அன்புறவுகளுக்கு வணக்கம்,
கொட்டிக் கொடுக்கும் அளவோ அல்லது கிள்ளிக் கொடுக்குமளவோ பணம் இல்லையேல் பரவாயில்லை, மானம் மறைக்கும் அளவிற்கு மாற்றுத் துணிக்கு ஆடை கொடுத்து உதவுங்கள் என்று எங்கோ தவிக்கும் நம் உறவுகளின் பிள்ளைகளுக்காய் கெஞ்சி நிற்கிறோம்..
அதிலும் மழையினால் பாதிக்கப் பட்டு முறையான இருப்பிட வசதி கூட இன்றி அதிக குழந்தைகளே பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அடர்த்தி நிறைந்த ஆடைகள் இருப்பின் மேலும் உதவிகரமானது.
அனுப்ப எண்ணுவோர் தொடர்பு கொள்ள விரும்புவோர் உதவி வேண்டின்; கீழுள்ளவாறு ‘தங்களுக்கு அருகாமையில் உள்ள பொங்குதமிழ் அமைப்பினரை அணுகலாம். மேலும் செய்திசார் புள்ளியியல் ரீதியான விவரங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி குவித்த கையினனாய்..
வித்யாசாகர்
ஈழத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு உதவி.. அவசரம்..
ஆஸ்திரேலியாவில் அடித்த கனமழை..அப்படியே இலங்கையிலும் கால் பதிக்க வெள்ளம் வெள்ளம்…. எங்கும் வெள்ளம்…வீடு இழந்த எம்மக்களை இந்த மழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது…
14 மாவட்டங்கள்……
10லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டு இருக்கின்றார்கள்.
38 பேருக்கு மேல் மழை வெள்ளத்தில் இறந்து போய் இருக்கின்றார்கள்..
40க்கு மேற்ப்பட்டவர்கள் காயமடைந்து இருக்கின்றார்கள்..
12க்கு மேற்ப்பட்டவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்த மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் உறவுகளின் குழந்தைகள்.. மாற்றுதுணிக்கு கூட வழியில்லாமல் தவிக்கின்றனர்…
காசு பணம் கூட தேவையில்லை. குழந்தைகளுக்கான மாற்றுத்துணிகள் உங்களிடத்தில் இருந்தால் கொடுத்து உதவவேண்டுகிறோம். சுவெட்டர் போன்ற குளிர்கால உடைகள், போர்வைகள் இருந்தாலும் கொடுத்து உதவலாம்.
தொடர்புகொள்ள / உதவிட அழையுங்கள்:
மினா அப்துல்லா – பிரபாகரன் – 97896908
பாகில் – செந்தில், பெஸ்ட் லைன் கார்கோ – 67065006
மங்காப் – தமிழ்நாடன் 66852906
– உதயம் உணவகம்
அபுகலிபா – இராமன்(பொன்னி) 97522453 / 99015013
மெகபூலா – முத்துக்குமார் – 99014512
சால்மியா – அன்பரசன் 97480871, மகேந்திரன் சேது 90974710
குவைத் சிட்டி – பிரியா மியுசிகல் மதி -99816937
– பாலிவுட் உணவகம்
அபாசியா – இக்பால் 97861531
சுற்றிலும் வெள்ளம்..உயிர் பிடித்து இருப்பதே பெரிய விஷயம்… குழந்தைகளுக்கு உடை இல்லை..
மேலும் மழை வெள்ளத்தின் தீவிரம் பற்றி அறிய…
http://tamilwin.org/view.php?22GpXbc3BI34ei29302jQ6dd3Qjb20N922e4ILBcb3pGu2
http://www.bbc.co.uk/news/world-south-asia-12198143
http://asafardeen.blogspot.com/2011/01/blog-post_2274.html
http://www.nerudal.com/nerudal.24514.html
பொங்குதமிழ் மன்றம் – குவைத்
http://www.pongutamil.org
thamizh@pongutamil.org
+965 66852906