தனக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த
ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி
என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த
தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் –
அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் மீதான பற்று
சமுகத்தின் மீதான பொதுநல உணர்வை நாமும் நமக்குள்ளும் நிறைத்துக் கொள்வோம்!
என் கவிதையை படிக்கும் முன்பு தங்கள் அனைவரிடமும்
ஒரு மன்னிப்பினை கோரிக் கொள்கிறேன்..
வன்மம் உள்ள வார்த்தைகளை இதுபோன்ற கவிதைகளில் கையாளும் நிமித்தம் உள்ளது.
பொதுவாக, நாய் என்றெல்லாம் எழுத நானே விரும்புவதில்லை –
அதிலும் குறிப்பாக நாயிற்கு ஒப்பீடாக மனிதனை எண்ணுவதேயில்லை,
என்றாலும் – என் மீனவ உறவுகள் இரக்கமின்றி கொன்று வீழ்த்தப்பட
கதறி அழுத அந்த தாயின், மனைவியின், சகோதரிகளின் கண்ணீரை கண்டு துடிக்கையில் வந்து வீழ்ந்த வார்த்தைகளிது –
தலைப்பு : ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!
போன பாதி உசுர காக்க
கடலை பார்த்து போன எங்க –
மீதி உயிரை தின்ன நாயி –
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!!
பாவம் மேல பாவம் சேர்த்து
கடல் கடலா சுத்திவந்து
தமிழன்; தலைய பார்த்து சுட்டது
கேட்டா கடலில் – கோடு போட்டுக் காட்டுது!!
எம் சிறகொடிக்கப் பாக்குது
இனமருக்க பாக்குது –
நன்றிகெட்டோர் உறவால – எம்
கருவறுக்க துடிக்கிது!!
தமிழனென்றால் ஏத்தமா
திருப்பி யடிக்காத் – துச்சமா
மொத்த தமிழர் எழுந்து நின்னா
சிங்களந் தான் தாங்குமா?
ஆறுகோடி தமிழனும்
நூறு கோடி மனிதனும்
சேர்ந்து செய்த கொலையடா
மனிதமில்லா செயலுடா!
கர்ப்பினியை சுடுவதும்
மீனவனை கொள்வதும்
துயிலம் இடித்துத் தகர்த்ததும்
எவங் கொடுத்த தைரியம் ?
நாம் சும்மா இருந்த மடமைடா!
கடலை கூட கேட்குது தமிழனை வஞ்சகமா கொல்லுது!!
ஆடும் வரை ஆடட்டும்
அடிக்கும் வரை அடிக்கட்டும்
தமிழன் சேரும் வரை சிரிக்கட்டும்
ரத்தம் சுடும்வரை திமுறுடா;
தமிழனை உன் ஆணவத்தால் எழுப்புடா!!!
சிறகொடிச்ச பாவமும்
முலையறுத்த கோபமும்
ரத்தம் பாய விட்ட கொடுமை
அத்தனைக்கும் பதிலுடா; திருப்பியடிக்கும் வழியடா!!
ஆளுபவர் அழுவட்டும்
இருக்கை மீது உறங்கட்டும்
எழுந்து நிற்கும் இளைஞர் அணி –
துணிந்து – மீனவனை காக்கட்டும்; ஈழத்தை மீட்கட்டும்!!
———————————————————————————————–
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள்
ஒன்றாதல் கண்டே-என்றான்
இனமீட்சிக் கவிஞன் பாரதி தாசன்!
எங்கள் பகைவர் ஒன்றாய்த் திரண்டார்
இங்குள்ள தமிழர்கள்
இரண்டாதல் கண்டே
என்று
வடிக்கிறோம் கண்ணீர் –
வங்கக் கடல் போல!
ஆட்சித் தலைமையும்..
(அந்த..)
அம்மையார் காலடிக்கு
அடிமைச் சாசனம்
எழுதிக் கொடுத்துவிட்டு ..
அமைச்சர் பதவிகளில்
ஆன்மசுகம் அடைகிறது!
பொங்கிக் கிளம்பும்
புயல்வேக இளைஞர்களை
மங்கிப் போகவைக்க –
மாண்புமிகு அதிகாரம்
சட்டத்தின் ஆட்சி என்னும்
சங்கிலியைக் காட்டி
அவ்வப்போது
அடக்கி வைக்கிறது!
அழுது புலம்பவும்
அனுமதி இல்லை!
கண்ணீர் வெளிப் பட்டால்
கைமாறிப் போய்விடுமோ
அதிகாரம் ..என்று
அமைதி காக்கிறது –
அமைதிப் படையை
வரவேற்கப் போகாத
”ஆண்மைத் தமிழாட்சி”!
காலம் மாறலாம்;
காட்சிகள் மாறலாம்!
களங்களும் மாறலாம்!
காலத்துக்குக் காலம்
மான உணர்ச்சிகளுமா
மாறிப் போகும்..!?
LikeLike
ஆணவச் சிங்களர்
அழிப்பு வெறிக்கு
மீனவக் குடும்பங்கள்
மீண்டும் மீண்டும்
இரையாவதை..
எதிர்த்துப் பேசினால் …
இறையாண்மை போய்விடுமாம்..!
என்னடா இந்தியா..!
எதற்கடா இந்தியா..?
தின்று தமிழனைத்
தீர்க்கவா இந்தியா..!!
LikeLike
அப்பாப்ப்பா… இந்த உணர்வு தான் ஐயா வெடிக்கிறது எனக்கும்; ஒத்தையாய் எழுந்து விழுவதில் எரிவதில் இனி அர்த்தமில்லை, மொத்தமாய் எழுவோம், விடிவை அடைவோம்’ எனும் துணிகர பொருப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் எழ; வீழ்பவர் வீழ்வார், வாழ வேண்டியபவர் வாழ்வார்!!
மிக்க நன்றி ஐயா…
LikeLike