கதை, கவிதை மற்றும் கட்டுரைக்கான, ஐந்து விருதுகள் வழங்கப் பட்டது!!

ஐயா பெருங்கவி கோ வா.மு.சேதுராமன் விருது கொடுக்க; உயிர் தந்தவள் பெற்றுக் கொள்கிறாள்!!

 

அம்மாவிற்கு திருச்சி போனதும் வரவேற்பு கொடுத்து, கடைசிவரை உடன் இருந்து உதவியவர்கள் "முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் உறவுகளான நண்பர் வெங்கடேஷ் ,சதீஷ் குமார் ,பாலாசத்யா, அம்மா மற்றும் அன்புத் தம்பி கவிஞர் தீ.தமிழினியன், அவர்கள் நம் ஐந்து விருதினை அன்பினால் சுமந்திருக்கும் காட்சி!!

விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்து மடல் தந்து கௌரவித்த முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் மூத்த அங்கத்தினர் ஐயா திரு.லியாகத் அலி, திரு.சத்யா பாலா மற்றும் அம்மா!!

முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் வாழ்த்து மடல்!

தமிழ்த்தோட்டம் கருத்துக் களம் அனுப்பிய வாழ்த்தட்டை!!

FFF - முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் வாழ்த்தட்டை!

உறவுகளுக்கு வணக்கம்,

இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பே போட்டிகள் அறிவித்து, விழாவில் நூறு கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு கவிமாமணி விருதும், நூறு எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து இலக்கியச் செம்மல் விருதும், நூறு கட்டுரையாளர்களுக்கு தமிழ்மாமணி விருதும் என படைப்பாளிகளை தேர்ந்தெடுத்து இன்னும் பல சேவை சார்ந்த விருதுகளும் வழங்குவதாக அறிவித்தமை கண்டு நம் படைப்புக்களும் அனுப்பி வைக்கப் பட்டன.

அதில் கவிதைக்கு – நம் “பிரிவுக்குப் பின்”னும்
சிறுகதைக்கு – “ஓட்டை குடிசை, “தகப்பன் சாமி”யும், “என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி ரொம்ப புதுசு” என்று மூன்று கதைகளும்
கட்டுரைக்கு – “அஞ்சி காசுக்கு வக்கில்ல; ஆயிரம் பேச்சு” எனும் வாழ்வியல் கட்டுரையும் தேர்ந்தெடுக்கப் பட்டு

எழுத்தாளர்களுக்கான “இலக்கியச் செம்மல் விருது” மூன்று
கவிதைக்கான “கவிமாமணி விருது” ஒன்றும்
கட்டுரைக்கான “தமிழ்மாமணி விருது” ஒன்றும் என ஐந்து விருதுகள் கொடுக்கப் பட்டுள்ளன!!!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

26 Responses to கதை, கவிதை மற்றும் கட்டுரைக்கான, ஐந்து விருதுகள் வழங்கப் பட்டது!!

 1. தமிழ்த்தோட்டம் சொல்கிறார்:

  அன்பு அண்ணா மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்

  Like

 2. வித்யாசாகர் சொல்கிறார்:

  மிக்க நன்றிப்பா…

  நம்பிக்கை நிறைந்து, முயற்சித்து, உழைக்கவும் செய்யும் அத்தனை பாடுகளும் நமக்கு இரட்டிப்பாய் கிடைக்கும் என்று நானும் எழுதி இருக்கிறேன். அதற்கான வாழ்பனுபவங்கள் கூடவே இருப்பினும் இது அன்பில் மகிழும் தருணம் உறவுகளே..

  ஒருமுறை, சிலவருடங்களுக்கு முன், ஒரு கடையில் முடிவெட்ட போகிறேன். நாவிதர் தன் காதலின் நினைவுகளை நான் எழுதுபவன் என்று தெரிந்ததும் கண்ணீரும் கவிதையுமாய் பகிர்கிறார்.

  கவிதைகளால் நனைந்த நாளேடு ஒன்றினை காட்டுகிறார். அழுது அழுது அவர் சேர்த்து வைத்த பொக்கிஷம் அது என்று புரிகிறேன்.

  உடனடியாக அதை மணிமேகலை பிரசுரம் மூலம் புத்தகம் ஆக்கினோம். அதை தொடர்ந்து அவர் மிக அதி வேகத்தை எழுத்தில் படைப்பில் காட்டினார். அந்த கவிஞர் தான் என் தளத்தில் நான் அணிந்துரை கொடுத்துள்ள கவிஞர் ஜெ.முருகன்.

