உன் ரெட்டை பாதம் மெல்ல நடந்து
என் இதயம் ஏறிப் போகுதடி –
உன் விரலில் வீழும் மனதை படிக்க
கண்கள்; கடிதம் நூறு தேடுதடி!
உன் குறுக்கே சிவந்த இடுப்பை கிள்ள
ஒற்றை தாலி வேணுமடி –
உன் உதட்டில் ஈரக் கவிதை பதிக்க
வலது காலில் வாசல் மிறி!
இடது காலும் இழுக்கா என்ன
என் நெஞ்சில் ஏறி நின்னுக்கடி –
உன் கற்றை முடியில் காதல் பறிக்க
வெப்பக் காற்றாய் மாறிக்கடி!
குண்டு மல்லி கண்களி லென்னை
ஓரப் பார்வையாய் சேர்த்துக்கடி –
தினம் தேடித் படிக்கும் கவிதை போல
என்னை – மெல்லக்காதல் செய்துக்கடி!
வஞ்சனை இன்றி வார்த்தை நூறு
இதயம் முழுக்க தேடி பிடி –
இனியும் இப்படி முரண்டு பிடித்தால்
அடியே போறவளே சற்று நில்லேண்டி –
என் இதயம் ஒன்றில் ஏறிநின்று –
உன் கனவை மொத்தமாய் தீர்த்துக்கடி;
என் வாழ்வின் நிஜமாய் வந்து உதித்து
நீயே நானாய் மாறிக்கடி; உந்தன் கனவிலாவதென்னை சேர்த்துக்கடி!!
——————————————————————–
வித்யாசாகர்
அழகிய பாடல் வரிகளாய்….
எழுதுபவருக்கு எழுத்து புரியுமோ?!!
இது பாடலுக்காக எழுதியது தான் வாசன். ஒரு திரைப்பட பாடலுக்காக எழுதியது. என்ன தான் நாம் எத்தனை எழுதிக் கொடுத்தாலும் திரை படங்கள் பொருத்தவரை அது படமாகி, வந்து, நம் பெயரோடு பாட கேட்டால், பார்த்தால்தான் உண்டு.
வரும்போது வரட்டும் என்று பிற நட்புள்ளங்களுக்கும் அனுப்பி பின் இங்கும் பதிந்து விட்டேன்..
romba atumajaaha iruku. thavitra anru thaangal sinthija otu soddu vijarvai thuly inru petu vellamaaha maarum ennru eppoluthaavathu ninaiththathunndaa?