காற்றின் ஓசை – 16 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது..

டேய்.. டேய்.. இங்க வா..”

“மேல பொண்ணுங்க நிக்குதுடா.”

“அதுக்காக லொடுக்குனு போய்டுவியா,..”

“பிகருங்க அழகா இருக்குடா..”

“கீழ இறங்கு,

“ஏன்டா?”

“இறங்குடா கீழ..”

“என்னடா செல்வம் இவன் இதுக்கெல்லாம் டென்சன் ஆவுறான்

“இங்க பார் ரமேசு நான் முன்னாடியே சொல்லியிருக்கேன், இந்த வீட்டுக்கு வெளியே யாரை வேண்டுமானாலும் பாரு, இங்க இருக்கவங்க எல்லாம் நம்ம அக்கா தங்கச்சிங்க மாதிரி. அதுக்கு சம்மதம்னா உள்ள வா இல்லைனா வெளியே போ……”

“மன்னிச்சிக்கடா மச்சி, பார்க்க நல்லாருந்துச்சிடா அதான்……….”

நாங்க நான்கைந்து பேர் மொரிசியசின் தமிழர் வாழும் பகுதியிலிருந்து வந்திருக்கோம். நான் இவர்களுக்கு முன்பே இவ்வீட்டிற்கு வந்தவன். இது தமிழின் வாசனை கூட தெரியாத மௌரிசியசின் ஒரு பகுதி. திவ்யாப்பூர் என்னுமிடம். இங்கு வட இந்தியர்கள் மிக அதிகம். அவர்களில் ஒரு குடும்பத்தில் பிறந்தவள் தான் ஆஷா.

பார்க்கும் அழகில் இதயம் சுண்டி
பேசும் அழகில் கிறுக்கு புகுத்தி
பக்கம் வரும் நெருக்கத்தில் – கண்மூடி நம்மை
காதலிக்கவைப்பவள்,

அவளை பார்க்கும் யாருக்கும்
காதல் செய்யலையா காதல் என்று
இதயம் துடிக்கும்..

துடிக்காவிடில், அல்லது அவளை ரசிக்கவாவது தோன்றாவிடில் அவன் ஒரு சராசரி இளைஞனாக இருக்க முடியாது. வேண்டுமெனில், கொட்டிக் கிடக்கும் அழகு அவளென்று மனசு ஒருமுறை துள்ளி, பிறகு ஐயோ தப்பு தப்பென்று எண்ணிக் கொள்ளலாம். அத்தனை அழகு ஆஷா.

உண்மையில் அவள் பெயர் ஆஷா இல்லை. ஒரு இஸ்லாமிய பெண்ணின் பெயர் எனக்காக ஆஷா என்று மாற்றப் பட்டது ‘சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி பூத்த கதை.

ஆஷாவிற்கு ஒரு அக்கா, மூன்று தங்கைகள், மற்றும் இரண்டு தம்பிகள் இருந்தார்கள். அந்த ஏழு பேரின் அட்டகாசத்தில் அந்த வீடே அதம் பறக்கும். ஆஷாவின் அப்பா ஊரின் சொல்லத் தக்க செல்வந்தர். அக்காலத்திலிருந்தே பேர்பெற்ற மொரிசியஸ் ஜமின்தார்களில் ஒருவர். தெரியாமல் வாசலில் நின்று பார்த்தால் கூட ‘கண்ணை பிடுங்காவிட்டாலும், ஏன் என்ன பார்க்கிறாய் கான்னை தொண்டிடுவேன் படவா போ’ என்று மிரட்டவாவது செய்யக் கூடியவர். ஆனால் அன்பின் ஆலமரம் அவரும் அவரின் மனைவி, நம் ஆஷாவின் தாயுமான சகீரா பானுவும்.

