ஒரு பிஞ்சிப் பூவில்
நெஞ்சு பூத்த சித்திரம் கண்டேன்,
நாக்குதட்டி தட்டி என் இதயம் – அதன் சிரிக்காத
சிரிப்பால் நிறையக் கண்டேன்,
சிப்பி திறந்ததும் முத்து சிரித்தது போல் – அந்த
சிறுவிழி திறந்து கருவிழி எனை காணக் கண்டேன்,
காற்றில் ஆடும் மலர்களின் மகரந்தமாய் – என்
பேச்சில் ஆடும் அந்த துள்ளும் துடிக்கும் கால்களை கண்டேன்,
அழைக்கும் செல்ல சப்தம் கேட்டு – இசைக்கும்
இமைக்கும் அதன் இமைகள் கண்டேன்,
குச்சி குச்சி விரலாலே – இதயம்
பிச்சி பிச்சி விரித்த அந்த அழகு விரல்களை கண்டேன்,
குயிலுக்கு மறந்த ராகம் போல – அதன்
கீச் கீச்சென்று கத்திய குரலை கேட்டேன்..
கிளிக்கு வாய்முளைத்த அழகாக – அதன்
குட்டி வாயில் அப்பா என்றழைக்க – இதோ
இன்னொரு தவமாக நீள்கிறது என் அன்பு மகளுக்கான காத்திருப்பு!!
வாழ்வின் கனவுகளில் – உண்மை சுமந்த
கனவாக மெய்கொள்கிறது சிலது மட்டுமே.
நான் வேண்டிக் கிடைத்த வரத்தில் மற்றொன்று, என் அன்பு மகள்.
என் தாய் எனை சுமந்த நன்றியை
என் மனைவி எனை தாங்கிய நன்றியை
என் சகோதரிகள் எனக்களித்த அன்பினை
என் தோழிகள் எனக்குக் கொடுத்த நட்பினை
என் தமிழச்சிகள் வாழ்ந்து சென்ற நல்வாழ்வின் சரித்திரத்தை
இனி அவளுக்காக சேர்த்து வைக்கிறேன் –
அவளின் காலடி பதிந்த என் நெஞ்சில் – இனி
பூக்கட்டும் இந்த பிஞ்சிற்கான ஆசைகள்…
————————————————————————-
வித்யாசாகர்
வாழ்த்துக்கள் நண்பரே .. அழகான கவிதை வாழ்த்து ..
LikeLike
மிக்க நன்றி உறவுகளே.. உங்கள் வாழ்த்துக்கள் எங்களின் வரமானது…
உண்மையில் மிக்க மகிழ்ந்தோம்..
உங்களை போம்றோரின் வாழ்த்துக்களும் வேண்டுதலுமே துணை நின்றிருக்கும் போல்; பொதுவா முதல் பிரசவம் அறுவை சிகிச்சை செய்து எடுத்தால் அடுத்ததும் அப்படியே எ…ன்பார்கள். ஆனால், முதல் குழந்தை முகில் அப்படித் தான் பிறந்தான் என்றாலும் உங்களனைவரின் அன்பின் பற்றினால், பெரியோரின் ஆசிர்வதங்களால், கடவுளின் அருளால் இம்முறை சுகப் பிரசவமாகவே நடந்துள்ளது. எனவே அதுபோல் உள்ள சகோதரிகள் யாரேனும் இருந்தால் சுகப் பிரசவமும் நடக்கலாம் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்!!
எல்லோருக்குமான நன்றியுடனும் பேரன்புடனும்… உள்ளம் நிறைகிறேன்.. உறவுகளே!!!
LikeLike
அன்பு நண்பர் வித்யா வுக்கு `…………
ஓர் தந்தையின் உச்சக்கட்ட வர்ணிப்பு ………………..
