1
மண்ணின்
விடுதலைக்குப் போராடிய
தமிழச்சியின் நிர்வாணம்
இணையமெங்கும் ஒளிபரப்பு;
உயிரிருந்தும் உலவும் நாம் –
அதை கண்டும் –
சாகாத; இழி பிறப்பு!!
————————————————————–
2
மானத்தில் –
தொட்டால் சுடும் நெருப்பு,
இழிவாய் –
பார்த்தாலே பாயும் மின்சாரம்,
அவள் –
தாயிற்கும் ஒரு படி மேல் என்று
இனி புரியும் – சிங்களனுக்கு!!
————————————————————–
3
அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால்
ஒன்று பார்த்தவரையெல்லாம்
எரித்திருப்பாள்,
அல்லது – தன்னையாவது
எரித்துக் கொண்டிருப்பாள்!!
————————————————————–
4
தப்பித் தவறி
அவள் பிள்ளை இதை
பார்த்திருந்தால்-
எத்தனை ராஜபக்ஷேவை அவன்
கொன்றிருப்பானோ!!!!!!!?
————————————————————–
5
எம் மண்ணின்; வீரமென்
தமிழச்சிகள்,
நாய்கள் கொன்றுவிட்டு தான்
கொந்தியிருக்கின்றன!!
————————————————————–
6
ஜென்மம்
எத்தனை எடுத்தாலும் இனி
ரத்தத்தின் ஒரு துளியிலாவது
இருக்கும் –
அவன் மீதான; அவளின் கோபம்!
————————————————————–
7
யாரும் சாட்சிக்கு வேண்டாம்
காற்றும்.. வெளிச்சமும்..
மண்ணும்.. வானும்..
மரமும் செடிகளும் –
பார்த்துக் கொண்டு தானிருந்தன
அந்தக் கயவர்களை!!
————————————————————–
8
கடல் தகதகவெனக்
கொதித்து –
உலகத்தை சூழ்ந்து அழித்திருக்கும்;
அந்த கொடுமைக்கு உடனே
தண்டனை கொடுப்பதெனில்!!
————————————————————–
9
யாரோ ஒருவனுக்கு
துணிவிருந்தால்
அவள் கையில் ஒரு அரிவாளை
கொடுத்துவிட்டு சொல் –
உன்னை இப்படிச் செய்வேனென்று;
அந்த அரிவாளில் –
உன்னைப் போல் – அவள்
நூறு பேரை அறுத்திருப்பாள்!!
————————————————————–
10
எனக்கு
மரணத்தை இபொழுதேக் கொடு;
அதற்கு ஈடாக –
இணையத்தில் தெரிந்த
என் தமிழச்சியின் வெற்றுடம்பை
ஈழ விடுதலையால் போற்று,
இன்னொரு மானத்தி மிஞ்சட்டும்!!
————————————————————–
வித்யாசாகர்
எம் மண்ணின்; வீரமென்
தமிழச்சிகள்,
நாய்கள் கொன்றுவிட்டு தான்
கொந்தியிருக்கின்றன!!…………..
மானத்தி அவள்
மானம் தீயாய் எழும்
LikeLike
//உயிரிருந்தும் உலவும் நாம் –
அதை கண்டும் –
சாகாத; இழி பிறப்பு!!//
உண்மைதான் நண்பரே..
LikeLike
கேட்பவர் எப்படி எண்ணுவரோ; என்னால் காணவே இயலவில்லை. இருப்பினும் வலி தாளாது, இஅவர்களை எண்ண செய்வதென்று புரியாமல், என்னென்ன செய்தார்களோ என்றெண்ணி கண்டு கண்டு எதை எதையோ நினைத்து துடித்தது மனம். அவர்களின் எண்ணம், மனதின் கடினம், எத்தனை இழிவாக நம்மை நடத்துவதன் கொடூரம் என எதை பற்றியெல்லாம் சிந்தனை நீண்டது.