நான் எல்லாவற்றிலுமே அவளுக்கு கீழானவன். ஊரில், அப்பாவின் ஏழ்மை நிலை கண்டு பொறுக்கமுடியாமல், பெட்டி தூக்கி இத்தனை தூரம் அதாவது மொரிசியசின் அடுத்த கோடிக்கு வந்த எனக்கு பிரிவின் துயரை துடைத்து அன்பு காட்டியது இந்த அம்மா அப்பா அக்கா தங்கை தம்பிகள் என எல்லாமுமாய் இருக்கும் இந்த வீடு தான்.

இங்கு இந்த ஊருக்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. தமிழன் என்றாலே ஒரு எரிச்சலும் எதிர்ப்பும் கொண்ட மக்கள் இம்மக்கள். விட்டால் எங்கு நாம் வளர்ந்து போவோமோ என்று தட்டியே வைக்க முயலும் இவர்களுக்கு மத்தியிலும் நம் தமிழர் ஓடுவர் வேலைஎடுத்து செய்து வருகிறார்.

அவர் கேட்டதற்கிணங்க தான் ஊர் சென்று இந்த நாலு ரோடு ரோமியோக்களை பிடித்து வந்தேன். ஊரின் தெருக்களெல்லாம் வாலிபத்தை தொலைத்து திரிந்த இவர்களை இனியாவது கரைசேர்த்து விடமாட்டோமா எனும் நம்பிக்கை. நிறைய பேர் அங்கிருந்து வர தயார் என்றாலும் இந்த ரமேஷ் செல்வம் ரபிக் சுந்தர் என நால்வர் தான் சரியென்று பட்டது எனக்கு.

இவர்களுக்கு வரும்போதே சொல்லியிருந்தேன் இந்த வீடு என் தாய்வீடு மாதிரி என்று, ஆனால் வந்ததும் ரமேஷ் தான் வாலை அவிழ்த்துவிடப் பார்க்கிறான்.

ன்னொரு முக்கிய விஷயம் சொல்ல மறந்தேனே, ஆஷா என் நண்பர்களுக்கு மட்டுமல்ல, ‘அப்போது எனக்கும் புதியவள். நான் சென்ற மாதம் என் ஊர் செல்ல இருக்கையில் அவள் தம்பி அலி ஓடிவந்து என் கைபிடித்து நிறுத்தினான். ‘இன்று ஒரு நாள் தள்ளிப் போ, என் அக்கா வேறொரு ஊருக்கு படிப்பதற்காக சென்றிருந்தாள், உன்னை பற்றி சொன்னதும், உன்னைப் பார்க்க மிக ஆவலாகி விட்டாள், உன்னை பார்த்தே தீரவேண்டுமென்று ஓடி வந்து கொண்டிருக்கிறாள், அவளை பார்த்துவிட்டு தான் போக வேண்டும்’ என்றான். அதும் அவள் நான் ஊருக்குப் போகிறேனென்று தெரிந்துக்கொண்டு என்னை காண்பதற்காக ஒரு நாள் முன்பாக வருகிறாளாம்.

அங்கு ஊரில் எனக்காக காத்திருக்கும் அம்மா தங்கையை விட ‘இவள் ஒன்றும் அத்தனை பெரிதாக தெரியவில்லை. பயண சீட்டு மாற்ற முடியாதென சொல்லிவிட்டு எப்படியோ புறப்பட்டுவிட்டேன்.

