17 ஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி!

மாலதி வீரவணக்க நாள் – அக்டோபர் 10

ம் விடுதலை போருக்கு
நாங்கள் கொடுத்த கொடை –
எம் மண்ணின் வீரம் வரலாற்றில் நிலைக்க விதைத்த
முதல் தாய்விதை; மாலதி!

பெண்ணின் வீரம் இதுவென்று
சமரில் காட்டிய முதல் பெண்புலி; விடுதலைக்கு
கனவு சுமந்தோர் மத்தியில் – களத்தில் இறங்கி
உயிரை கசக்கியெறிந்த போராளி; மாலதி!

உயிர்போகும் பயத்தை கொண்று
தன் ஆயுதம் காக்க அதிகம் பதைத்தவள்;
மானம் காக்க உயிர்விட்ட தமிழச்சி போல்
மண்ணின் வீரம் சொட்ட உயிர் குடித்தவள்; மாலதி!

சைனைட் குப்பி கீழே சாயும் முன்
உடல் சாய்ந்து மண்ணை முத்தமிட்டவள்;
வல்லுறவு கொண்ட மனிதமிருகத்திடம்
தன் பெண்ணுறவை காக்க சபதமேற்றவள்; மாலதி!

ஆண்பெண் சமநிலை மலர இருபத்தியிரண்டு
ஆண்டுகளுக்கு முன்னரே முழக்கமிட்டவள்;
ஈழக் கனவை இருபாலருக்கும் ஒரு கனவாக்கி
அதற்குத் தன் உயிரையும் உரமாயிட்டவள்; மாலதி!

பெண்கற்பை சூறையாடும் கயவர்களை யொழிக்க
நடு சாமம் நடுத் தெருவில் காவல் காத்தவள்;
எதிரியை சுட்டுப் பொசுக்க ஏந்திய துப்பாக்கியில்
தன் கனவையும் லட்சியத்தையும் ரவையோடு சேர்த்து சுட்டவள்; மாலதி!

கலகலப்பாய் பூக்கும் பூவில் ஒரு பூவாய்
பூத்தவள்; அண்ணன் தங்கை உறவில் – உள்ளத்தை
உயிர்நார் கொண்டு கட்டியவள்; உலகவழக்கு
எல்லாம் மறந்து தன் மனவழக்கின் தீர்ப்பை ஏற்பவள்: மாலதி!

நாட்டுக்கொரு போர் நாளும் நடப்பதை
ஒற்றை நபராய் தடுக்க நினைத்தவள்;
கடைசி மண் காற்றில் பறக்கும் வரை
ஈழத்தின் உயிர்பூவாய் பூக்க உதிர்ந்தவள்; மாலதி!!
———————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to 17 ஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி!

  1. THANA சொல்கிறார்:

    மாலதியின் வீரம் நிரந்த போராட்ட வரலாற்றை நான் படித்தபோது நான்பெருமிதம் கொண்டேனே தவிர கவலை கொள்ளவில்லை.இந்த நாளில் மாலைதி நினைவு சுமந்த கவிதை தந்தமைக்கு நன்றிகள் வித்தியாசாகர். அத்துடன் என் அஞ்சலியையும் சமர்பணம் செய்கின்றேன்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சகோதரர். நம் வீரர்களை பார்த்து நாம் பெருமிதம் கொள்ளுமளவிற்கே ‘அவர்கள் தியாகதீபமாய் இன்றும் ஜொலிக்கிறார்களே தவிர நம்மை ஒருபோதும் வருத்தமுற வைக்கவில்லை. அவர்கள் பணியை அவரகள் மிகையியா சரியாய் செய்தார்கள், நாம் செய்யவேண்டியது தான் இன்னும் நிறைய மிச்சமிருக்கு போல்!

      Like

  2. THANA சொல்கிறார்:

    உண்மைதான்..