இதற்கெல்லாம் தீர்வில்லாமல் போகவே போகாது, இதில் லேசாக ஒரு துளியை பார்த்து விட்டு அம்மா முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னார்..
இவனுங்க அழிவானுங்கடா.. இதுக்கெல்லாம் நீதி கிடைக்கும்.., கிடைக்காம எப்படி போகும்..’மென்று..
LikeLike
அருமையாக வடித்துள்ளீர்கள் அண்ணா,
படிக்கையில் வலிக்கிறது, வலி நெஞ்சைத் தொடுகின்றது
இருந்தும் என்செய்வது???????
பொங்கியெழ நினைக்கின்றேன் புயலாக
புதைத்துவிடக் கூடுமோ
புலியென்று எனையும்!!!!!!!!!!!!!!!!!!!!!!
LikeLike
புதைப்பார்கள் தான், அவர்களின் கொடூர செயலுக்கு அயலான் தன் மனதையும் கல்லாக்கிக் கொண்டு துணை புரியும் வரை புதைப்பார்கள். ஓர் தினம் அப்படி பொங்கி எழப் போகிறது நம்மினம். நம் உறவுகள். அதை யாராலுமே தடுக்க இயலாமல் வேடிக்கை பார்க்கப் போகிறது உலகம்..
LikeLike
http://meenakam.com/2010/12/01/15037.html
இந்த இணைப்பின் மூலம் சென்று, மீனகம் தளத்திலுள்ள பதிவையும் காநோளியையும் கண்டால் உடைந்து போவீர்கள் உறவுகளே..
எப்படியெல்லாம் தீங்கிழைத்துள்ளார்கள் நம் சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும், செத்த பிறகு கூட இப்படியெல்லாம் கொடுமைகளை நிகழ்த்தியுள்ள இந்த ஈனப் பிறவிகள் மனித ஜென்மங்கள் தானா என்றே மனம் வருத்தமுருகிறது..
LikeLike
புறமுதுகில் சுடும் கோளை சிங்களவன
என் வீர தமிழசியை ஒரு பெண் என்றும் பாராமல்
அவளை போர் களத்தில் வெல்ல வீர மில்லாத சிங்களவன
உன்னை ஈன்றதும் ஓர் பெண் தானா?
என் சகொதிரின் நிலை கண்டு கண்ணீர் முட்டு கிறது
என் தமிழ் இனத்துக்கு மட்டுமா இந்த சோகம்
என் நெஞ்சு கொதிக்கிறது
எ சுனமியிய மீண்டும் வா
என் இனத்தை அழித்த சிங்களவன்
அள்ளி கொண்டு போ…………………….
LikeLike
ஆம்; அபப்டி ஒரு வலி, கொடும் வேதனை தான் மங்கள் எனக்கும். என்னால் முழுமையாய் அந்த காணொளியை பார்க்கவே இயலவில்லை.அவனுக்கான தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ நமக்கான நீதி கிடைக்கும். இந்த மானத்தின் கோபம நமக்கு நம் விடுதலையை மீட்டுத் தரும் மங்கள்..
LikeLike
பணத்துக்கு எழதும் சிலர் மத்தியில்
என் இனத்துக்கு எழதும் நீர்
உன் எழது கோல்
ஈழ தமிழனின் போர் படை வாள்
LikeLike
ஆம். உங்கள் சேவைக்கு என(ம)து நன்றிகள். அந்த காம வெறியர்களுக்கு நல்ல சாவு கிடைக்காது.
LikeLike
நம் கனவு நாம் வாழ்வது மட்டுமே. தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைக்கும், அது வேறு. நம் போராட்டத்தை நம் விடுதலை நோக்கி மட்டுமே நகர்த்துவோம், தமிழன்.
தங்களின் அன்பிற்கு மிக்க நன்றியானேன். இந்த அன்பிற்கு என் எழுத்து இன்னும் கடமையாய் நீளும்!!
