ஈழத்து சுவடுகளை முகத்திலெழுதி
உண்மை நிகழ்வுகளை செய்தியாக்கி
உணர்வு பிழம்புகளுக்கு உயிர் தந்து
எளியோரையும் கவர்ந்தாய்; இமயம் தொட்டாய்!
தமிழர் நிலையை காட்சியாக்கி
தமிழின் வளமையை உலகின் விழிகளிலெழுதி
உனை படிப்பதை எங்களுக்கு – தலையெழுத்தாக்கினாய்
உலகின் தெருவெல்லாம் மீனக பெயரெழுதினாய்!
ரகசியம் உடைத்தும் – சமரசம் செய்தாய்
அரசர் ஆண்டியாயினும் நீதியுரைத்தாய்
தவறென்று வந்தாலோ முகம் பாராமல்
மன்னிக்கவும் சொன்னாய், பண்பில்; மாண்பு பெற்றாய்!
வரலாற்றினை பதிவுகளாக்கி –
அரசியலுக்கு அடிபணிய மறுத்து –
தரத்தில் குன்றிடாத உழைப்பினால், தரணி முழுக்க
வளம் வந்தாய்; வரம் நீயானாய்!
செய்ய இரண்டென்றும், பேச ஒன்றென்றும் – குவித்த உன் வெற்றியில்
படைப்பவர் உன் கைக்குள் அடங்கிப் போனார்; நீ
படைப்பாளிகளுக்குள் அடங்கி போனாய்; உலகம்
கொட்டக் கண் திறந்து உன்னை தனக்குள் அடக்கிக் கொண்டது!
நன்றி பூப்பதில் நலிவின்றி வள்ளலானாய்
இன்றியமையாத செய்திக்கு நீயே முதன்மையானாய்
காலம் தவறாத பணியால் –
ஞாலம் புகழட்டும்; தமிழர் வாழ்வும் மலரட்டும்;
வாழிய வாழிய மீனகமே!!!
—————————————————————————
வித்யாசாகர்
கவிஞரே, அடடா… அற்புதமான சொல்லோட்டமும், கருவும். கவிதையில் கவிதையைத் தேடுவேன்.. பலநேரம் கிடைப்பதில்லை. வெறும் வார்த்தை ஜாலங்கள் தென்படும் அல்லது சொற் சிலம்பாட்டம் கண்ணில்படும் அல்லது உடைத்துப் போட்ட உரைநடையைக் காண்பேன். உங்கள் வரிகளில் வெறும் வாழ்த்துப்பாவைக் காணவில்லை. இன்னும் என்னவோ தெரிகிறது. ஆனால் முற்றுபெறாத எண்ணமும் எழுகிறது. இது சொன்ன வரிகளுக்கு மேல் நனவோடையாகத் தொடர்ந்திருக்க வேண்டும்.
LikeLike
உங்களின் பார்வையில் கவிதையயாய் கனிந்து விட்டது இவ்வாழ்த்து மடல் சகோதரர். உங்களின் பார்வை மலர்கள் பட்டதில் என் எழுத்து உலகின் நீள பயணம் அத்தனை கடினமாக தெரியவில்லை.. உலகை வெல்லும் ஒரு பலம்; உங்களை போன்றோரின் அன்பில் வாழ்த்தில் கிடைக்கிறது சகோதரர். மிக்க நன்றி!!
LikeLike
Very nice!! Really good wrietten!!!!!!!!!!!!!!!
LikeLike
மிக்க நன்றி.. வெங்கட்.. (என்னை நானே அழைத்துக் கொள்வது போலுள்ளது..)
LikeLike