கடவுள் பெயரில் அழிந்த மனிதத்தை
மீட்டு; மூடத்தை யொழித்த பெரியார்!
கருந்தாடி நரைப்பதற்குள் – ஒரு
காலத்தையே மாற்றிப்போட்ட பெரியார்!
என் தம்பிகளின் காலத்தில் – ஜாதிமதமற்று வாழ
என் தாத்தா காலத்திலேயே வழிசொன்ன பெரியார்!
கடவுளர்களைக் காக்க கடவுளை பழித்து
ஜாதியில் அறுந்த இதயங்களை –
காதலால் இணைத்து வாழ்வினை போதித்த பெரியார்!
காலச் சங்கிலியில் கட்டிப் போட்ட
கைம்பெண்களின் வாழ்கையை – மறுமணப் பந்தலிட்டு
வாழ்வை மல்லிகையாய்; கறுத்த மனங்களில் ‘தூவிய பெரியார்!
குடித்துவிட்டுவந்து அடித்த கணவனை
திருப்பியடிக்காவிட்டாலும் –
திருப்பியாவதுகேட்க தைரியம் தந்த பெரியார்!
பெண்ணியத்தை ஆண்களால் பேசவைத்து
பெண்விடுதலை உணர்வினை –
என் கிராமத்துப் மக்கள் அறிவு வரை எட்டவைத்த பெரியார்!
சுதந்திர..வேட்கையை விடுதலை உணர்வினை
கைஊனிய தடிபோலவே – கடைசிவரை
விடாது பிடித்திருந்தவர் பெரியார்!
சாஸ்திரம் சம்பிரதாயம்
ராகுகாலம் எமகண்டமென பெருத்துவிட்ட மூடத்தனத்தை
மொத்தமாய்கொட்டி பகுத்தறிவுதீயில்
அன்றே கொளுத்திட்டவர் பெரியார்!
ஜாதிக் குறும்புகளின் வெறும்போக்கினை
மதசண்டையின் வெறிப்போக்கினை
மனிதம் பாராத நிறம் பார்த்து வகைபிரித்த காழ்ப்புணர்வினை
ஆழக் குழிதோண்டி இன்றும் புதைத்துக்கொண்டிருக்கும்
நம் மூடசாபத்தின்; விடிவு பெரியார்!
—————————————————————————————————————–
வித்யாசாகர்
ஐஐஐஐ எனக்குத் தன் சுடு சோறு
பெரியார் இன்று வாழாமல் போயிட்டாரே கவலை தான்…
LikeLike
ஆம்; அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் வாழும் மதி.., நல்லவைகளை யாராலும் மறைக்கவும் அழிக்கவும் முடியாது, யெனில், அவர் மிக நல்லவராக எளியோரின் விடிவிற்காய் வாழ்ந்தவர்! என்றுமே அழியார்; பெரியார்!
LikeLike
மூடத்தை முடமாக்கிய பெரியாரை நினைவூட்டிய என் வித்யாவிற்கு நன்றி!!!
M.லட்சுமிநாதன்
LikeLike
மிக்க நன்றி லக்ஷ்மி,
இதற்கான பதில் மடலை உங்களுக்கு மட்டும் அனுப்புவதை விட ஒரு முக்கிய பதிவாக்குவதே நல்லது எனவே அதை நீங்கள் நம் “காற்றின் ஓசை (14) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்” எனும் அத்யாயத்தில் படித்துக் கொள்ளுங்கள்.
எனினும், அவசியம் கருதி முகநூலில் என் நண்பரிடம் பகிர்ந்துக் கொண்ட என் ஒரு கருத்தினை இங்கே பதிந்து வைக்கிறேன்.
/நல்லவை எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வோம். எதன் மோகம் சார்ந்தும் நான் இதை எழுதவில்லை, கடவுள் பக்தி மீறி என் ஊர் தெருக்களில் நடக்கும் வெறித் தனங்களை கூட என்னால் …மாற்றிட இயலவில்லை பார்த்திடவும் முடியவில்லை.
