ஆற்றுமணல்
வீடு கட்ட மட்டுமாச்சி,
ஆறு ஏரி குளமெல்லாம்
பாடத்தில் படிக்க மட்டுமாகுது,
சோறு குழம்பு பதார்த்தம் கூட
பேசனாயி போச்சி,
பேசினாலும் நடந்தாலும்
ஸ்டெயிலென்கிறான் மனிதன்,
செத்தாலும் மாலை போட்டு
வீடு கட்டி அழுவுறான்; குடிச்சிப்புட்டு ஆடுறான்;
சோறு கொஞ்சம் குறைந்தாலும்
பொண்டாட்டிய அடிக்கிறான்
போதை தெளிந்து விடியும் போது
பேன்ட் சட்டையில் திரியுறான் –
பெர்பெக்டுனு பீத்துறான்,
அவளும் மட்டும் லேசுல்ல
ஆள விட்டு வைக்கல –
பணத்தை கரைச்சி குடிக்காம
பாவி மனசு ஓயல,
பொய்யி சொல்லி அலையிறா
குடும்பமுன்னு மறைக்கிறா
கெட்டதெல்லாம் வளர்த்துவிட்டு
கோல் சொல்ல போகுறா,
ஜீன்ஸ் பேன்ட் ஒசத்தியாம்
பிசா மட்டும் இனிக்குதாம்
தலையில் வைத்த ஒற்றை ரோஜா
நாட்டுப்புற மேக்கப்பாம்,
ஜட்டியோட அலையுது
டூப் பீசுல சிரிக்குது
பட்டுப் புடவை காசுபோட்டு நைட்கிளப்ல ஆடுது
சினிமாவுல வரதெல்லாம் தெருவிலேயே நடக்குது
பாரின் போல மாத்திட்டதா கனவுலேயே வாழுது,
ஆண்டி கதை படிக்கிறான்
ஆன்லைன்ல தேடுறான்
பிகரு வெட்ட அலையிறான்
பொண்டாட்டி தெருவில் போனா பார்க்கிறவன வெட்டுறான்,
சோம்பேறி இளைஞன்டா
சொகுசா பிழைக்கும் பொழப்புடா
போராடி ஜெயிக்காத பயத்தில் வளரும் ஜென்மம்டா
ஏமாந்தவன் தலை கிடைத்தா –
அறுத்துப் போடும் அசிங்கம்டா,
ஒன்னுஒன்னா மாறுறான்
எல்லாமே ரசிக்கிறான்
சுயநல மோகத்துல உறவை தள்ளி வைக்கிறான்
அக்கப் பக்கம் தொடர்பு அறுந்து ஒத்த ஆளா வாழுறான்,
பத்துமாசம் பிள்ளைய முந்தி செத்தா தின்னுறான்
பொணத்து மேல ஏறியமர்ந்து சாமி வணக்கம் சொல்லுறான்
பூச்சி தின்னு இறால் தின்னு, மீனு போயி ஆடு போயி,
மாடு தாண்டி பாம்பு பல்லி தாண்டி மனுசனையும் மேயுறான்,
நல்லநேரம் கெட்டநேரம்னு நாளு பார்த்து அலையுறான்
காலண்டரை சாமியாக்கி வாழ்க்கையத் தான் தொலைக்கிறான்
வாஸ்த்து மந்திரம்னு மூளைய பணத்தோட விற்கிறான்
ராகுகாலம் எமகண்டம்னு சொல்லி கடவுள் நம்பிக்கைய கொல்லுறான்,
கூறு கேட்ட வளர்ச்சிடா
காலம் மாரி போச்சுடா
கண்டதெல்லாம் செய்துவிட்டு
கரீ- க்கீட்டுனு பேசுடா;
நெருப்பை கொளுத்தி தலைக்கு மேல
போட்டுகுட்டே ஓடுடா..
————————————————————————–
வித்யாசாகர்
கவி வரிகள் அனைத்தும் அருமை அண்ணா, அனைத்து வரிகளும் உண்மைகளை கொட்டுகிறது…
LikeLike
நெகிழ்ந்தேன் உங்களின் அண்ணா எனும் அன்பில்.
