22 மாவீரர்கள் தின சிறப்புப் பாடல்.. (முதல் ஒலிபரப்பு)

அன்புள்ளங்களுக்கு வணக்கம்,

ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம்.

சையமைத்து பாடியது :
பிரபல இசைமைப்பாளர் ‘திரையிசை தென்றல் ஆதி
பாடல் வரிகள்: வித்யாசாகர்

பல்லவி

ன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!

சரணம் – 1

ரு தலைமுறைய தொலைத்துவிட்டு
நாட்டை தேடுறோம் –
நாடோடி போல ஓடி ஒண்டி கிடக்கிறோம்,

தமிழன்; ஆண்ட கதை மண்ணில் போச்சி
வென்ற ரத்தம் சுண்டி போச்சி –
பிரிந்து பிரிந்து இருப்பதால் வாழ்க்கை கூட தோல்வியாச்சி……..

ன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!

சரணம் – 2

வாழ்க்கைக்கொரு நீதி வேணும்
போருக்கொரு நீதி வேணும்
நீதியின்றி கொன்றவனை ‘நீதி நின்று கொள்ளுமே,
எம் தமிழர் சாதி என்றைக்குமாய் காலம் வெல்லுமே;

ஆண்டாண்டா அழுத மண்ணில் அமைதி கொடிகள் பறக்கட்டும்
எங்கள் குழந்தையெல்லாம் சிரித்து சிரித்து பூத்து குலுங்கட்டும்
வீரமறவர் துயிலம் சென்று – தீபமேற்றட்டும்!!

ன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!

சரணம் – 3

னவுகளை சேகரிப்போம்
காடுபோல கூடி நிற்போம்
விடுதலையை வென்றெடுப்போம்
பட்ட அடியில் பாடம் கற்று – அடிமை வாழ்வை தகர்த்தெறிவோம்;

சமத்துவத்தை சொல்லி –
தமிழர் பண்பில் மிஞ்சி
எதிரி கூட எஞ்சி வாழ சீர் திருத்தம் போதிப்போம்
தோல்வி விரட்டி; வீரம் செறிந்து; வெற்றி வெற்றியென்று பாடுவோம்!!

ன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!
—————————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., பாடல்கள், GTV - இல் நம் படைப்புகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

20 Responses to 22 மாவீரர்கள் தின சிறப்புப் பாடல்.. (முதல் ஒலிபரப்பு)

  1. Mangal சொல்கிறார்:

    வாழ்த்துக்கள்

    பாடல் வரிகள் கண்ணீரை வரவைத்தது

    அன்புடன்
    மங்கள துரை
    குவைத்

    Like

  2. Ruban Raja சொல்கிறார்:

    எங்கள் இனம் ஒரு தேசிய இனம்அந்த தேசிய இனத்தக்காக கழுத்தில் நஞ்சுமாலைதனை கட்டி எம்தமிழ் இனத்தின் விடிவுக்காக களமாடி உயிர் நீத்த அத்த உத்தமாகளுக்கு வீரமிக்க சொல் கோர்வைகளை பாமாலையாக்கி, புகழ்மாலை சூட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த என் உளமார்ந்த நன்றி!!

    Like

  3. Ramanie Sinnadurai சொல்கிறார்:

    என் இதயம் கலந்த நன்றிகள் எம் புலம் பெயர் மக்கள் சார்பில்…..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      உங்களை வேறாக நினைக்காத பட்சத்தில் நன்றி மறுக்கப் பட்டது. ஒற்றுமை உணர்வை இப்பாடல் தருமெனில் மானதால் சற்று நிறைவென். மீண்டும் இவ்வழியில் முயல்வேன்!!

      மிக்க நன்றியும் அன்பும் உறவே..

      Like

  4. நண்டு@நொரண்டு சொல்கிறார்:

    அருமை .
    வாழ்த்துக்கள் .
    தொடருங்கள் .

    Like

  5. வித்யாசாகர் சொல்கிறார்:

    அன்புத் தோழருக்கு நன்றிகள் பல, எழுதவும் எழுதுபவரை வாழ்த்தவும் வெகு சிலராலேயே முடிகிறது.