நன் இன்னும் திருமணம் முடிக்கவில்லை ஆனாலும் குழந்தைகளை பார்க்க கொள்ளை ஆசை பெண் குழந்தை என்றால் சொல்லவே வேண்டாம் பக்கத்துக்கு விட்டு பிள்ளை கருப்பாக கரு கரு என்று இருக்கும் அதை நன் தூக்கி வைத்து கொஞ்சி விளையாடுவேன் ……பின்பு என் தங்கையின் குழந்தை அதை தூக்கி பார்க்க ஆசை பட்டேன் முடியவில்லை …..
காரணம் நான் வெளிநாடு வந்து விட்டேன் ……
இப்போது உங்களின் கவிதையை பார்த்தவுடன் மீண்டும் அந்த பழமையான இணிய நிகழ்வுகள் மனதிற்கு வந்தது
” பெண் குழந்தை ஒரு வீட்டின் முதல் செல்வம் ”
முகமது நபி (ஸல்) அவர்கள் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது
வாழ்த்துக்கள்
அன்புடன் ச. நூருல் அமீன்
LikeLike
நல்வாழ்த்துக்கள் ஐயா..,
குடும்பம் தாங்க தங்கமகள் வந்தாள்.., கோடி கோடி மகிழ்வினை தந்தாள்.., குலமாதர் தாய் உருவில் சிரித்தாள்.., மனம் நிறைந்த தமிழ் கூறும் சரஸ்வதியாய் பிறந்தாள்!!
உ.கு.சிவக்குமார்
(தலைவர்) குவைத் ‘ தமிழோசை கவிஞர் மன்றம்’
குவைத்
LikeLike
அன்புடையீர்,
வணக்கம். நலம்தானே!
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்
தருணங்கள் வாய்ப்பதும்,
மகிழ்ச்சியை தேக்கி திளைப்பதும்,
அதற்கான
கனிந்த காலங்களை
நினைவுகளாய் அசைபோடுவதும்,
என்னே ஆனந்தம் வித்யாசாகர்..
உங்களுக்கு மகள் பிறந்திருக்கிறாள்
என்பது,
அதை வெளிக்காட்டிய விதம்,
‘தமிழச்சிகள்’ குறித்த தங்கள் பதிவு..
என்னைக் கவர்ந்தது.
உங்கள் மகிழ்ச்சியோடு
எங்களின் மகிழ்ச்சியும்..
இனிய வாழ்த்துக்கள்.
இல்லம் நிறையட்டும்
இனிய நிறைவு.
கவிஞர். வதிலைபிரபா
தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
ஆசிரியர், மகாகவி மாத இதழ்
LikeLike
என் அன்பு அண்ணா மிக்க சந்தோசம்
குட்டி தேவதையே நீ பூமியில் வந்து உதித்த நாளே அழகான நாள்
நீ காலம் எல்லாம் பெற்று சீறும் சிறப்புடன் வாழ என் வாழ்த்துக்கள் சின்ன தேவதையே
LikeLike
வாழ்த்துக்கள் வித்யாசாகர்!!
LikeLike
வண்ண நிலவு வையகம்
வந்துதித்த சேதி கண்டே
எண்ணமெல்லாம் இன்பவெள்ளம்
என்னினிய நண்பன் மகிழவெண்ணியே
முகிலுக்குத் தங்கை கிடைத்ததாலே
முப்பொழுதும் போதாதே விளையாட
அப்பா அம்மா அண்ணன் அணைப்பினிலெ
பாப்பா திளைப்பாள் மகிழ்வினிலே!
LikeLike
ஆசைக்கொன்றும், ஆஸ்திக்கொன்றும் வாழ்த்துகள் வித்யாசாகர். தாயும் சேயும் அப்பாவும், அண்ணாவும் அனைவரும் நலம் வாழ இறையருள் கிட்டட்டும். நல்வாழ்த்துகள்.
