காற்றின் ஓசை (12) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது..

வாழ்வின் தடங்கள் புரிவதேயில்லை சிலநேரம். நாமொன்று நினைத்து அதுவொன்றாகி நினைவுகளாக மட்டுமே மீதமுறும் பல தருணங்கள் நம்மை அவ்வப்பொழுது நினைத்து அசைபோட வைத்து, ஒரு கட்டத்தில் எல்லாம் வெறும் மாயை போலென்று எண்ணி ஞானம் முத்தியதாய்; ஓர் அலுத்த கட்டத்தை அனுபவ பாடஉணர்தலை எல்லோருக்குள்ளுமே ஏற்படுத்துவதாக தான் நம் வாழும்நிலை நமக்கமைகிறது.

வெகு ஒருசிலரே அந்நிலையிலிருந்து மாறி நகரும் நிகழ்வுகளை அலுக்காமல் அவைகளை தனக்கான ஓர் பாடமாக்க எடுத்துக்கொண்டு தன் வாழ்க்கையின் மூலம் வாழ்தலை பிறருக்கு உணர்த்தி; ஓர் நல்ல வழிகாட்டியாகவும் நாளைய வரலாற்றிற்குரிய இன்றைய சிறப்பாகவும் வாழ்ந்து முடிக்கிறார்கள். மாலனும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழவே எண்ணினார்.

தான் விரும்பும் பொருள்களை எப்படி தனதாக்கிக் கொள்கிறோமோ அதுபோல் பிறர் உணர்வுகளையும் மதிக்க தவறக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தார். தன் ஒவ்வொரு செயலிலும் பிறருக்கான பாதிப்பினை பிறரின் மனவருத்தத்தினையும் எண்ணி எவரும் தன்னால் வருத்தத்திற்கு ஆளாகவேண்டாமென்பதில் அவர் கொண்ட சிரத்தை அவரின் செயல்களில் மிகையாய் தெரிந்தது.

தன்னை பிறர் நோவாதளவிற்கு எத்தனை பக்குவப்படுத்த வேண்டுமோ அல்லது குறுக்கிக் கொள்ளவேண்டுமோ அத்தனை அடுத்தவர் நலன் கருதி தன்னை விஸ்தாரித்தும் கொள்ளவேண்டுமென்று அடிக்கடி சொல்வதோடு நில்லாமல் அப்படி வாழவும் முயற்சித்துக் கொள்கிறார்.

தன் வருமானத்தை விரிவுபடுத்திக் கொண்டால் மட்டுமே பிறருக்கு உதவமுடியுமென்று தன் கடின உழைப்பினால் பல சுயவருமானங்களை ஏற்படுத்தி அதன் மூலம் வரும் வருமானத்தில் கூட நான்கில் ஒரு பாகம் தன் தாய்தந்தை மற்றும் மனைவியின் பெற்றோர் நலனுக்காவும், ஒரு பாகத்தை தன் குடும்பநல முன்னேற்றத்திற்காகவும், இன்னொரு பாகத்தை பிள்ளைகளளின் எதிர்கால சேமிப்பிற்காகவும், மீதமொரு பாகம் சமுகத்தின் ஏழ்மை நிலையகற்றும் முயற்சிக்ககென்றும் தன் வாழ்தலை சமூகத்தோடு இனைத்தே வருகிறார் மாலன்.

கடவுளென்னும் ஒரு சக்தியின் மீது கொண்ட நம்பிக்கையினால் தான் அடைந்த நலன்களையும், கடவுள் மேல் தான் கொண்டுள்ள பக்தியின் ஆழம் ‘தனக்கு போதித்த போதனைகளையும், தனக்கு அருளிய செல்வாக்கினையும் பிறருக்கும் கிடைக்கப்பெற அதிகபட்ச அக்கறை கொண்டார். கடவுள் நம்பிக்கையினை வெறியின்றி ஏற்படுத்திக் கொள்ள, மனிதனின் பண்பு குளையாது பிற உயிர்கள் வருந்தாமல் வளர்த்துக் கொள்ளப் பரிந்துரைத்தார்.