LikeLike
நன்றி மங்கள். இதலாம் எதையோ நோக்கி எழுதுவதில்ல. இதை பற்றியோ புலம்புகிறோமோ, எழுதவே வேண்டாமே என்று நினைத்தும் ஆற்றாமையால் கொட்டித் தீர்க்கும் உணர்விது. இதை கண்டாவது உணர்வற்றோருக்கு கொதித்தெழும் உணர்வெழாதா என்றெழுதும் துடிப்புகள் இவ்வெழுத்துக்கள் எல்லாம் மங்கள்..
LikeLike
மனம் பதைக்கிறது கொடிய செயல்கள் எத்தனை புரிந்தாலும் பார்க்கும் பெண்களில் தன் தாயை காணாதவன் தான் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கமுடியும்….
உங்கள் வரிகளை படிக்கும்போதே உடல் எரிகிறது சத்தியமான வார்த்தையே…. அவள் கையில் ஒரு கத்தியை கொடுத்து பின் செய்ய துணியட்டும்…. அதுவரை அவனை உயிருடன் விட்டால் தானே….
எத்தனை உயிர்களை இப்படி கொன்றிருப்பார்கள் பாவிகள்….. கடவுள் இருக்கிறாரா 😦
இருந்தால் ஏன் இன்னும் எரிக்கவில்லை மொத்தமாக அவர்களை 😦
ஒரு பெண்ணுக்கு அநீதி நடந்தது என்று மொத்த ஊரையும் எரித்ததே அன்று… இன்று இப்படி ஒரு காட்சியை காணவைத்த கடவுளை என்ன சொல்வது 😦
கயவர்களை கடவுள் விட்டு வைத்திருப்பது ஏன் 😦
தன் தாயை பார்த்து தான் செய்த செயலை சொல்லி இருப்பானா?
தன் சகோதரியை பார்த்து தான் செய்த செயலை சொல்லி இருப்பானா?
அப்படி சொல்லி இருந்தால் அவனைப்பெற்றதற்கு அவன் தாயே அவனை வெட்டிக்கொன்றிருப்பாள்… அவன் சகோதரி அவன் முகத்தில் உமிழ்ந்திருப்பாள் 😦
வரிகளில் தீட்சண்யம்….
வரிகளில் ஆதங்கம்….
வரிகளில் கண்ணீர் சுவடு…..
வரிகளில் வேதனை….
அவனை அழிக்க முடியவில்லையே என்ற துடிப்பு எல்லாமே உங்கள் வரிகளில் காண முடிந்தது வித்யாசாகர்….
மனம் கனத்து விட்டது 😦 ஒன்றும் சிந்திக்க கூட இயலாமல் துடிக்கிறது 😦
படத்தை கண்டதும் துடித்த மனம் உங்கள் வரிகளை படித்ததும் எரிய ஆரம்பித்தது….
இன்னும் எத்தனை பேரை இப்படி செய்தனரோ என்று வெறியுடன் கத்தி தேடி அலைகிறது அவர்களை கொல்ல அவர்களை எரிக்க மனம் ஆவேசப்படுகிறது….
ஈழத்தின் கொடுமைகளை வரிகளில் கொண்டு வந்த உங்களுக்கு என் அன்பு நன்றிகள் வித்யாசாகர்….
LikeLike
இந்த வெப்பம் வேண்டும், இந்த கோபம் வேண்டும், அநீதி கண்டு துடித்து எழும் துணிவு நம் மொத்த பேருக்கும் வேண்டும். அது கிடைத்து நாமெல்லோரும் ஒன்று கூடி நிற்பதை அவங்களுக்கு காட்டி விட்டாலே; நம் தமிழச்சிகள் காக்கப் படுவார்கள்; மீவீரர்களின் மனம் ஈழ வெற்றியில் சாந்தியுறும்!
மிக்க நன்றி என் அன்பு தோழி!!
LikeLike