இறந்தும் வாழ்வதாய்
நம்மோடு இருப்பதாய்
அவர் புகழ் நிலைப்பதாய்
ஆயிரம் சொல்லிக் கொள்ளளாம்,
மீண்டும் –
பார்க்க தொட பேச
அருகாமை கொள்ள;
ஏன், தூரத்தில் கூட ‘இல்லையே’ என்ற உண்மையை
யாரால் மாற்றிட இயலும்?
எப்படியோ
இறந்தவர் உயிரோடில்லை என்ற
ஒற்றை சொல்லிலிருந்து
வலுக் கொள்ளும்; மரணத்தின் கொடுமையை
அழுகையை; யாராலும் அகற்ற முடிவதில்லை!!
——————————————————————-
உண்மைதான்
இருந்தும் சிலர் இறந்தும் எம்முள் வாழ்ந்துகொண்டெ இருப்பார்கள்….
என் தந்தையும் கூட…
நானும் என் தந்தையும் உரையாடிக் கொள்வது போன்ற நினைவுகள் அடிக்கடி என்னுள்ளே….
விளித்ததும்தான் விளங்கும் கண்டது கனவென்று…
கனவாக இருந்தாலும் சுகமான நினைவாகவே இருக்கும்…
LikeLike
உள்ளே எரியும் உணர்வு தீயிற்கு விறகாய் சமுகம் சமுகம் இருந்து வாட்டினாலும் சாய்ந்துக் கொள்ள கூட விடாமல் தாங்கி பிடித்தக் கொள்ள உங்களை போன்ற உறவு தோள்கள் உள்ளவரை எங்களுக்கென்ன குறைமா..
எல்லோரும் இறை அருளாலும் உங்களை போன்றோரின் அன்பாலும் மிக்க ந…லமோடுள்ளோம்; பிறர் நலம் நாடியே நிற்கிறது மனசு!!
LikeLike