அவரை பொருத்தவரை, ‘பிறரை நோவாத பக்தியே ஞானம் என்பது அவர் கணிப்பு. கடவுள் என்றொரு சக்தி இருப்பதாக நம்புவதில் ஒரு ஆன்ம திருப்தியையும் பிற பலனையும் உணர்ந்தாலும், நகரும் பொழுதெல்லாம் அவன் செயலென நகர்ந்து அக்கடவுளின் அதிர்வுகளை ஆத்மார்த்தமாக உள்வாங்கினாலும் ‘யாரிடத்தும் கடவுள் பற்றிய வாதம் செய்வதில் பயனில்லை என்பதனை முடிவாக கொண்டிருந்தார். அது ஒரு நம்பிக்கை மட்டுமே. நம்பிக்கையை நம்புவோரிடத்தில் ஏற்படுத்தலாம், எவரிடத்தும் கட்டாயப் படுத்துதல் முறையில்லையென்பது அவரின் இன்னொரு குறிக்கோளாக இருந்தது.

அதேநேரம், வெறுமனே வெடுக்கென பிடிங்கிய உயிர்போல கடவுளில்லை என்று சொல்லுமொரு நன்றியற்ற செயலை தான் செய்து விடவேண்டாமே என்பதில் கவனாமாகவும் இருந்தார். ஆயினும், இன்று கடவுள் உண்டென்பதை மீறி, தான் எண்ணிய வண்ணமெலாம் வணங்குதல் கடந்து, அதற்காக போட்டியுமிட்டு பிறரை நிந்திக்கவும் செய்யும் மனிதரின் மனவோட்டத்தை மாற்றும் வண்ணம், தான் வணங்கும் கடவுளிற்குரிய பக்தி நெறியின், வழிமுறைகளின், காரணகாரணி என்ன என்றெல்லாம் சிந்தித்து, அதை பிறருடன் பகிர்ந்தும் கொண்டால், அந்த கடவுளின் மீதான ஒரு வெறி அகன்று பக்தி மட்டுமே மிச்சமாகுமோ என்றொரு ஏக்க எதிர்ப்பார்ப்பும் அவருக்கிருந்தது.

அங்ஙனம் தன் சிந்தனைகளை தன் கடவுள் சார்ந்த அனுபவங்களை தான் அறிந்த உணர்ந்த ரீதியில் மட்டுமே திருமேனியன் மற்றும் அவரோடு வந்த பிற தோழமைகளிடத்தும் பகிர்ந்து கொள்கிறார்.

திருமேனியனும் அவரோடு வந்தவர்களும் அவரோடு பேசி பேசி ஒன்றி நட்புற்று முழுதும் தன்னை அவரின் மனநிலைக்கே ஆட்படுத்திக் கொண்டவர்களாக ஆக்கிக் கொண்டனர். அந்நிலையில் மதிய உணவையும்முடித்து காற்றாட அமர்ந்து கடவுள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் நிறைய பேசுகிறார்கள் அவர்கள்.

“எங்க எங்கயோ பேசி எங்க எங்கயோ வந்துட்டோம் பாருங்க சாமி..”

“ஆமா.. பேச ஆயிரம் விஷயம் இருக்கு.. இப்படி வாக்குவாதம் இல்லாம பேசி புரிந்து கொண்டால் நிறைய பேசலாம் நிறைய புரிந்து கொள்ளலாம், நான் ஊரில் கூட என் தோழர்களோடு பேச அமர்ந்தால் இரவெல்லாம் பேசுவோம். யாரும் யாரையும் வக்கிரமாக எதிர்கமாட்டோம், ஒருவரின் தகவல்களை ஒருவரோடு பகிர்ந்துக் கொள்வதே எங்களின் நோக்கமாக இருக்கும். தவறென்றால் கூட அப்படியல்ல அது இங்ஙனம் தவறு அலல்து இவ்வாறு சரியென்று தன் மாற்றுக் கருத்தை மணம் வலிக்காமல் சொல்வோம். நான் தான் சரியோ தவறோ பேசிக் கொண்டேயிருப்பேன்”

“அதலாம் சரியா தான் சாமி பேசுறீங்க..”

“இல்லல்ல, அது உங்க நம்பிக்கை. நம்பினோரோடு பேசுவது அலாதி. அதுக்காக நான் சொல்றதுக்கெல்லாம் நீங்க ஆமாம் போடனும்னு அவசியமில்ல, என் சிந்தனையை சொல்லசொல்லி கேட்குறீங்களே, அதுக்கே நான் நன்றி சொல்லணும்..”