இது ஒரு வேறுபட்ட கோணம். தவறுகளை மார்மேல் அடித்தாற்போல், நெற்றியில் சுட்டாற்போல், தலையில் திருந்துடா திருந்துடான்னு கொட்டினாற்போல் நம்மை நாமே சமூகத்தோடு இணைத்துப் பார்த்து, கோட்டி சரி செய்து, ஒரு நேர்த்தியான ஒரு மாற்றத்தை உண்டு பண்ண ‘தவறுகளை தேடி மனதை மறைக்காமல் அதன் மேலுள்ள கோபத்தை கவிதையாக கொட்ட எண்ணிய வரிகள்.
இவைகளை தாண்டி நல்லவைகளும்; நல்ல பொதுவான முன்னேற்றமும், இளைய சமுதாயத்தின் வளர்ச்சியும் இல்லாமலில்லை.
நல்லவைகளை போற்றுவது போல், தீயவைகளை; தீயவைகலாகவே ஏற்று, தீயதை இகழ்ந்தேனும் ஒழிப்போம்!!
நல்லவை அங்கு தானே பிறக்கும்..
LikeLike
வட்டார வழக்கில் பல கருத்துக்களைச் சிறப்பாகக் கூறியுள்ளீர்கள்,.. அருமையான கவிதை… வாழ்த்துக்கள்
LikeLike
மிக்க நன்றி அமுதன், வாழ்வின் திருத்தங்களுக்கு தவறுகளை யாரேனும் சுட்டிக் காட்டுவதும் அவசியத்தில் ஒன்றாகிறது. மொத்த தவறுகளில் ஒன்றையேனும் நாமும் செய்கிறோம். ஆக, மொத்தத்தையும் அலசிப் பார்ப்பதில்; நாமும் திருத்தப் பட்டிருக்கலாம்..
LikeLike
தற்காலத்தில் புதிய கலாச்சாரம் என்ற பெயரில் ….சீர்கெட்டு வரும் நாகரீகத்தை…
தோல் உரித்து காட்டி உள்ளீர்கள்…..மிக அருமை…
நான் இதை படிக்கவில்லை, பாட்டாகவே பாடினேன்….
வாழ்த்துக்கள்…
LikeLike
ஆம் மனோஜ், இதை இசையமைப்பாளர் திரு ஆதி மூலம் பாட்டாக படைக்க எழுதியது தான். சரியாக புரிந்து விட்டீர்கள். சமுகத்தின் அவலங்கள் கொட்டிக் கிடக்கையில் தட்டிக் கேட்காவிட்டாலும் சுட்டியாவது கட்ட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளவன் படைப்பாளி.. உங்களின் எப்போழுதுமான வாசிப்பிற்கு நன்றி!!
LikeLike
அருமையான கவிதை அண்ணா
படிக்கையில் சிரிக்கவைக்கும் நகைச்சுவை நடையும்
படித்தவுடன் சிந்திக்கவைக்கும் நல்லபல கருத்துக்களும்…………
LikeLike
மிக்க நன்றிப்பா. ஒரு விதத்தில் நாம் இப்படி சிரிக்கும் விதத்திலும் தான் வளர்ந்துக் கொண்டு வருகிறோம்; இனியேனும் விரைந்து பொதுவாக எல்லோருமே சிந்திக்கத் துவங்கிவிட்டால், ‘ஒருவேளை நமக்கான உண்மையான சிரிப்பு மிச்சப் படலாம்..
LikeLike
நமது மரணம் நம் கையில்! ஆம்!
நாகரீக வளர்ச்சி வீழ்ச்சியை நோக்கியே பயணிக்கும் தருணத்தில் நாசுக்காக குட்டுவைக்கும் இக்கவிதையை ஒருவரேனும், படித்து வெட்கப் பட்டாலே தங்களின் வெற்றி உறுதியாகும்.
கவி வரிகளோ எளிமை; கவிதைக்கான கருவோ அருமை. வாழ்த்துக்கள் மநேமேலும் வளர..
LikeLike
மிக்க நன்றி தீப திருமூர்த்தி. நீங்கள் சொல்வது போல் தான், தவறு செய்பவர்கள் படித்துவிட்டு நாணி தலை சொரிந்து, பிடித்திழுக்கும் ஒற்றை முடியில் ஒற்றை தவறு உதிர்ந்து போகட்டும். அந்தளவு உரைக்கட்டும் என்று தான் இப்படி பொத்தாம் பொதுவாக நம்மையும் சேர்த்தே திட்டிக் கொள்வது.
புரிபவர்களின் என்ன வலிமையில், இனி எல்லாம் மாறுமென்று நம்புவோம், அதற்குத் தக்க எண்ணத்தை தரும் எழுத்தினை படைப்போம்..
LikeLike