LikeLike
வாழ்த்துக்கள்
LikeLike
oru pen kidithathinal nee kanavanai anayai
maru pen kidithathinal nee mamanar anayai
mothaithil nee valkiyel nirikudam anayai
valthukkal petra thaikum,pirantha seikum
sirakatum,sirataikatum vidawin valkai
nandri,
m.lakshminathan
LikeLike
அருமையான கவிதை… வாழ்த்துக்கள் தோழரே…. நீங்கள் அனைவரும் நலமாய் வாழ என் பிரார்த்தனைகள் உங்கள் வலமிருக்கும்…
LikeLike
வாழ்த்துக்கள் நண்பரே, தங்களின் மகிழ்ச்சியை எம்முடம் பகிர்ந்தது அதிலும் மகிழ்வே, தாங்கள் குடும்பம் பார்போற்றும் குடும்பமாக வளர எல்லா வல்ல இறைவன் துணைபுரிவாராக..
LikeLike
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வித்யா:)))))))))))))) செல்லம்மாவிற்க்கு வாழ்த்துக்களும்,குட்டி செல்லத்திற்கு அன்பு அரவணைப்பும்
LikeLike
கவிதையின் மொழியில்
கற்கண்டின் இனிப்பில்
பட்டுப்பூவின் மகிழ்வில்
பூரித்து நிற்கின்றது வரிகள்…….
வீட்டில் ஒரு குழந்தையின் சிரிப்பும் மழலை மொழியும் தத்தி தவழ்ந்து தளிர் நடை நடந்து கொஞ்சும் மொழியில் பட்டுப்பூவின் கொண்டாட்டங்கள் எங்கள் எல்லோர் மனதினை நிறைக்கிறது வித்யா…
தாயும் சேயும் நலமுடன் இருக்க தந்தையும் அண்ணனும் மனம் மகிழ்ந்திருக்க இதோ இந்த அன்பு அத்தையின் அன்பு பிரார்த்தனைகளுடனான அன்பு வாழ்த்துக்கள்பா…
LikeLike
வாழ்த்துக்கள்
அகில்.
LikeLike
அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் மகிழ்ச்சி செய்தி கிடைத்தது.
தங்கள் புதிய மகள் வாழ்வும் வளமும் சிறக்க முத்துக்கமலம் குடும்பத்தினரின் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தேனி.எம்.சுப்பிரமணி.
ஆசிரியர்,
முத்துக்கமலம் இணைய இதழ்.
LikeLike
வானில் நட்சத்திரங்களாய் மனதில் மின்னும் அன்புள்ளங்களின் வாழ்த்துக்களால் மின்மினி போல கண்களை சிமிட்டி சிமிட்டி பார்த்துக் கொண்டிருக்கிறாள் மகள் உறவுகளே…
மகள் பிறந்தால் தங்கை தான் பிறப்பால் வித்யா என்று தான் பெயர் வைப்போம் என்று தவம் ஏற்று பெற்றதால் வித்யா என்றே வைத்தோம் ஆயினும், தமிழில் இனிக்க இனிக்க அழைக்க “பொற்குழலி” என்று வைத்துள்ளோம்!
தங்கள் அனைவரின் அன்பும் தூர நின்று மனதிற்கு நெருக்கமான பலத்தை கொடுத்ததில் குடும்பத்தோடு மிக்க மகிழ்ந்தோம்!
LikeLike
முகிலுக்கே மேடை தரக் காத்திருக்கும் தமிழோசைக்கு இன்னொரு வித்யா எனும் “பொற்குழலி” வந்துவிட்டாள்..
தமிழோசையின் மொத்த அன்பு இதயங்களுக்கும் மிக்க நன்றி சிவகுமார் ஐயா..
LikeLike
விஷ்ணுவின் அன்பில் திளைக்க எங்கள் வீட்டில் இன்னொரு நிலவு பூத்து விட்டதில் குவைத்திலிருந்து உலகின் எல்லை வரை நீள்கிறது மகிழ்ச்சியின் திரள்!!
