மரணமென்ன
அப்பேர்பட்டதா என்று தான்
எண்ணம்;
ஆனாலும் தடுக்க முடியவில்லை
மரணத்தை,
படக்கென பிடுங்கிக் கொண்டதில்
மாலைகளாகக் குவிந்து
கண்ணீராக நனைந்ததில் –
மரணம் என்னை நீ – நாளைக்கென்று
குறித்துக் கொண்டிருக்கலாம்,
யார் கண்டது; இன்றைக்கே கூட…இருக்கலாம்!!
———————————————————–