ன்; அவள் ஏன் எனக்காக முன்கூட்டி வரணும்’ என்று தோணும், அதற்கும் காரணம் உண்டு. என் தங்கைகள் என்றால் எனக்கு கொள்ளை பாசம், உயிர்னு கூட சொல்லலாம். அதிலும் சின்னவள் என்னால் வளர்க்கப் பட்டவள். அவளை விட்டு ஒரு வருடம் பிரிந்திருந்தது இது தான் முதல் முறை. அவளை நினைத்து நான் அழுததிலிருந்து, பிறகு ஊர் போகிறேனேன துள்ளிகுதித்து மகிழ்ந்தது வரை, அவளுக்காக பார்த்து பார்த்து நானெடுத்த ஆடைகள், வளையல், கம்மல் என ஆபரணங்கள் வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கியதை’ இவ்வளவு பாசம் தங்கையின் மேலென்று ஆஷாவிடம் சொல்ல, அவள் பிரம்மித்து போனதல்லாமல், மேலே விளக்கனைத்து விட்டு கீழ்வீட்டில் நான் என்னென்ன செய்கிறேன் என பார்ப்பதும் பார்த்ததை எல்லாம் ஆஷாவிற்கு போன் செய்யும் போது சொல்வதுமென எனக்கான ஒரு கோட்டையை அவள் மனதிற்குள் கட்டிவிட்டவர்கள் இந்த அலியும் ஹினாவும் தான். அதன் விளைவு தான் இன்று நான் ஊருக்குப் போகிறேனெனத் தெரிந்ததும் அவள் ஓடி வருவதற்கான காரணமும்.

எப்படியோ ஊருக்கு சென்று ஒரு மாதம் தங்கிவிட்டு இன்று மீண்டும் இதோ வாசலில் முதல் அடி வைக்கிறேன். அந்த ஆஷாவை இன்று தான் நானும் முதன் முதலாய் பார்க்கப் போகிறேன் என்றாலும் அதை பற்றிய எந்த கூடுதல் உணர்வும் இன்றி நண்பர்களோடு நுழைகையில்தான் ரமேஷ் மேல்வீட்டின் தாழ்வாரத்தில் இருந்த பெண்களை பார்த்து அப்படி சொன்னான்.

முக்கியமான இன்னொன்றினை சொல்லவேண்டும், இந்த வீட்டை பற்றி. எங்கள் காதலின் பெயர்வைக்காத தாஜ்மகால் இது. மூன்றடுக்கு மாடி. மாடி என்றால் நம்மூர் மாதிரி இல்லை. வரவேற்பறை, பின் உள்ளே சென்றால் வராண்டா, வராண்டாவில் குழாய் கிளி கூண்டு எல்லாம் இருக்கும், வராண்டாவை தாண்டி போனால் வீடு என உள்ளே அறைகள் பிரியும். இதில் விசேசம் என்னவென்றால், கீழ் தளம் எப்படியோ அதே போல் கடைசி மேல் அடுக்கின் மூன்றாவது தளம் வரை ஒரேபோல பெட்டி அடுக்கினார் போல இருக்கும் வீடு.

இதில் வேற நடுவில் வராண்டாவில் ஒவ்வொரு தளத்திலும் கிரில் கம்பி இடப் பட்டு கீழிருந்து கடைசி மேல் தளம் பார்ப்பதற்கு ஏதுவாக திறந்தவெளியாக அமைக்கப் பட்டிருக்கும். கீழிருந்து நான் ஆஷாவை பார்க்கவும், மேலிருந்து அவள் என்னை பார்க்கவும் எங்கள் காதலுக்காக முன்னமே கட்டப் பட்ட வீடு இது. வெளியே வந்தால் நம் வீடு போல் வாசலில் திண்ணை இருக்கும். திண்ணையில் இருந்து நான் பார்த்தால் அவள் நடு மாடியின் போர்டிகோவிலிருந்து என்னை பார்ப்பாள்.

இதில்வேறு கட்டிடங்களுக்கு இடையே போகும் சிறிய குறுக்கு சந்தும் இருப்பதால் நான் தெருமுனை சென்று கடைசியில் திரும்பிப் பார்க்கும் வரை அவள் மேலிருந்து கைகாட்டி அனுப்ப வசதியாக இருந்தது வீடு.