  இதை ஏன் இங்கே சொல்கிறேன் எனில், அவரோடு இன்னும் ஒருவரும் அங்ஙனம் நன்றாக எழுதி சேர்த்து வைத்திருந்த கவிஞர்கள். அவர்கள் புத்தகம் வந்ததும் சென்னையில், அந்த மணலி நகராட்சி பகுதியில் பெரிய வைத்து, பிரபல நடிகர்களை வைத்து வெளியிட்டார்கள்.

  புத்தகத்தில் எனக்கான நன்றி பெருமிதமாக இருந்தது. மிக்க மகிழும் தருணம் தம்பி ஒருவன் அழைத்து, அண்ணா ஒரு புத்தகம் போட்டவர் ஒருநாளில் கவிஞரென ஊரெல்லாம் தெரிந்துவிட்டார், நீ இத்தனை புத்தகம் எழுதி இருக்கிறாய் நம் பக்கத்து வீட்டிற்கு கூட முழுதாக தெரியாதே என்று வருந்தினான். நான் அதற்கெல்லாம் வருந்தாதே. நமக்கு அப்படி எல்லாம் அவசியமில்லை. நமக்கு வருவது வரும், கவலை வேண்டாம் என்றென். நேற்று அவர் தான் அம்மாவோடு சென்று ஐந்தோடு ஒன்றாக முகநூல் இதயங்களையும் சேர்த்து ஐந்து விருதினையும் வாழ்த்தினையும் வாங்கி வந்த அன்பு தம்பி கவிஞர். தீ. தமிழினியன்.

  இதை சொல்லக் காரணம்; கடமையை கண்ணென செய்தோமெனில் அதற்கான அங்கிகாரம் நிச்சயம் வரும். வாழ்வில் நல்லதன் நோக்கில் நாம் சிந்தும் துளி வியர்வை கூட பின்னாளில் இரட்டிப்பாய் கிடைக்க இருக்கும் மகிழ்வுகளின் வெற்றிகளின் மூலதனமன்றி வேறில்லை உறவுகளே..

  பெருத்த நன்றிகளுடன்..

  வித்யாசாகர்

  Like

 3. கோவை கவி சொல்கிறார்:

  VAALTHUKAL!……VAALTHUKAL….VAALTHUKAL….Makilchchi!……VAALKA! ……..VALRKA…….

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி சகோதரி..

   இறை அருளால்; விரைவில் தாங்களும், தங்களை போலுள்ள நம் நல்லுரவுகளும் கூட இதுபோன்ற நன்மதிப்பையும், மேலும் பல நன்மைகளையும் பெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

   தங்களை போன்றோரின் அன்பு தானே நமக்கு எப்பொழுதும் பலமாய் இருந்து நம்மை காப்பது..

   Like

 4. வசந்த குமார் (தலைவர் / முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கம்) சொல்கிறார்:

  அன்பு சகோதரன் வித்யாசாகருக்கு கிடைத்திருக்கும் இவ்விருது அவருடைய வெற்றி வாழ்க்கையில் மேலும் ஒரு படிக்கல்லே..இன்னும் மென் மேலும் விருதுகள் பல பெற்றிட முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றேன்…..

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி சகோதரர்..

   உங்களன்பு வாழ்வின் நெடுகெங்கிலும் நினைவில் நிற்க கூடியது. அம்மாவை இன்று அழைத்தாலும் உங்களை பற்றியெல்லாம் தான் சொல்கிறார், குறிப்பாக லியாகத் ஐயா, பார்த்தீபன், சதியா பாலா மற்றும் சகோதரர்களின் நேரத்திற்கு செய்த அந்த உதவி, எதிர்பார்ப்பின்றி அம்மாவை அத்தனை பத்திரமாக கொண்டுசென்று விருது வாங்கி மீண்டும் திரும்பும் வரை உடன் இருந்து ஒத்துழைப்பு கொடுத்து, மேலும் வாழ்த்து மடலும் கொடுத்து வாழ்த்தி; நிறைவாய் நன்றியாக நின்றுவிட்டீர்கள் மனதில்!!