மிக்க நன்றி தங்களின் அன்பான முதல் வாழ்த்திற்கு விஷ்ணு!!
LikeLike
//பெண் குழந்தை ஒரு வீட்டின் முதல் செல்வம்//
சரியாக சொன்னீர்கள் அமீன்..
பெண் குழந்தை தான் பிறக்கும் என்று முதலே எதிர்பார்த்தேன், பெண் எனில் தங்கை பிறப்பால் என்றொரு எதிர்பார்ப்பு. இருந்தாலும் முகில் தன் அன்பில் வாழ்வின் அர்த்தத்தை போதித்தான்.
இப்போது விரும்பியவரே ஒரு தேவதை வீட்டை நிறைத்துள்ளாள். ஏற்கனவே வீட்டில் மூன்று தேவதைகள் உண்டு. என்றாலும் வித்யா என்று மீண்டும் அழைக்க ஒரு அரிய வாய்ப்பினை தந்த வரமிது அமீன்.
கவலை படாதீர்கள் உங்களின் அன்பு மனதிற்கு ஏற்ப உங்களுக்கும் திருமணமான பின் ஒரு பெண் குழந்தையேனும் பிறக்கட்டும்!!
மிக்க வாழ்த்துக்களும் அமீன்..
LikeLike
அன்பு வணக்கம் சகோதரர் பிரபா,
என்ன தான் உயர்ந்தாலும் அன்பினால் தாய்க்கு பிள்ளைபோல் நட்பிற்கு நண்பர்களும் அன்பில் இணை பிரியா சகோதரர்கள் தான் நாம் என்பதை நினைவு கூர்ந்தீர்கள்.
தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றியும் அன்புமானோம்!!
LikeLike
எங்கள் அன்பு தேவதை பாமினி தங்கைக்கு நன்றி!!
மிக்க நன்றிமா. உங்களை போன்ற எண்ணற்ற அத்தைகள் அந்தம்மாவிற்கு. எல்லாம் அத்தைகளின் அன்பாலும் குட்டி தேவதை அழகா தூங்குது.. மா..
LikeLike
மிக்க நன்றி ராதா…
எங்கு எந்த மூலையிலிருந்தாலும் மகிழ்வின் போது மனதார வாழ்த்தும் உங்களின் பெருமிதம் போற்றத் தக்கது ராதா…, வெகுநாட்களுக்குப்பின் உங்களின் அன்பினை மீட்டுத் தந்த பெருமையும் நம் வித்யா எனும் “பொற்குழலி”யை சாரும்..
LikeLike
நிலா……
உங்களெல்லோரின் அன்பு தான் இந்த வித்யா போன்றோரின் பலமே..
என் நம்பிக்கையும் உங்களின் நம்பிக்கையான வாழ்த்தும் இன்னொரு வித்யாவை தந்ததில் – எல்லோரின் பாசத்தையும் அந்த குட்டி முகத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நிலா…
மிக்க நன்றி.. தோழி!!
LikeLike
மிக்க நன்றி அன்பு வேதா சகோதரி, வீட்டில் சகோதரருக்கும் நம் அன்பினை சொல்லுங்கள். வித்யா பிறந்ததை பற்றி சொல்லுங்கள்.. உங்களை போன்றோரின் வாழ்த்தினால் நாங்களெல்லாம் மகிழ்வாகவே இருப்போம்… (பெருங்) குறையின்றி!!
LikeLike
மிக்க நன்றி கார்த்தி..
என்னதான் வாழ்வின் வதைகளில் திரிந்தாலும் பிறர் நலம் கண்டு வாழ்த்த தயங்காத மனசு தான் நம் பேறு வெற்றிகளின் காரணம் போல் கார்த்தி!!
LikeLike
மிக்க நன்றி என் அன்பிற்குரிய லக்ஷ்மி..