“என்னங்கையா நன்றின்னெல்லாம் சொல்லி பிரிக்கிறீங்களே.., இவ்வளோ தூரம் நம்ம சமூகம் வாழனும் நம்ம தமிழ் ஜாதி நல்ல கருத்துக்களை வளர்த்துக்கணும்னு இவ்ளோ செயரீங்களே பெருசில்லையா?”

ஒருவர் சொல்லி நிறுத்த இன்னொருத்தர்.. “ஆமாமா எத்தனை நாடு எவ்வளவு மக்கள்னு பார்க்குரீங்களே உங்களுக்கு தெரியாததா…, நீங்க பேசுங்கையா”

“மாலன் சிரித்துக் கொண்டார், அப்படியல்ல இது, நான் சொல்வது எதுவுமே ஒரு முடிவான தகவலில்லை, தீர்ப்பு ஒன்றுமில்லை என்பதை கண்டிப்பா நீங்க புரிந்துக் கொள்ளனும். இது போல நீங்க சிந்தித்து அனுபவித்து ஆழமா அர்த்தமா உணர்ந்தீங்கனா; பிறகு எது உண்மையோ எது சரியோ அதை எடுத்துக்கலாம். அதுவரையும் கேட்டுக்கோங்க தப்பில்ல, அதுக்காக முழுசா இதுதான் வேதம்னு நம்பிடாதீங்க”

“உங்க மேல நம்பிக்கை இல்லாமையா சாமி இவ்வளோ தூரம் வந்து உட்கார்ந்து கேட்டுன்ருக்கோம்” திருமேனியன் குறுக்கிட்டார்

“அது வேற திருமேனியா, நம்பிக்கைன்றது வேற, இதுல நான் யாரயும் நம்பாதேன்றேன். யார் சொல்றதையும் ஏற்று நம்மை செயல்படுத்த வேண்டாம்றேன். எல்லாத்தையும் கேட்டு நாம ஒவ்வொருத்தரும் சிந்திக்க துவங்கனும்றது தான் என் வேண்டுகோள். இது என் அனுபவம், இதை வைத்து உன் அனுபவத்தை எடுத்துக்கோ..” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மாலினி வந்து எல்லோருக்கும் தேனிர் கொடுத்துவிட்டு குடிக்கும் வரை நின்று தேனிர் குவளையை வாங்கிக் கொள்ள மாலன் அவருடையதை மட்டும் திருப்பிக் கொடு என்று வாங்கிக் கொண்டார்.

“பரவாயில்லை நீங்க பேசிக் கொண்டிருங்க நான் கழுவிக்கிறேன்..”

“பரவாயில்லை மாலினி நானே கழுவிக்கிறேன், தேனிர் பிரமாதம், மதிய சாப்பாடு கூட குழம்பு கூட்டு பலகாரமெல்லாம் அற்புதமா இருந்தது சொள்ளமரந்துட்டேன்…”

மனைவியிடம் என்னவோ புதிதாக பேசுவது போல பேசுறாரேன்னு பார்த்திருப்பார்கள் போல் அவர்கள், என்னாச்சு, என்னடா பொண்டாட்டிய புகழறுனேன்னு பார்க்குறீங்களா..? சமையல் ஒரு கலை. அது யார் செய்து நல்லா இருந்தாலும் நல்லா இருக்குன்னு சொல்லிடனும். உழைப்புக்கு எப்பவும் அங்கிகாரம் தரனும். உழைப்பவர்களை பாராட்டனும்..”

“நான் நல்ல இல்லைனா பெருசா கண்டுக்கிறதில்ல சாமி, நல்லாருந்தா நல்லாருக்குன்னு சொல்லிடுவேன்..”

“அப்போ என் மனைவி சமைத்தது நல்லால்லன்றீயா……….?”