    அந்த வெகுசிலரில் அடங்கத் துடிப்பவர்கள் நாம். குறிப்பாக நீங்கள். மிக்க அன்பும் வாழ்த்துக்களும் உங்களுக்கும் உரித்தாகட்டும்!!

    Like

  6. Chandran Tharmadevi சொல்கிறார்:

    //ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்// மிகவும் பிடித்திருக்கிறது..

    Like

  7. lakshminathan சொல்கிறார்:

    வணக்கம்.. வித்யா,

    பாடல் ஒலிக்கும் பொது வலிக்கிறது.

    வலியின் நிவாரணம் எப்பொழுது?

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      இந்த வலியை உணர்ந்து –
      பின் –
      உங்களின் கேள்வியை நாமெல்லோருமாய் சேர்ந்து –
      உலகின் பன்னிரண்டு கோடி தமிழர்களும் ஒட்டுமொத்தமாய் கண்திறந்து –
      இந்த உங்களின் கேள்வியை எப்பொழுது கேட்கிறோமோ; அப்பொழுது!

      ஒருசில கைகள் தட்டினாலும் ஓசையுண்டு. ஆனால் அது போதவில்லை லக்ஷ்மி.
      இன்னும் தட்டவேண்டிய கைகள் தட்டட்டும்.
      அப்போது, ஓசை யார் காதையும் கிழிக்கக் கூட வேண்டாம், திறக்கவேண்டிய கதவுகள் தானே திறக்கும், அந்த திறப்பில் (நம்) அவ்வலிக்கான நிவாரணம் ‘விடுதலை என்ற பெயரில் கிடைக்கும்!!

      Like

  8. Nilaamathy சொல்கிறார்:

    காலத்தேவையறிந்து கவி படைக்கும் வித்யாவுக்கு. என் பாராட்டுககளும்
    வாழ்த்துக்களும்.உரித்தாகுக.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஒரு கலைஞனின் படைப்பாளியின் கடமை காலத்தை காலத்தின் படியே உரிய காலத்திற்குள் பதிவு செய்வது என்று எண்ணுகிறேன்.. சகோதரி. தனகுளின் அன்பான தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி!!

      Like

  9. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா சொல்கிறார்:

    பாடல் மிகவும் அருமை !! காலத்தின் தேவை !!
    வித்யாவின் கோலங்கள் யாவும்
    வண்ணமிகு ஜாலங்கள், வாழ்த்துக்கள் நண்பரே !!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      தங்களின் அன்பு நிறை வாழ்த்தினால் மிக்க மகிழ்ந்தேன். நன்மையை செய்ய வேண்டியது நம் கடமை, செய்விப்பது அவன் செயல்.

      உண்மையில் இதை ஒரு காலத்தின் தேவை இருப்பதாக முன்னிறுத்தியே எழுதப் பட்டது.

      ஒற்றுமை எனும் ஒரு சொல் குறையினால் விடுதலை என்னும் மற்றொரு சொல் நம் லட்சாதி லட்ச உயிர்களை கொன்று போட்ட கொடுமை இனியும் நேர வேண்டாமே என்பதே; என் மனதார்ந்த வேண்டுதலும் கனவும் லட்சியமும் எல்லாமும்..

      Like

  10. மன்னார் அமுதன் சொல்கிறார்:

    அருமையான பாடல்…. வாழ்த்துக்கள் ஐயா

    Like

  11. தமிழ்த்தோட்டம் சொல்கிறார்:

    பாடல் அருமையா இருந்துச்சு

    Like

  12. வித்யாசாகர் சொல்கிறார்:

    மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்.. மக்கள் புயலென எழுந்து நின்றால்; திரும்பிப் பார்க்காமலா போகுமிவ்வுலகு? திரும்பிப் பார்த்தால் கிடைக்காமலா போகும் அந்த அப்பாவி மக்களுக்கான விடுதலை…

    கயவன் நாடகமாடி ஒரு இனத்தையே அழிக்கிறானே; அவனுக்கான தீர்வும், நமக்கான நீதியும் கிடைக்கும். கிடைத்தே தீரும். உண்மை எப்படி அழிவதில்லையோ, அப்படி தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டுமென்பதும் நியதியே!!

    Like

பின்னூட்டமொன்றை இடுக