பெண்மை நம் பெருமையின் வாழ்வின் இன்பதுன்பத்தின் வெற்றி தோல்வியின் அனைத்தின் மூலக் காரணமும் தான் லக்ஷ்மி, அது எனக்கு தாயாகவும் தாரமாகவும் தோழிகளாகவும் சகோதரிகளாகவும் மகளாகவும் கூட நிறைவாகவே கிடைத்துள்ளது லக்ஷ்மி!
அதற்கான காரணம் உங்களை போன்ற நல்ல ஆண்களின் அருகாமையும் நட்பின் பாடமும் கூட இருக்கலாம்!
LikeLike
மிக்க நன்றி அமுதன்..
எழுத்தில் எனை ஈர்த்த சகோதர இதயமான உங்களின் வாழ்த்தும் அன்பும் குழந்தை வித்யாவை நலமாகவே வாழ்விக்கும் என்பது என் மனம் நிறைந்த எண்ணம்!
LikeLike
மிக்க நன்றி தமிழ், நட்பின் எல்லையிலிருந்து எழுத்தின் எல்லை வரை எனக்கான ஒரு அன்பு எனக்கான ஒரு மதிப்பு எனக்கான ஒரு உலகமென்று தந்து என்னை உயர்வு பெடுத்தும் உங்களை போன்றோருக்கே எல்லாம் புகழும் சமர்ப்பணம்!!
LikeLike
//Lalitha Murali வித்யாவின் வித்யா நல்ல பெயர்…குழந்தையின் கள்ளச்சிரிப்பில் எப்போதுமே ஒரு குதூகலம்..அம்மாவிற்க்கு என் வாழ்த்துக்கள் இரண்டாம் முறையாக பாட்டி ஆனதிற்கு என்று சொல்லிவிடுங்கள் வித்யா..உங்கள் சந்தோசத்தில் பங்கு பெற முடியவில்லையே என்று வருத்தமா இருக்கு…என் செல்ல மகளின் படத்தை விரைவில் அனுப்பி வையுங்கள் முடிந்தால்//
கண்டிப்பாக செய்கிறேன் லல்லி. எனக்காக அம்மா நிறைய விட்டுக் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு நேற்று ராகுகாலம் இப்போ குழந்தையை கொண்டு போகவேண்டாம் என்றார்கள். நான் அதலாம் ஒன்றுமில்லை என்று எடுத்து சொல்லி அவர்கள் பயந்த ராகு காலத்தில் இறை நம்பிக்கையோடு மகிழ்வாக வீட்டிற்கு குழந்தையை கொண்டு வந்தோம்.
இது போல் எண்ணற்றவை அம்மா மாற்றிக் கொண்டார்கள். எனவே அவர்களுக்காக ஒன்பதாம் நாள் தான் பெயர்வைத்து தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதை நானும் மதிக்க சம்மதித்தேன்!!
புகைப்பம் இன்னும் ஒரு வாரத்தில் இடுகிறேன் லல்லி!!
LikeLike
//கவிதையின் மொழியில்
கற்கண்டின் இனிப்பில்
பட்டுப்பூவின் மகிழ்வில்
பூரித்து நிற்கின்றது வரிகள்…….//
உங்கள் கவிதை போலவே இனிமையானவள் மஞ்சு.. அதனால் தான் பொற்குழலி என்று பெயர்வைத்தோம்..
உங்களை போன்ற அத்தைகளெல்லாம் உலகலாவி இருக்க அவருக்கென்ன குறை??!! அவர் உண்மையில் அன்பின் மகாராணி தான் மஞ்சு!!
LikeLike
அன்பான அகிலுக்கு மிக்க நன்றி.. என் சந்தோசங்களில் உணர்வுகளின் பகிர்தலில் பங்கு கொள்ளும் உண்மை தோழமை நிறைந்த உள்ளமான உங்களைபோன்றோர் தந்த வாழ்த்தின் வரம் அது வித்யா, அகில்!