“அச்சச்சோ பிரமாதம், அருமையா செய்தாங்க அன்பா பரிமாறுனாங்க. நீங்களும் எங்க கூடவே சாப்பிட்டிருக்கலாமே ம்மா”

“அது முறையில்லை சகோதரா. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை நல்லா உபசரிப்பது நம் முக்கிய பண்பு. நான் என் வயிற பார்துன்ருப்பேன், நீங்க உங்களுக்கு என்ன தேவைன்னு சொல்லாம போதும்னு எழுத்ந்துட்டா நான் சமைத்ததுல உணவு பரிமாறினதுல ஒரு அர்த்தமே இல்லாம போயிடும்..”

“இதலாம் தான் நம் பெண்மணிகளின் சிறப்பு ஐயா, சற்று இருங்க வருகிறேனென்று கேட்டுக் கொண்டு அவர் குடித்த தேனிர் குவளையை அவரே சென்று கழுவி மாளினியிடம் கொடுத்து விட்டு மீண்டும் அவர்களோடு வந்து அமர்ந்துக் கொள்கிறார்.

“ம்ம்… சரி சொல்லுங்க.., என்ன பேசினோம்..? ஆங்.. .. கடவுள் பற்றி பெசினோமில்லையா.. சாமி இருக்கான்னு தானே கேட்டீங்க..”

“சாமிய விட மாட்டீங்க போலிருக்கே..”

“வேணாம்னா விட்டுடுவோம்.. வேற பேசுங்க..”

“இல்ல சாமி அவன் கிடக்கான் நீங்க சொல்லுங்க”

“வேண்டாம் திருமேனியா விருப்பமில்லாததை ஏன் வீணா பேசுவானேன்..”

“அப்படியெல்லாம் இல்ல சாமி நான் சும்மா அப்படி வாய்ல வந்ததை சொல்லிட்டேன் கொபிச்சிக்காதீங்க..நாங்க வந்ததே அதை பற்றி கேட்க தானே வந்தோம்..”

“மிக நல்லது ஐயா, உங்களிடம் கொபமென்ன சொல்றேன் கேளுங்க.. ”
திருமேனியன் அவர் பக்கம் திரும்பி உட்கார்ந்துக் கொண்டான், அவர் வாயசைவையே, முகபாவத்தையே என்ன சொல்ல வராரோ என்பதுபோல் பார்த்தார்..
————————————————————————————————————
மாலன் நிறைய பேசியிருக்கிறார் என்பதால் அதை இன்னொரு பதிவில் தனியாக பார்ப்போமே!!! அதுவரை ‘காற்றின் ஓசை’ – தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to காற்றின் ஓசை (12) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

 1. Thurairajah Chandran சொல்கிறார்:

  //தன் வருமானத்தை விரிவுபடுத்திக் கொண்டால் மட்டுமே பிறருக்கு உதவமுடியுமென்று தன் கடின உழைப்பினால் பல சுயவருமானங்களை ஏற்படுத்தி அதன் மூலம் வரும் வருமானத்தில் கூட நான்கில் ஒரு பாகம் தன் தாய்தந்தை மற்றும் மனைவியின் பெற்றோர் நலனுக்காவும், ஒரு பாகத்தை தன் குடும்பநல முன்னேற்றத்திற்காகவும், இன்னொரு பாகத்தை பிள்ளைகளளின் எதிர்கால சேமிப்பிற்காகவும், மீதமொரு பாகம் சமுகத்தின் ஏழ்மை நிலையகற்றும் முயற்சிக்ககென்றும் தன் வாழ்தலை சமூகத்தோடு இனைத்தே வருகிறார் மாலன்…..// கடின உழைப்பாளியாக இருந்தேனும்.. பிறருக்கு உதவ எண்ணும் மனசு வேண்டும்’ என்றது பிடித்திருக்கிறது..

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   நான் காணும் நிறைய பேர் இதில் ஒவ்வொன்றினை செய்கிறார்கள் துரைராஜா.

   பெற்றோரும் உற்றோரும் உறவும் உடனிருப்போரும் சார்ந்தோரும் சிறக்க வாழ்வதே வாழ்வென்று நமக்கு போதிக்கப் பட்டுள்ளது

   எல்லோரையும் நம்மால் முழுமையாக காத்திட இயலாவிட்டாலும் இயன்றவரையவது காத்துக் கொள்ள உழைப்பு தேவை தானே?

