுத்துப் பார்த்துக் கொள்வதுண்டு
ஒருவேளை அவளும் என்னை
காதலித்திருக்கக் கூடும்!!
———————————————————————