பேரன்பு கொண்டேன்..
LikeLike
முத்துக் கமலம் குடும்ப உறவுகளுக்கு அன்பு வணக்கம்,
உங்களின் அன்பில் நனைந்து வாழ்த்தில் வெல்லும் சிறகு கொடுத்தது எழுத்து எனில், அதை மேலும் சிறப்பிக்க வலுவூட்டுவது இந்த செல்ல தேவதையின் பிறப்பும், அதற்கான உங்களின் அக்கறை மிகுந்த வாழ்த்தும் என்று எண்ணி மகிழ்கிறோம்!! மிக்க நன்றி சகோதரர்!!!
LikeLike
வாழ்த்துக்கள்!
“பொற்குழலி” அழகான பெயர் சொல்லும் போதே தமிழ் வாசம்…
இந்த அருமையான நேரம் பிறகு கிடைக்காது,அனுபவித்து விடுங்கள் குழந்தையுடன் ஆனால் தாயை மறந்து விடாதீர்கள்.
நட்புடன்..
கார்த்தியா .K
LikeLike
தாயை எவர் மறப்பார் கார்த்தியா. என் முதல் குழந்தை அவள். எங்களுக்குள் எந்த பிரிவு பேதமும் இல்லை. என் மகிழ்ச்சி எங்களுக்கானது.
செல்லம்மாவும் மிக்க நலம். அம்மா வந்துள்ளார்கள், அவர்களை விட இவ்வுலகில் வேறு எவரேனும் அப்படி பார்த்துக் கொள்வார்களா தெரியவில்லை அப்படி பார்க்கிறார்கள். என் சிறு வயதிலெனக்கு தலைசீவி முகம் கழுவி விட்டு, டேய் எட்டாச்சி சாப்பிடு வா, டேய் பன்னிரெண்டாச்சி சாப்பிட வா, டேய் எட்டு மணி ஆச்சு சாப்பிட வா என நேரத்திற்கு உணவு கொடுத்து நேரத்திற்கு குளிக்க பழகி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க சொல்லிக் கொடுத்தவைகள் இப்போது ‘அம்மா செல்லம்மாவிற்கு செய்வதை பார்க்கையில் நினைவுக்கு வருகிறது கார்த்தியா..
உங்களின் அனைவரின் வாழ்த்தினையும் அவருக்கும் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறேன், நானும் இருபது தினத்திற்கு வரை விடுப்பு எடுத்துள்ளேன்..
செல்லம்மாவையும் முகிலையும் பொற்குழலி எனும் வித்யாவையும் அம்மாவையும் பார்த்துக் கொள்வதே என் முதல் வேலை, இப்பொழுதெல்லாம் அவர்கள் அதிகம் உறங்குகிறார்கள்; நான் அதிகம் விழித்திருக்கிறேன்!!
மிக்க நன்றி கார்த்தியா..
LikeLike
அன்புள்ள வித்யாசாகர் மிகவும் ரசித்தேன் உங்கள் வரிகளை. இனிய வரவுக்கு என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்! தொடர்ந்து அவளுடனான பொன்னான நொடிகளைக் கவிதையாக வடியுங்கள்! வாழ்த்துக்கள் குட்டி தேவதைக்கு………தொடரட்டும் உங்கள் நொடிகள் இனிமையாய். ……
LikeLike
மிக்க நன்றியும் அன்பும் உரித்தாகட்டும் கல்யாணி..
அன்பும் அக்கரையும் கொஞ்சலும் ஆயுள் வரை நீளும்..
LikeLike
வாழ்த்துக்கள் அண்ணா. தமிழ் போல் சீரும் சிறப்புமாக செழித்து வாழ்க..
குட்டிப்பாப்பாவிற்கு பெயர் தேர்ந்தெடுத்தாகிவிட்டதா…?