   Like

 5. swisssri சொல்கிறார்:

  வணக்கம் கவிவித்தகனே
  விருதுகள் பல உமைவந்து சேர்கையிலே பரவசம் பல அடைந்தோம்
  வாழ்த்துக்கள் பல, பல்லாண்டு உம்பயணம் தொடர வாழ்த்துகின்றோம்.
  வாழ்த்துகளுடன்
  சுவிஸ் ஸ்ரீ

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   என்னன்பிற்குரிய உறவே..

   உங்களின் வாழ்த்துக்களால் தான் நிறைந்து கிடைக்கிறது என் எழுத்துக்கள். இறைவன் அருளும் உங்களை போன்றோரின் அன்பும் எப்பொழுதிற்குமாய் இருக்கும் என்றே நம்புகிறேன்..

   மிக்க நன்றிகளும் அன்பும் உரித்தாகட்டும்..

   Like

 6. lakshminathan சொல்கிறார்:

  vidya,

  romba santosama iruku,valthukall pala

  lakshmi nathan

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி லக்ஷ்மி. மிக நெகுழ்ச்சியான நாள் அது. அம்மாவை நிறைவாக மகிழ்வித்த நாள்!!

   எல்லாம் உங்களை போன்றோரின் அன்பும் நம்பிக்கையும் ஆசிர்வாதமும்தான் காரணம். விரைவில் உங்களின் புத்தகங்களை வெளியிடுங்கள் லக்ஷ்மி. மிக்க வாழ்த்துக்கள் உங்களுக்கும்…

   Like

 7. அகில் சொல்கிறார்:

  கதை, கவிதை, கட்டுரை என்ற முத்துறைகளிலும் ஐந்து விருதுகள் பெற்று முத்திரை பதித்திருக்கும் வித்தியாசாகருக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   பெருத்த நன்றிகளானேன். ஒரு படைப்பாளியின் வலி, துடிப்பு, ஏக்கம், கோபம், அக்கரை, உணர்வு, எல்லாம் பிற படைப்பாளிக்கும் தெரியும் என்பதான ஊக்குவிப்பு உங்களுடையது. உங்களை போன்றோரின் உறுதுணையும் இந்த விருதினை பெறுவதற்கான பலத்தை எனக்கு தோழமையுடன் கொடுத்துள்ளது என்பதை, எழுத்து என் மூச்சிலிருந்து; மூச்சு என் உயிரை என்னிலிருந்து பிரிக்கும் வரை மறவேன்..

   பெருத்த நன்றிகளின் கைகூப்புக்கள்.. என் படைப்புக்களை அவ்வப்பொழுது அழகாக வெளியிட்டு பெருமை சேர்த்து; என்னை உலக மக்களிடம் கொண்டு சேர்த்து என் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருக்கும் உங்களை போன்றோருக்கும் உரியது!!

   Like

 8. நிலா - இலண்டன் சொல்கிறார்:

  என் அன்பு நண்பனே வித்யா!

  ஈழத்தமிழச்சி இவளின் பெருமை சேர் பாராட்டுக்கள்.

  எழுத்தைத் தவமாகக் கொண்டிருக்கும் உன் எழுத்தில் கிறங்கிப் போய் உன்னைத் தேடி வந்திருக்கும் விருதுகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  உன் எழுதுகோல் எங்கள் உறவுகளுக்காகவும் தலை தாழ்த்தி தாள்களைத் தொட்டதால் உன் வெற்றியில் ஒவ்வொரு ஈழத்தமிழனும் தலை நிமிர்கிறோம்.

  லண்டனில் GTV தொலைக்காட்சி செய்தியில் மிகவிரிவாக உன்பணி, விருதுகள் பற்றிச் சொன்னபோது ஆனந்தக்கண்ணீர் என் விழிமடலை நனைத்தது நண்பா!

  ஒன்றல்ல, இரண்டல்ல, ஐஐஐந்த்ந்த்ந்த்து விருதுகள்… அப்பப்பா! வாழ்த்துக்கள் தோழரே!

  மேலும் உன் பணி தொடரட்டும் நண்பா!
  நாமும் அடிக்கடி இப்படி இன்ப மழையில் குளிக்கலாம் சிநேகிதனே!

  வாழ்க நின் பணி! வளர்க தமிழ்!!

  உன் மகிழ்வில் மகிழ்பவள்.
  நிலா – லண்டன்

  பிற்குறிப்பு
  அம்மா சொல்கிறார் : என்னையும் சேரடி.

