நீ கொடுக்கும் தேநீரில்
எனக்காக சர்க்கரை சேர்ப்பியா
அல்லது இரண்டு
முத்தத்தை இடுவாயா?
சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு
தேனிரிலும் –
எனக்குள்ளும்!!
—————————————————————————
2
வாழ்வின் நகர்வுகளை
எனக்காக சுமப்பவள் நீ
என்று புரிகையில் –
உன் மீதான அன்பே
வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன்!!
—————————————————————————
3
காலத்திற்குமான
ஒரு சக்கரத்தில் –
நிறைய முகங்கள் வந்து போகின்றன;
நீ மட்டுமே –
உலகமானாய்; உயிர்வரை நிரைந்தாய்!!
—————————————————————————
4
உன்னை விட எத்தனையோ பேர்
எனக்கு அழகாக –
தெரிந்திருக்கிறார்கள்;
ஆனால் –
உன் அழகில்; நீ மட்டுமே இருந்தாய்,
இதயத்தையும் –
நீ மட்டுமே எடுத்துக் கொண்டாய்!
—————————————————————————
5
உனக்கான கனவுகள்
ஒவ்வொன்றாய் விரிகின்றன;
ஒவ்வொன்றிலும் – நீ
புதிது புதிதாகவே பூக்கிறாய் என்பதில்
நானும்; உனக்காக என்னை சரிசெய்துக் கொண்டதில்
எனையும் அழகென்றது உலகம்!!
—————————————————————————
6
உனக்கொரு பூஜாடி போல்
சிரிப்புக்களை வாங்கித் தரத் தான்
என் வியர்வை –
வித்துக்களாய் விழுகின்றன;
அலுவலக அறை முழுதும்!
—————————————————————————
7
எனக்காக –
இதயம் சுமந்தாய் என்றே
எண்ணம் எனக்கு;
இதோ, உனக்காக என்னையும் நான்
பத்திரப் படுத்திக் கொண்டேன் –
என் கண்ணாடியில் –
எனக்கு நான் தெரிவதேயில்லை!!
—————————————————————————
8
குழந்தை பிறந்தால்
பாசம் குறையும் என்பார்கள்
மூன்று குழந்தை பெற்ற பின்பும்;
அன்பும் நன்றியிலுமே –
நீயும் நிறைந்தாய்!!
—————————————————————————
9
என்னை எல்லோரும்
பாராட்டும் போதெல்லாம் – உன்
நினைவும் வரும் எனக்கு;
உனக்காகவும் –
ஒரு பாராட்டு விழா வைக்க ஆசை,
வா; வந்து என்
இதய மேடையில்; ஏறி நில்
உனக்கான மாலைகள்
எனக்கான வரங்களாய் விழட்டும்!!
—————————————————————————
சட்டி வழித்து சோறு போட்ட
நாட்களும் உண்டு –
சட்டி வழித்த சப்தம் கேட்டு
பாதியில் போதுமென்று எழுந்துக் கொள்வேன்;
நீயும் எனக்கு –
போதுமென்று நினைத்துக் கொள்வாய்
போதாத என் பசியை –
நீ எனக்கு மட்டும் வழித்துவைத்த அக்கறையை யெண்ணி
—————————————————————————
உங்களோட எல்லா குட்டி கவிதைகளும் அருமை… இத்தனை அழகா எழுதுவீங்கன்னு –
இன்னைக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்…:)
LikeLike
மிக்க மகிழ்ச்சி வாணி சகோதரி..
எழுதுகிறேன் என்பதை தெரிந்துக் கொண்டதெ மகிழ்ச்சி தான்; அழகாய்’ என்னும் அளவீடு அந்தளவு அன்பிற்குரிய என் மனைவிக்கே சொந்தம்!!
LikeLike
உங்களை –
கவிதை எழுத வைத்த உங்கள் மனைவிக்கு ஒரு நன்றி பா…:)
LikeLike
இந்தக் கவிதைகளை எழுதவைத்த என்று சொல்லலாம். சரியாக இருக்கும் சகோதரி!