LikeLike
ஆமாம்பா…
தனியறைக்கு கொடுத்ததுமே குழந்தைக்கு கையில் எழுதுகோல் கொடுத்து, காதில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்.. ‘ திருக்குறள் சொல்லி தங்கையின் பெயரான ‘வித்யா ‘ என்ற பெயரிலேயே அழைத்தாகிவிட்டது. என்றாலும், தமிழில் தித்திக்க அழைக்கவும் பெயர் வேண்டும், தவிர வீட்டின் விருப்பம் படி முதலெழுத்து பார்த்தும் வைக்க வேண்டுமென “பொற்குழலி” என்று வைத்துள்ளோம்!! (எனக்கு தனியாக தமிழில் பெயர் வைக்க இது ஒரு வாய்ப்பு..)
தங்களின் அன்பிற்கெல்லாம் மிக்க நன்றியானோம்பா…
LikeLike
வணக்கம் அண்ணா! ஆகா மிக்க மகிழ்ச்சி அண்ணா? அக்கா நலமாக இருக்கிறார்களா? மகளுக்கு என்ன பெயர் வைத்து உள்ளீர்கள். முகிலுக்கு இனி பொழுது போக்கிற்கு ஆள் வந்தாச்சு மகளுக்கு எனது வாழ்த்துக்கள் முடிந்தால் பின்பு படம் அனுப்பி வையுங்கள் அண்ணா நான் தற்பொழுது வேளையில் சேர்ந்துள்ளதால் அதிகம் கதைக்க முடிவதில்லை மன்னிக்கவும் நேரம் கிடைக்கும் பொழுது ஈ மெயில் அனுப்புகிறேன் நன்றி வணக்கம் அண்ணா
LikeLike
என் அன்பிற்குரிய செல்ல தம்பிக்கு, வணக்கம்பா.., உங்கள் அண்ணி மருமகன் மகள் மிக்க நலம் ரூபா. சுகப் பிரசவம். பெயர் வித்யா தான் என்றாலும், தமிழிலும் வைக்க வேண்டி ‘பொற்குழலி’ என்று வைத்துள்ளோம்..
நேரம் கிடைக்கும் போது பேசுங்கள்.. என் தம்பியின் அன்பிற்காய் காத்திருப்போம். சகோவிற்கும் சொல்லிவிடுங்கள்..பா
தம்பிக்கு நன்றி சொன்னால் கோபம வருமென்று தெரியும்!!
அன்புடன்..
அண்ணா
LikeLike
பொற்குழலி” மிக நல்ல பெயர்..
LikeLike
மிக்க நன்றி ராணி…
ரசித்து ரசித்து வைக்கும் ஆசையில் தான் அர்த்தத்தில் முரண பட்டாலும் “பொற்குழலி” என்றே வைத்துள்ளோம்..
LikeLike
பொற்குழலி! அழகான பெயர்!
நற்றமிழாம் நாயகியின் நட்பதனைப் பங்கிடவே;
சொற்றமிழாம் சுந்தரியின் சுகந்தன்னை பங்கிடவே
உற்றதமிழ் ஓண்டொடியின் உறவதனைப் பங்கிடவே
…பொற்குழலின் பேர்பூண்ட பேரெழிலாள் வந்துவிட்டாள்;
இனியென்றும் நடவாது எழுத்தின்பம் இரவெல்லாம்;
தனிமைசுகம் முடியாது தமிழின்பங் காண்பதற்கு!
கனிந்தநற் பூங்கரத்தால் கவிதையினை கிழித்திடுவாள்
முனிந்துநீர் முறைத்திடவே முடியாது; பாவலரே!
