முதன் முதலாய் ஒரு வெளிச்சம் கண்டேன்
இதுவரை கண்டிராத சந்தோசத்தின் வெளிச்சம் கண்டேன்
முதன் முதலாய் அவள் பூக்கக் கண்டேன்
எனக்காய் எனக்காகவே இன்று பூக்கக் கண்டேன்
முதன் முதலாய் அவள் சிரிப்பை கண்டேன்
எனை பார்த்து சிரித்த தனிச் சிரிப்பை கண்டேன்
முதன் முதலாய் அவள் வெட்கம் கண்டேன்
தரையில் கால்கள் கோலமிடாது
விழிகள் ஜாலமிட்டுக் கொண்ட புதுமை கண்டேன்
முதன் முதலாய் அவள் பேசக் கண்டேன்
எனக்கான காதலை ‘தனை மறந்து பேச
எனக்குள் நானே நானின்றி ஆகக் கண்டேன்
முதன் முதலாய் முதன் முதலாய்
உலகமே எனக்கென கிடைத்ததாய் கண்டேன்
வாழ்வெல்லாம் புதியதாய் புதுப்பிக்கக் கண்டேன்
புது ரத்தம் உடலெலாம் பாய – கண்டேன்
அவள் சொன்ன வார்த்தையில்
காதலிப்பதாய் அவள் சொன்ன வார்த்தையில்
யாருமற்ற உலகொன்று தேடி – அதில்
நானும் அவள் மட்டுமே வாழக் கண்டேன்!
———————————————————-
முதன் முதலாய் காதலால்
சுவாசம் ஒன்றாக சேர கண்டேன்….
LikeLike