என் வாழ்வின் ஓவியத்தை
வரையும் தூரிகையே –
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;
பாட்டின் ஜதிபோல
எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன்
அசைவில் மட்டுமே அசைந்து –
நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;
நடைபாதையின் முட்களை மிதித்து – என்
கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே
உன் அன்பிற்கு – அன்றும் இன்றும்
நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!
உண்மையில், காற்றின் சப்தத்தை
இசையாக்கிக் கொடுத்த ஒரு
யாழின் பெருமை –
உன்னையே சாரும் அம்மா!
இனியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்
இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்
நீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு
நான் – உனக்கு மட்டுமே பிள்ளையாக – பிறப்பேனம்மா!!
————————————————————————
வித்யாசாகர்
இக்கவிதை என் அன்பு தம்பி விஜய்யின் அன்பிற்கிணங்கி; அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுக்கு என் தம்பியின் வாயிலாக சமர்ப்பிக்க படைக்கப் பட்டது.
வாழ்வின் எல்லாம் நலன்களையும் பெற்று எப்பொழுதும் மிக்க மகிழ்வோடு புன்னகைக்கும் சிரித்த முகமாய்; தன் நல்லாசிகள் எல்லாம் நிறைவேறி அம்மா அவர்கள் நீடூழி வாழ முழுமனதுடன் இறையின் தாழ் பணிந்து, பேரன்பிற்கான வாழ்த்தினையும் தெரிவிப்பதில் பெருமை அடைகிறோம்..
வித்யாசாகர்
LikeLike
thamaiyai verumai parkum puvithanil
perumaiyai varum thalimuraiku -vithitha
uramayi sonna vidayirku
en thain sarpaga valthukal
lakshminathan
LikeLike
உண்மை அன்புக்கு மட்டுமே இதயத்தின் ஓசை கேட்கும் என்பார்கள் , உண்மையில் என் உள்ளத்து உணர்வுகளை கவிதையாக வடித்துள்ளீர்கள், மிக்க நன்றி அண்ணா……..
“உன் அசைவில் மட்டுமே அசைந்து –
நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;”
நானும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன் அடுத்தொரு ஜென்மம் உண்டெனில் அதில் நான் உங்கள் தம்பியாகவே பிறக்கவேண்டும் நானும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன் அடுத்தொரு ஜென்மம் உண்டெனில் அதில் நான் உங்கள் தம்பியாகவே பிறக்கவேண்டும்…… வெறும் உறவாக அல்ல, உடன் பிறந்தோனாக………….
LikeLike
மிக்க நன்றிப்பா. நல்லதையே நம்புவோம். எல்லாம் நன்றாகவே நடக்கும். அம்மாவிற்கு என் வணக்கமும் வாழ்த்தையும் சொல்லுங்கள்..
உங்கள் அன்பின் லயத்தில் திக்கிமுக்கியே விடுகிறது மனசு..
LikeLike
நடைபாதையின் முட்களை மிதித்து – என்
கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே
உன் அன்பிற்கு – அன்றும் இன்றும்
நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!
super!
LikeLike
மிக்க நன்றி வளர்மதி. தன் வழிகளை தாங்கி பிள்ளைகளை காப்பாற்றும் தைகளும், தன் பசிக்கு பட்டினியை தின்று; கிடைத்த உணவை தன் குழந்தைகளுக்கு கொடுக்கும் தைகளும் குழந்தையின் வளரும் பாதைக்கு மலர்களாய் பூத்துப் போனவர்கள் தானே…
அத்தகைய தாயிற்கு, இக்கவிதையின் சிறப்புகள் சமர்ப்பணம் ஆகட்டும்..
LikeLike