LikeLike
//நற்றமிழாம் நாயகியின் நட்பதனைப் பங்கிடவே;
சொற்றமிழாம் சுந்தரியின் சுகந்தன்னை பங்கிடவே
உற்றதமிழ் ஓண்டொடியின் உறவதனைப் பங்கிடவே
…பொற்குழலின் பேர்பூண்ட பேரெழிலாள் வந்துவிட்டாள்;//
//இனியென்றும் நடவாது எழுத்தின்பம் இரவெல்லாம்;
தனிமைசுகம் முடியாது தமிழின்பங் காண்பதற்கு!
கனிந்தநற் பூங்கரத்தால் கவிதையினை கிழித்திடுவாள்
முனிந்துநீர் முறைத்திடவே முடியாது; பாவலரே!//
மனதின் அன்பினை காட்டும் புகைப்படம் பதிந்து வைத்துள்ளீர்கள் உங்களின் முகநூல் பக்கத்தில், உங்களை போன்றோரின் அன்பும் வாழ்த்துக்களாலும் இனி எல்லாமே போற்ற தக்கதாகவே அமையும் போல் ஒரு மனம் நிறையும் பெரு நம்பிக்கை நிறைகிறது..
ஏதோ தனை அறியத ஒரு வேதியல் மாற்றம் நிகழ்வதற்கான ஒரு அதிர்வினை உங்களின் அனைவரின் அன்பும் வாழ்த்தும் தருகிறது..
உங்களின் வாழ்த்துக்களை இங்கும் பதிந்து வைத்தால் அது நாளைக்கு “பொற்குழலி” யின் பொக்கிசமாய் இருக்குமென கருதி பதிந்து வைக்கிறேன்…
மிக்க ரசித்தேன் சகோதரர், சிரித்தேனும் படிக்கையில். மிக்க நன்றி சகோதரர்…
LikeLike
உறவுகளோடு உறவாடும்
உன்னத இன்பம் உண்மையில் வேறேதிலும் உண்டோ
உற்றவளோடும் உடன் பிறந்தவர்களுடனும்
உனை பெற்றவர்களோடும், உன் பெற்றவர்களோடும்
உணர்வுள்ள தமிழர்களோடும்
உளமாற மகிழ்ந்திருக்க உன்
உடன் பிறவாத்தம்பியின்
உளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றென்றும் அன்புடன்
விஜய்
LikeLike
மிக்க நன்றியென் அன்பிற்குரிய விஜய்.. எங்கே காணோமே என் தம்பியை என்று எண்ணினேன். பாப்பா மிக்க நலம். அழகாக அது அசைக்கும் ஒவ்வொரு அசைவையும் ரசித்தவனாய் உள்ளேன்.. இரவில் கூட எழுப்பி விடுவாள்.. எழுந்து உடை மாற்றி தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருப்போம்.
பகலில் புதுமையாய் பாப்பாவை கொஞ்சுவது முகிலுக்கு மனோடிவை ஏற்படுத்தும், அவனும் குழந்தை இல்லையா, எனவே இரவில் தூக்கத்தை விட வித்யாவை கொஞ்சும் மகிழ்வு பெரும் மகிழ்வுப்பா.. விஜய்!
LikeLike
பொற்குழலி! அழகான பெயர்!
LikeLike
ஓ.. மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்… தங்களை போன்றோரின் அன்பில் செழித்து வருவாள் எங்களின் அன்பு மகள் பொர்குழலோடு..
LikeLike
வணக்கம் வித்யா இன்றுதான் புதிய மலருக்கான (வித்யா ) கவிதையை படித்தேன் மிக மிக அருமை வாழ்த்துக்கள் இவளவு தாமதத்திற்கு மன்னிக்கவும்
LikeLike
மடல் தாமதமாக வந்தாலும் மனதால் முதலாய் வாழ்த்தியவராயிற்றே; எங்களை இன்றுவரை வளர்த்துக் கொண்டிருப்பது உங்களை போன்றோரின் இந்த அன்பு தானே..
மிக்க நன்றி தங்களின் அன்பிற்கு..
LikeLike