ன்றும் அப்படித்தான், நாங்கள் தெருமுனை திரும்பி வீட்டின் அருகே வருவதற்குள் ஹினா எங்களை மாடியிலிருந்து பார்த்துவிட்டு ஓடிப் போய் உள்ளே வீட்டினுள் சொல்ல, எல்லாம் ஓடிவந்து இரண்டாவது மாடியின் தாழ்வாரத்தில் நின்று பார்த்துவிட்டு சரசரவென்று ஓடி வந்து வராண்டாவின் கிரில் கம்பிகளின் மீது நின்று கொள்ள, நாங்கள் உள்ளே வர, ஹினா எங்கள் அறையின் சாவி எடுக்க உள்ளே ஓடுகிறாள்.

ரமேஷ் ஒரு குழந்தை தனமானவன், ஆனால் அப்படி ஒரு குரல் அவனுக்கு. திரையின் எல்லாம் பாடல்களும் அவனுக்கு அத்துபடி, நான் திட்டவே அமைதியாக நின்றுகொண்டான் பாவம். ஹினா வீட்டிற்குள்ளேயே இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கி எங்களை வரவேற்றாள். இந்த வீட்டில் என்னை முதன் முதலாக கவர்ந்த பெண் ஹினா தான். என் தங்கையை பிரிந்து நானழுத கண்ணீரை துடித்த முதலாமவள். அப்போது எட்டாவதோ என்னவோ படித்துக் கொண்டிருந்தாள்.

ஹினாவிடமிருந்து எங்கள் அறை சாவியினை வாங்கிக் கொண்டு எல்லோரும் உள்ளே வந்தோம். வராண்டாவில் இருந்த கிளிகூண்டிளிருந்து மிட்டு கீச் கீச்சென்று கத்தி அதன் பங்கிற்கும் எங்களை வரவேற்றது. வராண்டா கடந்து எங்கள் அறை இருந்ததால், அறைவாசலில் எங்கள் துணிமணிகளை வைத்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தோம்.

நடந்து வந்த அசதி ‘அப்பாடா’ என்றிருந்தது. நொடிப்பொழுதிற்கெல்லாம் அலி மேலிருந்து இறங்கி ஓடி வந்தான். கையில் பழச்சாறு மேலிருந்து கொடுத்தனுப்பி விட்டு மேலே பெண்களெல்லாம் கூடி நின்றிருப்பது தெரிந்தது.

சும்மா பேச்சிக்கு நான் வேண்டாம் என்று சொல்வதற்குள் ரபிக் வாங்கி பாதியை குடித்தேவிட்டான். அதற்குள் மேலிருந்து ஹினா ஓடிவந்தாள் அவளொரு ஜாடியில் பழச்சாறு கொண்டு வந்தாள்.. ஏன் உங்களுக்கு கஷ்டம போதுமே என்பதற்குள், மேலிருந்து ‘பரவாயில்லை பழச்சாறு நிறைய இருக்கிறதென்று சொல் ஹினா’ என்றொரு குரல் வந்தது. யாரென்று சரியாக தெரியவில்லை, அநேகம் சபினாவோ அல்லது ரேஷ்மாவோ இருக்குமென்று நினைத்துக் கொண்டேன்.

“டேய்.. சந்திரா நீ ஒன்னு பண்ணுவியா..?”

“என்னடா..”

“கோபப் பட மாட்டியே”

“மாட்டேன் சொல்லு”

“மேல நிறைய பொண்ணுங்க நிக்குதுடா, எது இந்த வீட்டு பொண்ணு எது வேற வீட்டு பொண்ணுன்னு பார்த்து சொன்னியினா நாங்க மீதி பொண்ணுங்களை பர்த்துக்குவோம்ல”

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….. மெதுவா பேசு, மேல பாபாவுக்கு கேட்டா அவ்வளவு தான். அவுங்க முஸ்லிம், கான்பூர் காரங்க. இங்கயும் இந்திய பாரம்பரியம் மாறாம இருக்காங்க. பொண்ணு கிண்ணுன்னியினா வெட்டிடுவாங்க. வா உள்ள போலாம்