  ஆம் தானும் இவ்வாழ்த்தில் இணைவதாக அம்மா கூறிய வசனம் இது.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   விருதுகளின் அருமையை வரிகளில் வடித்தாய் தோழி..

   இதயத்தின் அன்பை தோழமையில் பூரிக்க மெய்ப்பித்தாய். வலியில் தோள் கொடுக்கும் உள்ளத்தை மகிழ்வில் பூரித்து ஆர்ப்பரித்ததில் கண்டேன். மிக்க நன்றி என்னன்பு நிலா. அம்மாவிற்கும் முழு அன்பையும் வணக்கத்தையும் சொல்லுங்கள். எல்லாம் உங்களை போன்ற உறவுகளின் அன்பிலும் வாழ்த்திலும்; என் மீது கொண்டுள்ள நல்ல நம்பிக்கையின் அதிர்விலும் கிடைத்த விடையமின்றி வேறென்ன. மொத்தத்தில் நான் எழுதுவது சிறப்பு செய்யப் படுவது எல்லாமே கூட உங்களின் உங்களை போன்றோரின் நம்பிக்கையின் உச்சத்தால் தானே..

   அந்த நம்பிக்கையை காப்பவனாய் இறைவன் எனை வாழும் நாள்வரை வைத்திருந்தால் பேரின்பம் பட்டு பிறப்பினை வெல்வேன் நிலா..

   மிக்க அன்பும் நிறைவான மகிழ்வும்; உங்களுக்குமான வாழ்த்துக்களும் அம்மாவிற்கானா நன்றிகளோடுமாய்…

   உங்களின் வித்யா…

   Like

 9. ilavazhuthi சொல்கிறார்:

  vaalththukkal sakothara

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றிகள் உரித்தாகட்டும் சகோதரா..

   எழுத்துக்களில் கால தவம் இருக்க யெடுத்த பிறப்பிது. படைக்க வேண்டிய சாதனை என்பதைக்காட்டிலும் செய்ய வேண்டிய வேறு கடமைகள் நிறைய உள்ளது. வெறும் வித்யாசாகர் எனும் சட்டையை மக்கள் கொடுத்த பெருமையான வண்ணம் பூசி அணிந்துக் கொள்வதில் ஒன்றுமில்லை. அந்த நம்பிக்கையை, என் உறவுகள் என் மீது எப்போழுதுமாய் கொண்டுள்ள நம்பிக்கையை, காலத்திற்கும்; எழுத்தினால் பூர்த்தி செய்து ஓயும் ஓர் நாளில் –

   உங்களை போன்றோரின் அன்பும் வாழ்த்துக்களும் கூட அதற்கு காரனமானதாக இருக்கும் உறவே..

   Like

 10. கவித் தம்பி..! வணக்கம்.

  கண்டுபல நாளானாலும்
  கவிதையும் கருத்தும்
  காண்கிறேன் பொழுதும்!

  எழுத்தைத் தவமாய்
  இயற்றுவது எப்படி
  என்பதைக் கற்க…
  எல்லாரும் அணுக வேண்டிய
  இனிய முகவரி தங்களுடையது
  என்பதை அறிவேன் நான்!

  என்
  கங்கை மணிமாறன் .வேர்ட் பிரஸ்.காம்
  கண்டு பதிலிடுக. நன்றி

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   தீ பொறி பறக்கும் கனல் கொண்ட தமிழில்
   வாழ்வின் வசந்தம் பரப்பப் பேசும் – சந்தக் கவி
   எம் சொந்தக் கவி
   ஒல்லிக் கவிஞனாய் இருந்தாலும் – தன்
   வெல்லும் வார்த்தைகளை எக்காலத்தையும் தாங்கும் கவி
   நான் பார்த்து ரசித்த கவி
   பேசினால் இவர் போல் பேசவேண்டும் என்று
   முதன்முதலாய் நான் கண்டு வியந்த கவி

   இத்தனை அருந்தும் அன்பிலும் பண்பிலும்
   வானம் கடந்து நிற்கும் என்றைக்குமான எங்களின்
   குவைத் மக்களின் மனமெலாம் நிறைந்த –
   பெரும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய

   ஐயா அவர்களுக்கு இணையத்தின் பெரு – வரவேற்பும்
   மிக்க அன்பும் வாழ்த்துக்களும் வணக்கமும் நிறையட்டும்!