    Like

  3. Anu Ashok சொல்கிறார்:

    முதல் தாய்விதை; மாலதி பெருமை கொள்கிறேன்
    மாலதியாக இல்லையென சிறுமை கொள்கிறேன்!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஒவ்வொரு வீரர்களின் வரலாறினையும்
      ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும்
      இறந்தவர்களின் உயிர்ப்பினை உள்ளே மீட்டுவிட்ட
      விடுதலையின் உணர்வினை மிகையாய் கிளர்த்தெழவே செய்கிறது அணு..,

      இனி எவர்வந்து வழிகாட்டி என்ன நடத்தி என்று மீட்போமோ விடுதலையை? காலம் கையில் வைத்து அரசியலென்னும் விரல்களால் மூடிக் கொண்டுள்ளதே, அதை உடைக்கும் வரை; மூடியே கிடைக்கும் போல், ஓர் இனத்தின் சுதந்திரம்!

      தங்களின் இனப் பற்றிற்கு பெருமிதம் நிறையட்டும் அணு!

      Like

  4. Venkadesan சொல்கிறார்:

    இப்படியெல்லாம் வீர தீரத்துடன் போரிட்ட நம் சகோதர போராளிகள், போராட்டத்தில் சற்று பின்னடைவு பெற்றிருக்கும் சூழலில் சில விஷமிகளின் போராளிகளுக்கெதிரான பேச்சுகளைக் கேட்கும்போது உள்ளம் கொதிக்கிறது.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அதை அவர்களின் அறியாமை என்று எண்ணிக கொள்வோம் வெங்கட். சூழ்ச்சியினால் ஏற்ப்பட்ட பின்னடைவினை சூழ்ச்சியினால் வெல்லும் கோழையல்ல தமிழன். ஓர்தினம் அநீதிக்கான தீர்ப்பு தமிழனாலேயே வழங்கப்படும். அன்று அந்த அறியாமல் பேசிய வாய்கள் வெட்கித்து அடங்கும், கவலைபடாதீர்கள்!

      Like

  5. lakshminathan சொல்கிறார்:

    வித்யாவிற்கு காலை வணக்கங்கள்,

    மாலதி உண்மையாகவே ஒரு பெண் பிராபகரன் போல தான். ஈழ விடுதலைகாக போராடும் இப்போராட்டம் இன்னும் எத்தனை பிராபாகரர்களை காவு வாங்கினாலும் பிறகும் முளைத்துக் கொண்டே இருப்பார்கள் பிரபாகரர்கள்.

    தனி ஈழம் இல்லையென்றாலும், தனி மனித சுதந்திரம் கண்டிப்பாக இலங்கையில் நம் தமிழர்க்கு போக்கப் போகும் நாள் வெகு தொலைவிலில்லை.

    சில கவிதைகள் காதலை தூண்டும்

    சில கவிதைகள் நட்பினை தூண்டும்

    சில கவிதைகள் நரம்பை முறுக்கேற்றும்

    வித்யா, உங்களின் கவிதைகள் தான் தமிழனை எம்மூலை முடுக்கிலிருந்தாலும் தமிழனாய் இருக்கவைக்கும்!

    நன்றிகள்.. உளமார..

    M.லட்சுமிநாதன்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு வணக்கம் லக்ஷ்மி,

      தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மேச்சுதளுக்கும் மிக்க நன்றியாவேன். மாலதியை பற்றி அறிதலில் நமக்கும் அம்மக்களுக்கென ஏதேனும் செய்துவிட தொன்றிடாதா என்ற ஓர் எண்ணம், தமிழன் தமிழனாகவே இருத்தலில் ‘ எம் உறவுகள் காக்கப் படலாம் என்பது என் நம்பிக்கை. உங்களை போன்றோரின் உணர்வு பூர்வமான சிந்திப்பினால் ஆக்கப் பூரவாமான ஒரு எழுச்சி எழ இடும் வித்தும் அத்தகைய வீராங்கனையின் உயிர் தியாகத்தின் பதிவுமே இக்கவிதை லக்ஷ்மி!

      Like

பின்னூட்டமொன்றை இடுக