“டேய் மச்சி எங்கள தான் பார்க்கவேணாம்ற, நீயாவது மேல பாரேன்.., ஒரு பொண்ணு வந்ததுல இருந்து உன்னையே பாக்குதுடா”

“நீங்க நின்னு பாருங்க நான் போறேன்..” சந்திரா உள்ளே போக, அந்தப் பெண் ஆஷா தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள். எல்லோறும் சென்று துணிமாற்றி குளித்து சமையல் செய்து இரவு சாப்பிட அமர்கையில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுப்போனது. மெழுகுவத்தி கேட்டு மேலே குரல் கொடுக்கிறான் சந்திரா.

ஹினா மேலிருந்து கம்பிகளின் வழியாக ஒரு மெழுகு வத்தியினை போட எதேச்சையாய் அவன் நிமிர்ந்து மேலே பார்க்கையில் அதிர்ந்து போனான் சந்திரா..

——————————————————————————————–

வன் அதிர்ந்து போனதற்கான காரணம்.. நாளை – காதலாய் – காற்றின் ஓசை’ யாய் – தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to காற்றின் ஓசை – 16 – காதல் செய்யலையோ; காதல்!!

  1. C. துரை ராஜா சொல்கிறார்:

    //இங்கு இந்த ஊருக்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. தமிழன் என்றாலே ஒரு எரிச்சலும் எதிர்ப்பும் கொண்ட மக்கள் இம்மக்கள். விட்டால் எங்கு நாம் வளர்ந்து போவோமோ என்று தட்டியே வைக்க முயலும் இவர்களுக்கு மத்தியிலும் நம் தமிழர் ஓடுவர் வேலைஎடுத்து செய்து வருகிறார்//

    பிடித்த வரிகள்..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி துரைராஜா..

      யார் படிக்கிறார்கள் தெரியவில்லை, நீங்களாவது படிக்கிறீர்களே என்று தொடர்ந்து எழுதுகிறேன். இது என் கனவு நாவல் என்று சொல்லியுள்ளேன், எனவே என் கண்முன்னே கண்ணீராய் சிந்திய உயிரின் கதையும் இனி இங்கே நாவலாக நீளும்.

      இது வெறும்… காதல் கதை அல்ல, நடந்த சம்பவமும்..

      உண்மையும் பொய்யுமாய் நீளும் நம் வாழ்க்கை போல் நீள்கிறது நம் நாவலும்!!

      Like

  2. Inuvil இணுவில் ஸ்ரீ சொல்கிறார்:

    நான் இப்பகுதி மட்டுமே வாசித்துள்ளேன்,அதில் முன்னுக்கு தாய்வீடு என்று சொன்ன சந்திரா ,ஆஷா வை வர்ணிப்பது,அவள் மேலிருந்து கீழும் இவர் கீழிருந்து மேலும் பார்க்கக்கூடிய வகையிலமைந்த தாஜ்மகல் என்றெல்லாம் வருகிறது,தங்கையை காதலிக்கும் அண்ணன் என்கிறீர்களா,அல்லது முஸ்லீமில் பெரியப்பா,சித்தப்பா பிள்ளைகளை திருமணம் செய்யும் வழக்கம் துருக்கியில் உள்ளதே அப்படி வருகிறீர்களா?இல்லை நம்ம தமிழ் இளைஞர் கான்சமாடு கம்பில் விழுவதுபோல உறவு முறையின்றி காதலிப்பார் என்கிறீர்களா?

