என் எழுதுகோல் விருதிற்காக எழுதியவை அல்ல. ஆயினும் இப்படி ஒருவன் இருக்கிறேன் என்பதை தெரிந்துக் கொண்டு நம் படைப்புக்களையும் நம்பிக்கையோடு வாங்கி படிக்கமட்டும் ஒரு விருது போன்ற சம்பவம் அவசியப் பட்டிருந்தது!!!
விவரத்திற்கு இங்கே சொடுக்கி பாருங்கள்..
http://mukilpublication.blogspot.com/2011/01/2011.html
பெருத்த நன்றிகளுடன்…
வித்யாசாகர்
nal vaalthukal !…vaalka!… valarka!
LikeLike
கடமையை செய்கிறோம். கடமையை சரியாக செய்தோம் என்றளவில் மட்டுமான ஒரு அங்கீகாரமாக இதை எடுத்துக் கொள்வோம் சகோதரி..
மிக்க அன்பும் நன்றிகளும் உரித்தாகட்டும்..
LikeLike
என் இனிய நண்பர் குவைத் வித்யாசாகரை மனதார வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். அருமையான, ஆணித்தரமானக் கருத்துக்களை இலட்சிய முத்துக்களை தந்துக் கொண்டிருப்பவர் வித்யாசாகர். அவர் இன்னும் இன்னுமதிகம் விருதுகளை வெல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரை இங்கே வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்…
((அன்புடன் சாதிக் அலி, ஜித்தா, சவூதி அரேபியா))
LikeLike
மிக்க நன்றி சகோதரர்.
விழா நிறைவாக முடிந்துள்ளது. அம்மா மகிழ்வாக பேசினார்கள். முகநூல் நண்பர்கள் நற்பணி மன்றத்து உறவுகள் முழு பலமாக உடன் இருந்துள்ளனர். விருது வாங்க அழைக்கையில் முதல் குரல் கேட்டதும் மேலேறி போக, வித்யாசாகருக்கு வேண்டாம் என்றார்களாம். எல்லோரும் ஒரு நொடி அதிர்ந்து போனார்களாம். பிறகு சொன்னார்களாம். அவருக்கு ஒன்று அல்ல நிறைய விருதுகள் இருக்கிறதென்று. கடைசியாய் அழைத்து ஐந்து விருதுகள் கொடுத்தார்களாம்..
சுமந்து வந்ததாய் சொன்னார்கள் அம்மா..
எல்லாம் உங்களை போன்றோரின் அன்பும் வாழ்த்தும் மட்டுமே..
மிக்க நன்றிகளுடன்..
வித்யாசாகர்
LikeLike
வாழ்த்துகள் கவிஞரே! கவிதைக்கும், கவிஞனுக்கும் கிடைக்கும் வரவேற்பு, விருதுகளின் வாயிலாக. எமக்குத் தொழில் எழுத்து; விருதுகள் என்னும் சோலைகள் நடுவில் வரும் இளைப்பாற. ஆயினும், இளைப்பாறி மீண்டும் பயணம்.
LikeLike
ஆம் சகோதரர். இதை ஒரு ஊக்கமாக மட்டும் எடுத்துக் கொள்வோம். உயர்வுகளை பல பெற்ற உங்களின் மத்தியில் இதை எனக்கானதாக நான் கொள்ள முற்படவில்லை. ஒரு படைப்பாளியின் திறன் உலக கண்களை திறந்துவைக்கும் எனும் நம்பிக்கைக்கு பாத்திரமான அங்கீகாரமாக மட்டும் எடுத்துக் கொள்கிறேன்!! உங்களைப் போன்றோரின் விசால மனம் படைத்த அன்பிற்கு மத்தியில் இவைகள் வெறும் பேர் சொல்ல தானே..
மிக்க நன்றியானேன் சகோதரர்..
LikeLike
முகநூல்: http://www.facebook.com/photo.php?fbid=1627484244745&set=a.1523632168508.2072945.1165732673#!/photo.php?fbid=1627484244745&set=a.1523632168508.2072945.1165732673
http://www.facebook.com/?ref=home#!/photo.php?fbid=1627691649930&set=a.1433913405595.2055996.1165732673
முகநூல் வழங்கிய விருதிற்கான வாழ்த்து மடல்: http://www.facebook.com/home.php#!/photo.php?fbid=1628149021364&set=a.1523632168508.2072945.1165732673
ஐந்து விருதோடு FFF-இன் ஆறாவது விருதுமாய் அம்மா மற்றும் உறவுகள்: http://www.facebook.com/home.php#!/photo.php?fbid=10150127252045799&set=a.353131820798.190464.698015798
மீனகம்: http://meenakam.com/2011/01/23/19461.html
தமிழ்த்தோட்டம்: http://www.tamilthottam.in/t6800-topic
முகில்பதிப்பகம்: http://mukilpublication.blogspot.com/2011/01/2011.html
ஒரு பதிவின் நோக்கில் மட்டுமல்ல, என் அன்புள்ளங்களின் வாழ்த்துக்களை இவ்விடம் செமித்துவைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த மேலுள்ள இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன..
முகில்பதிப்பகம், தமிழ்த்தோட்டம், மீனகம், முத்தமிழ், பிரவாகம், பண்புடன், தமிழுலகம், தமிழொளி, தமிழ்த்தென்றல், யாழ்தேவி, இன்டில், வலையகம், தமிழ்மணம், திரட்டி, விடுதலை வீரா, அமுதன் வேர்ட்பிரஸ், தமிழ்.நெட், முத்துக் கமலம், தமிழமுதம், மகாகவி போன்ற இதழ்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்திற்கு மிக்க நன்றிகளுடன்.. நிறைகிறேன்.
குறிப்பாக இந்த மொத்த மகிழ்விற்கும் முக்கிய காரணமான சகோதரன் தம்பி தமிழ்தொட்டத்து நிர்வாகி யூஜின் ப்ரூஷ் தான். படைப்புக்களை இங்கிருந்து கன்னியாகுமரி அனுப்பி, கன்னியாகுமரியிலிருந்து அதை திருச்சிக்கு அனுப்பி வைத்தது அந்த என் அன்புள்ளம் தான்..
LikeLike