நீங்கள் எண்ணும் உண்மை பக்தியும் மதம் சொல்லும் நல்லவைகளும் வேறு, ஆனால் அதையே பணமாக்கி பலர் செய்யும் அட்டூழியங்களும், அதன் பால் அப்பாவி மக்கள் நம்பி ஏமாறும் கொடுமைகளும் தமிழகத்தில் இந்தியாவில் மிக அதிகம்.
நான் எதன் பெருமைகளையும் அவதூறு சொல்ல முன்வரவில்லை, தவறுகளை தவறுகளாக ஏற்பதன் மூலம் மட்டுமே திருத்திக் கொள்ளவும் வாய்ப்பேற்படும் என்று நம்புகிறேன்.
அமாவசை கிருத்திகை கூட போய் இப்போ அஷ்டமி நவமி இன்னபிற.. வந்துவிட்டது. தடுக்கி விழுந்தால் காலண்டரை தேடி அலைகிறது நம் உறவுகள். அவைகளை நாம் மெச்சுவதா? கடவுளின் நம்பிக்கைக்கும் இதுபோன்ற மூட நம்பிக்கைக்கும் காத தூர நஷ்டம் நம் வளர்ச்சிக்கு ஏற்ப்படும் இல்லையா? அது காலந் தொட்டிருப்பதை அன்றே மாற்ற எண்ணியவர் அவர் என்பதை ஏற்ப்பதற்கென்ன.
இதுக்கூட ஏதோ தனி நோக்கத்தில் எல்லாம் எழுதவில்லை. இங்கு குவைத்தில் ஒரு நிகழ்வு வைத்துள்ளோம். ஒரு வயதில் முதிர்ந்த பெரியவருக்கு அவர் சமுக அக்கறையை பாராட்டி விருது தர இங்கிருக்கும் பெரியார் நூலக அமைப்பு அவரை குவைத்திற்கு அழைத்து வருகிறது.
அவ்விழா மலரில் வெளியிட பெரியார் சிறப்பு பற்றி கவிதை கேட்டிருந்தார்கள் , எனவே அவரை பற்றி நான் அறிந்தளவில் என் நண்பர்களின் அன்பிற்கிணங்கி எழுதி கொடுத்துள்ளேன். அதை தான் இங்கும் பதிந்துள்ளேன்.
இதில் எங்கும் தவறிருப்பதாய் என் புத்திக்கு எட்டவில்லை. இந்த வயதிற்கே நம் வீடு நம் பிள்ளைகள் என்று தான் நம்மில் நிறைய பேர் அலைகிறோம். அந்த தள்ளாத வயதிலும், சாக்கடையில் இறங்கியவனை எல்லாம் சாக்கடையிலேயே தள்ளிவிடப் பார்த்த நேரம் அந்த சாமணியனையும் தோளோடு தோளனைத்து அவன் வாழ்க்கை அவன் முன்னேற்றம் என்று சிந்தித்த பெரியார் என்றுமே பெரியவர் தான்!
எதையும் யார் கண்ணோட்டத்திலும் பார்க்காமல் தன் நடுநிலை தன்மையோடு மட்டுமே பாருங்கள் உறவுகளே. அதோடு, இதை ஒன்றை எழுதியதால் நான் அவரை முற்றிலும் உணர்ந்தவன் அல்லது அவர் செய்தது முற்றும் சரி அலல்து தவறு என்று வாதாட எல்லாம் வரவில்லை. சரியை சரியாகவும் தவறை தவறாகவுமே எடுத்துக் கொள்வோம்/
LikeLike
அன்று பெரியார் பிறருக்காக செய்தவற்றையெல்லாம், இன்று நீங்கள் பெருமையோடு உரைக்கக் கேட்பது அருமையாக உள்ளது….
நன்றி
LikeLike
என் அன்பு தம்பிக்கு, நலமும் நலம் வாழ வாழ்த்தும். காலத்தை திருப்பிப் பார்த்தால் பாடம் நிறைய கிடைக்கும், நாமும் பார்த்து நிறைய தெரிந்துக் கொள்வோம். மிக்க நன்றிபா..
LikeLike