இதுபோலவே,
ஒரு கணவன் மனைவியின் பிரிவிலான வலியை காலம்காலமாய் சுமந்து கொண்டும், மீண்டும் மீண்டுமாய் பறந்துக் கொண்டும் இருக்கும் – நம் வெளிநாட்டுக் கணவர்களின் உணர்வுகளை பதியும்… வண்ணமாகவும், உள்நாட்டில் வசிக்கும் மனைவியின் வலிக்கு; கணவன் சிந்தும் கண்ணீரை கவிதையாக்கிய விதமாகவும், முன்பு கூட நம் “பிரிவுக்குப் பின்” என்று ஓர் நூல் வெளியாகியுள்ளது..
செல்லம்மா (மனைவி) முகில் பிறப்பிற்காக ஊர் சென்று வருவதற்கு இடைப்பட்ட காலத்தின் பத்துமாத தொடர் கவிதைகளாக ‘குவைத் நீதியின் குரல்’ இதழில் வந்த கவிதைகளின் தொகுப்பது.
அந்த கவிதைகளுக்கான சுட்டியினை இங்கே தருகிறேன்.. நேரமிருப்பின் பாருங்கள் சகோதரி..
http://vidhyasaagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/
மேலும், அந்த பா’ விற்கு கா’ எனும் நன்றி!!
LikeLike
சட்டி வழித்து சோறு போட்ட
நாட்களும் உண்டு –
சட்டி வழித்த சப்தம் கேட்டு
பாதியில் போதுமென்று எழுந்துக் கொள்வேன்;
நீயும் எனக்கு –
போதுமென்று நினைத்துக் கொள்வாய்
போதாத என் பசியை –
நீ எனக்கு மட்டும் வழித்துவைத்த அக்கறையை யெண்ணி
மனதார நிறைத்துக் கொள்வேன்!!
/// அருமையான வரிகள் உளமார உணர்ந்து நேசிக்கும் ஒரு உள்ளதால் மட்டுமே துணைவியின் உணர்வுகளை புரிந்துகொள்ளவும் அவளுக்காக வருந்தவும் தெரியும் இதற்க்கு அந்த கவிதையின் நாயகி கொடுத்து வைத்திருக்க வேண்டும் தொடரட்டும் உங்களின் புரிதல்கள்
LikeLike
மிக்க நன்றி சரளா. எல்லோருக்கும் மனைவியருக்கு எழுதும் கவிதைகள் பிடிப்பதில்லை போல்; உங்களை போல் சிலருக்கே இதயம் வரை தொடுகிறது. சிலபேருக்கு அவன் மனைவிக்கு தானே எழுதியுள்ளான் என்று நினைப்பும் இருக்கலாம். மனைவிகளுக்கு இப்படி இருங்களேன் என்று வேண்டுவதற்கும் கணவன்களுக்கு இப்படி நடந்து கொள்ளுங்களேன் என்று சொல்வதற்கும் எழுதப் படுபவை இக்கவிதைகள்.
இவ்விடம், ஒரு உண்மையும் சொல்லக் கடமை பட்டுள்ளேன்,எப்படியும் என் செல்லம்மா இதை பார்க்க மாட்டாள் என்பதால் சொல்லலாம். அவள் கிடைத்ததில், நானே மிகையாய் கொடுத்து வைத்தவன். அத்தனை புரிந்துணர்வும், அக்கறையும் அன்பும் கொண்டவளை கொண்டது, என் வாழ்வின் பெரும்பாக்கியம்.
புதியவர்களுக்கு சொல்வதெனில்; ஆண்கள் சரியெனில் அதிகபட்சம், பெண்களும் சரி!!
LikeLike
அழகு… அருமை… அற்ப்புதம்… எதைச் சொல்லா.. என்னவென்று சொல்ல.. உமது கவிகளை… வாழ்க வழமுடன்..
LikeLike