   ஆக, இல்லாதோரே உழைத்தேனும் பிறருக்கு கொடுப்பது சிறப்பெனில், உள்ளவர் பிறருக்கு உதவுவதென்பது எத்தனை முக்கியம்’ என்று உணரமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு தான்…

   விதைக்கவேண்டியது கடனென்று உணர்கிறேன்.. துரைராஜா, ஒன்றாவது விளையாதா…? விலையும் என்று நம்பிக்கை சொல்கிறது!

   Like

 2. Thurairajah Chandran சொல்கிறார்:

  உங்களின் நம்பிக்கை வீண் போகாது…

  Like

 3. lakshminathan சொல்கிறார்:

  என் இனிய நண்பர் வித்யா,

  இப்பல்லாம் கிராமங்களை விட நகரத்தில் தான் சாமி பக்தி அதிகமா இருக்கு, அதை நான் கண்கூட பார்க்கிறேன். அதே இடத்துல தான் நிறைய வழிபாடுகளும் இருக்கு அதேநேரம் கொலை கொள்ளைகளும் கூட நடக்கிறது.

  பாசத்திற்கு வரிசையில் நிற்ப்பவர் யாருமில்லை. சாமிக்கு மட்டும்ரெண்டு மூணு நாக்கால் கூட நிக்கிறாங்க.அதே சொந்தபந்தத்திற்கு பத்து நிமிடம் கூட செலவழிப்பதில்லை இவர்கள்.

  அம்மாப்பாவை பக்கத்துலருந்து பார்த்துக்க முடியலை, ஆனா வாரம் தவறாம பெருமாள் கோவிலுக்கு ஆஜர் ஆயிடுறாங்க.

  ஆனா இது எப்படியோ வித்யா, உங்களை மாதிரி, நெஞ்சங்களை நனைக்க வைக்கிற எழுத்தின் வளத்தினால் தான், பாசத் தெருக்கள் இன்னும் நீண்டிருக்கிறது.

  பிறகு சேது ஐயா, நண்பர் நிலவன், தம்பி, வீட்டினர் எல்லோரும் நலமா.. தெரியப் படுத்துங்கள்.

  எழுத்துக்கள் தொடரட்டும்!

  M.லக்ஷ்மி நாதன்

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   அன்புள்ள லக்ஸ்மி,

   உங்களை போன்றோரின் அன்பினால் எல்லோருமே மிக்க நலம். அதோடு உங்களின் விசாரிப்புகளை சேது ஐயா நிலவன் தம்பி மற்றும் குடும்பத்தாருக்கு சொல்கிறேன்..

   தவிர உங்களின் ஆதங்கம் நிறைந்த கருத்துகள் ஏற்கக் கூடியது லக்ஷ்மி. நாம் முன்பெல்லாம் இதுபோன்று நிறைய பேசுவோம். பகிர்ந்துக் கொள்வோம், நம் நடுத்தரமான எண்ணங்களை இம்மக்களின் மனதில் இருத்தத் தான் இந்த எழுத்துப் பயணமே..

   இப்படியே போவது போல் போனால் இவர்களை எல்லாம் திருத்த இன்னும் நூறு வருடம் ஆகும் போல்! அந்த அவர்கள் நம்பும் கடவுள் தான் அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கவேண்டும்!

   Like

 4. விஜய் சொல்கிறார்:

  வணக்கம்..,

  காற்றின் ஓசை (12) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்! படித்தேன்….எனக்கு பிடித்திருந்தது…காரணம்….எண்ணுல் ஒரு தேடல்…இந்த இயற்க்கையின்மேல் ஒரு தேடல் இருந்துக்கொண்டே இருக்கிறது..

  கடவுள் மதம் அப்பாற்ப்பட்ட தேடல்…உண்மைத்தேடல்..அதனால் இந்த ஆர்ட்டிகல் பிடித்த்ருந்தது…

  அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  விஜய்

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி விஜய். அந்த தேடல் தான் என்னையும் இந்த காற்றின் ஓசை எழுத வைக்கிறது. தேடல் உள்ளவருக்கு பசி எடுப்பவருக்கு உணவு கிடைக்கும்…, அடுத்த பதிவில் சந்திப்போம்!

   Like

 5. Pingback: காற்றின் ஓசை (13) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்! | வித்யாசாகரின் எழுத்து பயணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s