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு வணக்கம் இணுவில்,

      நல்ல கேள்வி இணுவில் மிக்க நன்றி. இது கதையல்ல உண்மையில் அதிக பட்சம் நடந்தது தான். சரியாக சொன்னால் இவன் அவர்கள் வீட்டினரை ஒரு சகோதரத்துவமாக தான் பார்க்கிறான், ஆஷா மட்டும் அந்த வீட்டிற்கு புதிது மட்டுமல்ல, புதிய பார்வையு…ம் புதிய உணர்வையும் கொண்டு வந்தவள். இருந்தாலும், ஆஷாவையும் அவன் ஏற்க மறுப்பதை நீங்கள் அடுத்தடுத்த கட்டத்தில் பார்த்திருக்கலாம்.

      என்றாலும், என்னை கொன்றாவது போடு, எனக்கு தோணும் கருத்தை நேரிடையாக சொல்வேன் எனும் உங்களை போன்றோரின் நக்கீர கருத்துக்களின் நேர்மை; எனை போன்றோருக்கு கூர்தீட்ட மிக்கதும், போற்றத் தக்கதும், நன்றிக்கு உரியதும் தான் இணுவில்.

      உண்மையில் அந்த வீட்டில் நடந்தது, நீங்கள் சொன்னீர்களே //முஸ்லீமில் பெரியப்பா,சித்தப்பா பிள்ளைகளை திருமணம் செய்யும் வழக்கம் துருக்கியில் உள்ளதே அப்படி வருகிறீர்களா// இம்முறைப் படித் தான் அந்த பெண் எண்ணியுள்ளாள்.

      நானிவ்விடம் கதையை சுருக்க எண்ணி, அவசியத்திற்கு மட்டும் சிலதை எடுத்திருக்கிறேன். உண்மையில் அவர்கள் பழகிய நாளில் அவள் ஓர்நாள் ‘லோ பையா’ என்று உச்சரித்து விடுகிறாள் (எனில் இந்த சகோதரா இதை பிடி, என்றர்த்தம்) அவன் உடைந்து சுக்கு நூறாகிப் போகிறான். மீண்டும் அந்த சின்னப் பெண் ஹினா வந்து சொல்கிறாள், இதற்கெல்லாம் வருந்தாதே, அம்மி கூட அப்பாவை பாயி என்று தான் (அதாவது ‘அண்ணா’ என்று தான் அழைப்பாள்’ கவனித்துப் பாரென்று.

      கதை முழுதாக வரும்போது சரியாக வரும் பாருங்கள் என்பதைவிட, தவறியவர்களின் பாடம், தவருபவர்களுக்கு கிடைக்கட்டுமே என்றும் வைத்துக் கொள்ளலாம் இணுவில்!!

      மிகக் நன்றி.. உங்களின் அவசியமான கருத்திற்கு..

      Like

  3. Venkadesan சொல்கிறார்:

    அவன் அதிர்ந்து போனதற்கான காரணம்??? ம்ம்ம்ம்…. அண்ணாஆஆஆ…. இப்படி எதிர்பார்த்து எதிர்பார்த்து சலிக்கிறது அண்ணா. இந்த தொடர்களின் முடிவின் இந்த நடையினை மாற்றக் கூடாதா…

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஒரு சுவாரஸ்யம் வேண்டி அப்படி ஒரு முடிவில் நிறுத்தப் படுகிறதுப்பா. தவிர தொடரில் எங்கு நிறுத்தினாலும் அடுத்து என்னவெனும் ஒரு எத்ர்பார்ப்பு இருக்கத் தான் செய்கிறேன். வேண்டுமெனில் என் தம்பிக்காக இதோ.. சற்று நேரத்தில் அடுத்த பதிவை பதிகிறேன்..

      படித்து விட்டு கருத்து எழுதுங்கள். படிப்பவர்கள் காழ்ப்புனர்வில்லாது எழுதும் கருத்து நம் நாவலை செம்மை படுத்தும், நல்ல விமர்சனத்திற்கு தக்க கதையின் போக்கினை கூட மாற்றலாம், அந்தளவு அவசியமிருப்பின்!!

      மிக்க நன்றிப்பா…

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s