நேரில் இன்னும் அவர் இருப்பதாகவே
பொய் சொல்கின்றன சிலரின் மரணங்கள்;
சிலரின் மரணத்தை நம்புவதும்
ஏற்றுக் கொள்வதுமே இல்லை மனசு;
வேண்டுமெனில்
அழுபவரை பார்த்து
ஆறுதல் சொல்லிக் கொள்ளளாம் என்றாலும்
அவைகளை கடந்தும் வலிக்கிறது மனசு –
வாழ்தலின் கட்டாயத்தில்;
மரணமாயிற்றே!!! வேறென்ன செய்ய????!!
எழுதியும்; தீர மறுக்கிறதே; மரணம்!!
——————————————————–