   தங்களின் இந்த வலைப் பூவைப் பற்றி வேறென்ன சொல்ல ஐயா, இரண்டு
   சொல்லலாம். ஒன்று, இப்படி தன்னை அறிமுகப் படுத்தவே அத்தனை தன் மீது அசரா உறுதியும், நம்பிக்கையும் – அவசியப் பட்டால் நல்லவைக்கே சமுகம் எரிக்கும் தைரியமும் வேண்டும்.

   இரண்டு; நீங்கள் சொன்ன அத்தனைக்கும், உங்களின் இத்தனை அழுத்தமான நம்பிக்கைக்கும் மிக முழு தகுதியானவர் நீங்கள்.

   மிக்க வாழ்த்துக்களும், இன்னும் பல சாதனை படைக்க இறை அருளும் நிறையட்டும் ஐயா..

   வீட்டில் சகோதரிக்கும், குழந்தைகளுக்கும் வணக்கத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள். அவர்கள் மிக நன்றாக வருவார்கள் என்று எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு!

   பேரன்புடன்…

   வித்யாசாகர்

   Like

 11. Ratha சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் வித்யாசாகர் !!!

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி ராதா, தொடர்ந்து நம்மோடு தான் இருக்கிறீர்கள் என்பதில் மகிழ்கிறேன். வாழ்த்த வாய்ப்பு வரும் போதெல்லாம் வந்து கலந்து கொல்வதற்கு மிக்க நன்றி. உங்களை போன்றோரின் என் மீதான நம்பிக்கையே எனக்கான பலம். மிக்க நன்றி ராதா..

   Like

 12. aruleesan சொல்கிறார்:

  உணர்ச்சித் தமிழன்
  உறங்கா கவிஞன்
  உறக்கம் தொளைத்து
  உணர்வை பெருக்கியவன்

  உள்ளம் மகிழும் இவ்வேளையில்
  உளமார நாமும் வாழ்த்தி –
  உலகமே போற்ற சாற்றி நிற்போம் .

  நன்றியுடன்
  அருளீசன்

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   உங்களின்; எனக்கான வார்த்தைகள் தான் விருதுகளாக இருக்கின்றன ஐயா. மிக்க நன்றியானேன். இதுபோன்ற இதயங்களை பெற காலதவம் செய்தேனோ. எழுத்து இத்தனை பெரிய வரங்களை தருமெனில் அதையே எண்ணி வாழ்வதிலும் நிறைவே!!

   Like

 13. seasonsali சொல்கிறார்:

  மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி ஐயா. விருதுகள் உழைப்பிற்கும் திறமைக்கும் தரப் படுகிறது என்றாலும் அது உங்களைப் போன்ற அன்புள்ளங்களின் வாழ்த்தினால் மட்டுமே மேன்மை படுத்தப் படுகிறது!!

   Like

 14. kovai.mu. sarala சொல்கிறார்:

  இந்த விருதுகளை நான் பெற்றுக்கொண்ட பூரிப்பு எனக்கு

  “நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துகள் ”

  அதற்கான வெற்றியை அடைந்தே தீரும் .

  வித்யா உங்களை நினைகையில் பெருமிதம் பொங்குகிறது மேலே செல்ல செல்ல பணிவு இருந்தால் தான் எப்போதும் நிமிர்ந்து செல்ல முடியும் என்பார்கள் அதற்க்கு உதாரணம் நீங்கள் .

  இந்த விருது வாங்க தகுதியானவர நீங்கள்.
  நேற்று எழுதி இன்று விருது வாங்கும் வியாபார எழுத்தாளன் அல்ல நீங்கள்.

  இந்த சமுகத்தின் துயர் துடைக்க துன்பத்தை அகற்ற இளைய சமுதாயத்தின் இன்னல் நீக்க என்று
  எழுத்தின் மூலமாக உங்கள் எண்ணங்களை விதைத்து இருக்கிறீர்கள்.

  நாளைய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கிறீர்கள் .
  உங்களுக்கு இந்த விருது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   இந்த மடல் எனக்கான ஆறாம் விருது சரளா. இல்லை இல்லை, இதுபோன்ற வார்த்தைகளே எனக்கான முதல் விருது. எனினும்,அதன் பின் கிடைத்த இந்த விருதுகள் ஐந்தையும் அம்மா சென்று பெற்றுக் கொண்டதில் ஒரு பெரு நெகிழ்வும் மகிழ்வும் ஏற்பட்டது உண்மை.. தோழி!!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s