40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே!!

ச்சிவெயில் எனை எரிக்கும் சூட்டை
உன் ஒற்றை பார்வை தனித்ததடி
நாளையும் வந்து இங்கே நிற்பேன் –
நீ வந்தால் வாழ்க்கை சொர்கமடி!

சற்று களைந்து சிலிர்ப்பும் உன் அடர்கூந்தல்
காற்றில் பறக்கும் என் இதயமடி –
காடு போல் பரந்துகிடக்கும் என் இதயதெருவில்
நீ மட்டுமே வீற்றிருக்கும் தேவியடி!

நெற்றி சுருக்கி நீ பார்த்தாய் பார்த்தாய்
ஆகா.. உள்ளே ஒரு பிரபஞ்சம் உடைந்ததை கண்டேனடி
இனி ஏழு பிறப்பு உண்டோ இல்லையோ
உனக்காய் உனக்காய் மட்டுமே நான் பிறப்பேனடி!

நடந்து வரும் தேவதை போல் – நீ
கை வீசி வீசி காற்றில் கலந்தாயடி
என் சுவாசம் பிரித்து பார்த்தால் கூட
அதில் உயிர்காற்றாய் நீயே இருப்பாயடி!

எனை தொடாத தென்றல் நீயே
தொட்டுசெல் ஓர்முறை – இதய தாளத்தில் ஆடி திளைப்பேனடி
விட்டுசெல்லும் ஓர் முடிவு – உண்டென்றால்
அதை சொல்லாமலே செல் –

உன் ஒற்றை பார்வையிலேயே உயிர்த்துக் கிடப்பேனடி!!
—————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to 40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே!!

  1. kalyani சொல்கிறார்:

    ஒவ்வொரு வரியும் ரசிக்க வைக்கிறது. மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கிறேன் …கவிதை வரிகளிலேயே மூழ்கி விட்டது மனம்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      இது ஒரு திரைப்பட பாடலுக்காக எழுதியது கல்யாணி, என்னவோ பதியனும் போல் இருந்தது பதிந்து விட்டேன். அவரகள் வலைதலத்திளிட்டது கண்டு எடுக்காவிட்டால் வேறு எழுதிக் கொள்வோம்..

      தெருவில் ஒரு பெண் வருகிறாள்; அவளுக்காக காத்திருக்கும் காதலன் அவளை பார்த்து பாடுவதாக’ பாடல் எழுதப் பட்டுள்ளது!

      உங்களுக்கெல்லாம் பிடித்ததில் மகிழ்ந்தேன்!!

      Like

  2. lakshminathan சொல்கிறார்:

    silaruku katalikumpothu nalla kavithai varum

    silarku katalil tholviuttral nalla kavithai varum

    silaruku time kidacha kavitahi varum

    vidya neenga lover illa,devadasum illa,summaum illa

    kuwait la pamparama suthikite atum kudumpathoda

    neenga elutara kavitaiellam ninichi santosama iruku

    ungala mari ennalla spent panna mudila enrta athangamum irku

    nandri

    lakshminathan

    Like

  3. கோவை கவி சொல்கிறார்:

    நல்ல வரிகள் வாசிக்க இதமான கவித்துவ வரிகள் வாழ்த்துகள். வாழ்த்துகள! நேரமில்லையென்று கூறாமல் வேதாவின் வலையையும் சற்று எட்டிப் பாருங்களேன்.
    http://kovaikkavi.wordpress.com/ nanry.

    Like

  4. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா சொல்கிறார்:

    மிக்க அழகு வித்யா !! ரசித்தேன் !!!
    கவிதை பாடலானால் இன்னும் ருசித்திருக்கும் . தொடர்ந்து தாருங்கள்…..

    Like

  5. kovai mu. sarala சொல்கிறார்:

    “வரி வரியாய் உணருகிறேன்
    ஒரு காதலனின் ஏக்கத்தை”

    அருமை வித்யா படித்தேன் என்பதைவிட நனைந்தேன் என்று சொன்னால் பொருந்தமாக இருக்கும் உங்கள் உணர்வுபூர்வமான உயிர்பூர்வமான வார்த்தைகளில் ஊசலாடுகிறது எங்கள் மனம் தொடருங்கள் ……………

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நிறைய கவிதைகள் எழுதப் படுகின்றன நிறைய பேருக்காய். அவரவர் அதை புரிந்துக் கொள்ளும் அளவில் அது அவரவருக்குப் பிடித்துவிடுகிறது. ஆனால் கவிதைகள் எழுதப் பட்ட அந்த யாரோவை கடந்தும்; யாரையோ தொட்டுவிடுவதில்; கவிதைகள் அந்த யாரோவிற்காக காத்தே கிடக்கிறது..

      மிக்க நன்றி சரளா. வெகு நாட்களுக்குப் பின்னான வருகை மகிழ்ச்சிக்குரியது!!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s