போராடி; தொலைத்தது போல் வருடங்கள்
மௌனமாய் தொலைகிறதே.,
தேசம் கடந்து போன என் மக்கள் –
ஊர்திரும்பா வேதனையில் ஈழக் கனவும் குறைகிறதே;
மாவீரர் தினம் கூட –
ஒரு பண்டிகையாய் வருகிறதே
மலர்வளையம் வைத்து வணங்கி –
மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே;
வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் – சொட்டிய ரத்தம்
எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ???????
விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல்
எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ????
வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில்
துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும்
மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு
நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே..
சிரிக்கும் சிரிப்பில் முழு சுதந்திரம் இருக்குமெனில்
போகட்டும் ஈழம் மறப்போம். மறப்போம்.
சிறை பட்ட வாழ்வில் சிரிக்கப் பணித்த நமக்கு –
விடுதலை எட்டா நிலை எனில்; மறக்கலாமா சுதந்திரம்???????????
மண்ணில் ஆண்டாண்டு காலமாக
அடிமை சங்கிலி உடைக்க இழைத்த கொடுமைகளும்
இழப்பும் ஒன்றோ இரண்டோ இல்லையே,
பின் – ஒடுங்கிக் கிடப்பின் –
சுதந்திரம் செல்லாக் காசாகுமே உறவுகளே..???
நினைக்கிறோம்; போதவில்லை, துடிக்கிறோம; போதவில்லை,
அழுகிறோம்; போதவில்லை, பதைபதைக்கிறோம்;போதவில்லை……
இப்போது எல்லோருக்கும் இல்லாத இவ்வுணர்வு –
விடுதலை வெல்லுமளவிற்கு போதவில்லையே!
உணர்வு, உணர்வு, உணர்வு……………….
உணர்வு மெல்ல ஒவ்வொருவருக்காய் அறுபட்டு
இப்போது உயிர் இருந்தும் கடைசியில் –
இறக்க இயலா நடைபினமானோமே!!!!!!!!!!?
கடைசியாய் ஒன்று சொல்கிறேன் உறவுகளே –
ஈழம்……………………………………………………………………..
ஈழம் என்பது, இனி, மெல்ல மறந்துப் போவதற்கல்ல;
ஒரு; காலம் கடந்த போராட்டத்தில் –
தமிழன் வென்றதாய்.., வாழ்ந்ததாய்; குறித்துக் கொள்வதற்கு!!
இப்படிக்கு..
கல்லறையில் உறங்கும் மாவீரர்களில் ஒருவர்….
—————————————————————
வித்யாசாகர்
கவிதை அருமை… அவர்கள் எம் வார்த்தைகளுக்குள் அடங்கிட முடியாதவர்கள்…
LikeLike
ஆம்; அவர்களுக்கான வார்த்தை ஈழம் அடையும் ஒற்றை வெற்றியில் மட்டுமே உண்டு மதிசுதா. நம்மால் இயன்றதை நாம் செய்வோம். மீதம் தானே நடக்கும் எனும் நம்பிக்கையில் நிறைவோம்!!
LikeLike
எழுத்தாளனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
LikeLike
நிலாமதியின் வாழ்த்தில் நூறு பிறந்த நாளுக்கான மழையாய் பெய்து நனைக்கிறது இதயத்தை; ஒரு பரிசுத்த அன்பு!!
மிக்க நன்றி நிலாமதி!!
LikeLike
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரம்…
LikeLike
என்னன்பு உறவே..
இணையத்தில் கிடைத்த படைப்புக்கள் போக; நல் சகோதரிகளும் கிடைக்கவே இன்னும் நிறைய பிறந்ததினம் வேண்டி நிற்பேன்..
மிக்க நன்றி என் இனிய சகோதரி மதிசுதா..
LikeLike
கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் கவிதையை எனது தளத்தில் மீள்பதிவு செய்துள்ளேன். ஆட்சேபனை எதுவும் இருப்பின் தெரிவிக்கவும். tamillook.com டிசெம்பர் 25ம் திகதி பாவனைக்கு வரும்
சுட்டி : http://www.tamillook.com/view.aspx?id=913f95ef-cadd-4860-b507-094ed4c16989
LikeLike
அன்பு வணக்கம், இதுபோன்ற சிந்தனைகளை எழுதுவதே எல்லோரிடமும் கொண்டு செல்ல தானே.., அதிலும் நீங்கள் மிக நன்றாக பதிந்துள்ளீர்கள். மிக்க நன்றிகளும் வாழ்த்தும் உங்களுக்கு உரித்தாகட்டும்..
இதிலிருந்து எந்த படைப்பினை வேண்டுமாயினும் “படைப்பாளியின் பெயரிட்டு” யார் எங்கு வேண்டுமாயினும் பதிந்துக் கொள்ளளாம்..
LikeLike