
தமிழ் புத்தாண்டு துவக்கத்தை முன்னிட்டு ஐயா திரு. செந்தமிழரசு நாட்காட்டியினை வெளியிட திரு. எஸ்.எம்.ஹாரிப் மரைக்கார் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்!

தமிழ் புத்தாண்டு துவக்கத்தை முன்னிட்டு ஐயா திரு. செந்தமிழரசு நாட்காட்டியினை வெளியிட திரு. எஸ்.எம்.ஹாரிப் மரைக்கார் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்!

என்னவளும், மகள் வித்யா பொற்குழலியும், நானும், மகன் முகில் வண்ணனும், ஐயா திரு.செந்தமிழரசுவும், பின்னால் தலைவர் திரு. K. ஜெயபாலன் அவர்களும்.
பொங்கல் கொண்டாட்டமும், புத்தாண்டு பூரிப்புமாய் தலை வாழை இலையில் உணவு பரிமாறி, கவிதை அரங்கேறி, சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டு வந்து நிறைந்தவர்களின் மனமெல்லாம் இனிக்க இனிக்க நடந்தேறியது முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றத்தின் கலாச்சார விழா!!
தலைவர் திரு. K.ஜெயபாலன் தலைமையில் விழா சிறப்புற நடந்தேற, சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் செய்தி வாசிப்பாளரும் மற்றும் தீரா தமிழ் பற்றும் இனப் பற்றும் கொண்ட ஐயா திரு செந்தமிழ் அரசு அவர்களும், அன்பின் நட்பின் சிறப்பாளர் மேடை பேச்சாளர் திரு. ராஜசேகரன்அவர்களும், வீரிய பேச்சுக்கு தன்னை சொந்தமாக்கி வரும் ஐயா திரு ஈ.எம். ஹனிபாஅவர்களும், தமிழனுக்கு உதவி எனில் தானாக வந்துதவும் பொறியாளர் திரு.சேகர்அவர்களும், எங்கெல்லாம் தமிழர் தலை உயர வேண்டுமோ அங்கெல்லாம் தன் பங்கையும் ஆற்றத் துடிக்கும் பொறியாளர் திரு. ராமன் அவர்களும் கலந்து சிறப்பிக்க, கவிதாயினி திருமதி ராதிகா செல்வம் அவர்களால் விழா சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டது.
விழாவின் மிக சிறப்பாக எந்த வித மன்றத்து பாகுபாடுகளுமின்றி உதவும் கைகள் அமைப்பு, குவைத் பொங்குதமிழ் மன்றம், தாய்மண் கலை இலக்கிய பேரவை, குவைத் காயிதேமில்லத் பேரவை என எல்லோரும் பங்குற்று தமிழரின் திருநாளில் தன் ஒற்றுமையினை பறைசாற்றி பொங்கல் குறித்த, பொங்கல் மற்றும் புத்தாண்டு குறித்த சிறப்புரை ஆற்றி சிறப்பித்தனர்.
குறிப்பாக ஐயா திரு. ஈ.எம். ஹனிபா பேசுகையில் வாழ்வில் அனேக வருத்தங்கள் சூழ்நிலை மாற்றங்கள் நேர்ந்தாலும் அதற்கெல்லாம் தளர்ந்து போகாமல் திடமான மனநிலை கொள்ள வேண்டும் என்றும், அதற்கு குறைந்த பட்சம் வருத்தங்களுக்கூடேயும் சிரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி பிறர் சிரிக்க தான் வாழ்வதெனில் முதலில் தான் சிரிக்க வேண்டுமெனும் கருத்தினை முத்தாய்ப்பாக சொல்லி அமர்ந்தார்.
அமைப்பினர் சார்ந்தும், கவிஞர்கள் சார்ந்தும் கவிதையும் நற்சிந்தனைகளின் களமுமாய் அரங்கம் தமிழ் வாசனையில் மணத்ததோடன்றி சர்க்கரை பொங்கலும் தலைவாழையிலை உணவுமாய் வயிறார மாந்தார விழா மகிழ்வுடன் நிறைவுற்றது.
விழாவின் மொத்த வெற்றிக்கும் காரணமாக, பின்னால் நின்று அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடக்கும்வண்னம் கவனித்து, ஒழுங்குப் படுத்தியமை பொருளாளர் திரு.நாராயணசாமி திருச் செல்வம் மற்றும் இணை தலைவர் திரு K.நடராஜ் அவர்களையும் கூட சாரும்.
இவர்களுக்கு மத்தியில் அரங்கம் நிறைந்த காதடைக்கா சப்தமாக ஒலி அமைப்பினை ஏற்பாடு செய்திருந்த திரு. ஏசுரத்தினம் முதல் அனைவருக்கும் நன்றி அறிவித்தவண்ணம், விழா இன்னொரு பொங்கலினை எதிர்பார்த்து நிறைவு கொண்டது.
ஆகா, தமிழன் கூடும் இடமெல்லாம் தன்னை தமிழனாய் அடையாளப் படுத்தத் தவங்கிவிட்டான் என்பதற்கும், உலகின் எந்த மூளையில் இருப்பினும் தமிழர் தமிழராகவே தன் கலாச்சாரம் மாறாமல் வாழ்வார் என்பதற்கும் இக் குவைத் பாலை மண்ணும் அடையாளமாகி வருவதில் பெருமை கொள்கிறோம்!!
வித்யாசாகர்
எங்கும் பதித்திருக்கும் எம் தமிழன் காலடியே
இங்கும் பதித்துவிட்டான் பாலைவன்ம் குவைத்தினிலே…
பெரியவர்கள் தங்கள் குழந்தைகளையும் நிகழ்ச்சி வழங்குபவர்களாக வளர்க்க வேண்டும்
LikeLike