அன்புடையீர் வணக்கம்,
ஒரு கால தவம்; நிகழ்வின் வெற்றிகளில் பூரிக்கிறது. அப்படி வெற்றி கொப்பளிக்கும் ஒரு தினத்தை நோக்கி விழா எடுக்கிறது ‘குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம், ஐயா திரு. செம்பொன் மாரி. கா சேதுவின் தலைமையில்.
கவிஞர் திரு. யுகபாரதியின் தலைமையில் ‘கற்பனை மட்டுமல்ல கவிதை’ எனும் கவியரங்கமும், கிராமிய பாடகி திருமதி. சின்னப் பொண்ணுவின் தலைமையில் வ.வா.க.ச மற்றும் சங்கமம் குழுவினரின் ஆடல் பாடல்களும், மேகமாய் திரைப்பட இசையமைப்பாளர் திரு.ஆதி அவர்களின் தலைமையில் நிகழ்த்துக் கலையும் என, நம்மை தமிழர் சார்ந்த கொண்டாட்டங்களாக குதூகலப் படுத்தவிருக்கும் ‘இப்பெரு விழா சிறப்புடன் நடைபெற, தோழமை கொண்டு அனைவரும் பங்கேற்று, நிகழ்ச்சியினை சிறப்பித்துத் தருமாறு வேண்டி, எங்களின் மனம் நிறைந்த வரவேற்பிணை நவில்வதில் பெருமை கொள்கிறோம்.
நாள் : 19.11.2010, வெள்ளிக் கிழமை, துவக்கம் – 5.30 மாலை
இடம் : அமேரிக்கா சர்வதேச பாடசாலை, சால்மியா, குவைத்
தொடர்புகளுக்கு – 00965 – 67077302
நன்றிகளுடன்..
வித்யாசாகர்
romba santhosamai irukirathu vidya
chinna request,en valthu seithi thani nalai stage il share panni en nandri ini sollungal
kallalagar yugabharathikum
katukuil chinna ponnukum
pambaramai sutravirukum sangamithirukum
isai malayai varathudikum aathikum
semmaiyai semmohiyai kuwait il
valam vara seium kuwaitin kalaignar sethu iyya avarkalukum
engiruntalum tamil udan irukum
en tamil nanbarkalukum
en iniya valthukal–manamara
LikeLike
அன்பு லக்ஷ்மிக்கு, விழா மிகவும் அருமையாக நடந்தேறியது. முடிந்தால் இன்று பதிவிடுகிறேன். உங்கள் வாழ்த்து அருமை. மிக்க நன்றி.
தமிழில் எழுத வசதியாக ஒரு இணைப்பினை இங்கே கொடுக்கிறேன், இதன் மூலம் உங்கள் பதிவுகளை இனி உங்களுக்கும் பிடித்த தமிழிலேயே வெளியிடலாம். மிக்க அன்பும் நன்றியும் உரித்தாகட்டும்.
LikeLike
கலைவிழா வெற்றி சிறக்க வாழ்த்துக்கள்
LikeLike
மிக்க நன்றி தமிழ்த்தோட்டம். விழா அரங்கம் நிறைந்த நிகழ்வாக நடந்தேறியது.. உங்களை போன்றோரின் அன்பே விழா மேடையில் எங்களுக்கான துணை பலமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி!!
LikeLike