கவியரங்க தலைப்பு : “குடும்ப உறவுகளின் உன்னதம்”
அரங்கம் : ருசி உணவக வளாகம், குவைத்
நாள் : 01 – 10 – 2010, வெள்ளியன்று நடந்தேறியது
நடத்தி பெருமைசேர்தது : குவைத் தமிழோசை கவியரங்கம்
அன்பிற்குரிய பெரியோர்களுக்கும் கவிபாட வந்திருக்கும் என் உறவுகளுக்கும் வணக்கம்!
பாடி திரிபவர்களை எல்லாம் பாட்டிற்கு தலைவனாகவும், உடையவனாகவும் ஆக்கி வரும் தமிழோசைக்கு என் நன்றிகளை தெரிவித்து கவியரங்கத்து சபைக்கு மீண்டுமென் தாழ்பணிந்த வணக்கத்தை பணிக்கிறேன்;
உறவு பூத்த வாசலில் மனசெல்லாம் கோலமாகும்
கோலமிட்ட வீடுகளில்; உயிரெல்லாம் பசியாறும்
பிற உயிர் வாழ உயிர் வாழும் எம்மினமே; தமிழினமே
நீ ஒற்றை உதாரனம் போதுமென்பேன் –
குடும்ப உறவுகளின் உன்னதம் பற்றி சொல்ல –
நீ ஒற்றை உதாரனம் போதுமென்பேன் – மீதியை என்
கவிஞர் குழாம் பாடுமென்று சொல்லி – கவியரங்கத்திற்குள் நுழைகிறேன்!
————————————————————————————————–