அடுப்பு எரிகிறது..
நான் வெளியே கூவிச் சென்ற
கீரைகாரரிடம் கீரை வாங்க வாசல் நோக்கி போகிறேன்
நீ அடுப்பினை பார்க்கிறாய்..
அடுப்பில் நெருப்பு சிவப்பாக கனன்று எரிகிறது
உனக்கு நெருப்பு அதிபுதிது
முதன் முதலாக இன்றுதான் அடுப்பின் சிவந்த –
நெருப்புத் துண்டுகளை பார்க்கிறாய்,
நெருப்பு சிவக்க சிவக்க – நெருப்பின் மேல்
உனக்கு ஆசை வருகிறது
நெருப்புத் துண்டங்களை ஒரு தின்பண்டம் போல்
பார்க்கிறாய் நீ..
திரும்பி வெளியே இருந்து வரும் என்னையும்
பார்க்கிறாய்
நான் கீரைவாங்கி உள்ளே வருவதற்குள்
நீ என்ன நினைத்தாயோ ஓடி –
நெருப்பை அள்ளி வாயில் போட்டுக் கொள்ள எண்ணி
விரைகிறாய்
நான் பதறி உன் அருகில் வருவதை கண்டு நீ
எங்கு நான் அந்து உனை தடுத்துவிடுவேனோ என்று
துருதுருவென ஓடி – ஒரு கை நெருப்பள்ளி…………………..
கை கருகிய வலியில் வாரி மேலெல்லாம்
இறைத்துக் கொள்கிறாய் –
நான் நெருப்பை சபிப்பேனா???
அடுப்பை சபிப்பேனா????
என் உயிர்; வலியில் கண்ணீராய் சொட்டி
பூமியையெல்லாம் நனைக்கிறது
நீ வாரியிரைத்த நெருப்பின் துண்டுகளை
மிதித்து கொண்டு உனைத் தூக்கிப் பார்க்கிறேன்
நெருப்பிற்கு நீ குழந்தையென்று தெரியவேயில்லை!!!!
——————————————————————————————–
வித்யாசாகர்
குழந்தைக்கும் நெருப்பை பற்றி தெரிவதில்லை. தன்னை பெற்ற தாய் நெருப்பை தொடுவதை கண்டு பதறுகிறாள் அந்த தாய்.
அருமை.
LikeLike
மிக்க நன்றி ரவி…
கவிதைகான ஒரு வருத்தமான காரணமுண்டு உறவுகளே..
இன்று காலை ஒரு வேலையாக அரசு அலுவலகம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். வேலை முடிந்து வந்து கீழே நிற்கையில் அப்பா அப்பா என்று அழைக்கும் குரல் கேட்டு எதிரே இருக்கும் அடுக்கு மாடியை பார்த்தே…ன். அதன் மூன்றாம் …மாடியின் கம்பிகளுக்கிடையே தலை கையெல்லாம் வெளியே விட்டு ஒரு குழந்தையும் (2 வயதிருக்கலாம்) இன்னொரு குழந்தை தவழ்ந்து அது போலவே அதன் பின் வந்து கம்பிகளுக்குள் தலை விட்டு பார்த்துக் கொண்டிருந்தது.
மனசு அப்படி தான் இறுகியது எனக்கு. நாம் அழைத்தும் சொல்ல இயலாது அது அரபிகளின் வீடு, பொதுவா இவர்களின் வளர்பே இப்படி தான் போல்; அதிக கவனமின்றி இருப்பதை நிறைய முறை கண்டிருக்கிறேன்.
குழந்தைகள் சாதாரணமாக கீழே விழுந்துவிட ஏற்ற மிக சுலபமான அமைப்பு அது. இப்படி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு என்ன செய்வார்களோ??!!!
ஒருவேளை தாய் ஓடி வந்து தூக்கிக் கொள்வாளா என்று சற்று நின்று பார்த்துக் கொண்டு சந்து முனை திரும்பும் வரை திரும்பி திரும்பி பார்த்துவந்தேன், திரும்புவதற்குள் பாப்பா என்றொரு சத்தம், அந்த குழந்தை என்னை பரிகசிப்பது போல் அழைக்கிறது. அப்பா என்று அழைத்தால் நான் உடனே திரும்பிப் திரும்பி பார்ப்பது அதற்கு வேடிக்கையாக இருந்தது போல்.
நான் தான் ‘கடவுளே என்று வேண்டிக் கொண்டே வந்துவிட்டேன். வேலைக்கு வேறு தாமதமாகி விட்டதால், ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது அக்குழந்தைகளுக்கு ஒன்றும் ஆயிருக்காது என்று, ஆனாலும் அது அவர்களுக்கு வாடிக்கை போல்!
LikeLike
நிச்சயமாக ஒன்றும் ஆகாது
LikeLike
நல்லது யூஜின். அப்படியே நல்லதையே நம்புவோம். நம்பிக்கை ஒரு காலத்தையே மாற்றிப் போடுகிறது! மிக்க நன்றி தங்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு!
LikeLike
hi vidya
neengal solvathu 100% unmaiyana visayam.
nan office visayamaga taiwan natirku vanthullen,katantha 4 natagalaka karivaril irupathi pol unarikeren
pasathiraka thaivapathil enaku terinchi tamilna than kari kidaukm meenatam thuichi kondirukeren
thavipu onru illienil ammavi kooda maraukum ulagil ethir vitu kulanithinal athangam erkum en vidya i ennal marakum mudiyathu
nandri vidya
M.Lakshminathan
LikeLike