தற்காலிகமாக கிடைத்த, பெருமைசெய்த ஐந்து விருதுகள் அதற்கான தன் மதிப்பினை கூடவே கொண்டு வந்ததா? அல்லது, காலம் இப்படி தான் வருத்தத்திற்குப் பின் மகிழ்வினையே தருமா எனும் வியப்பான வாழ்பனுபவத்தோடு இன்னொரு மகிழ்வினையும் உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் உறவுகளே!!
என் படைப்புக்களில் எண்ணூற்றி ஐம்பது புத்தகங்களை மலேசியாவில் உள்ள ஐம்பது நூலகங்களுக்கு தருவதற்காக பணம் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம். இது தொடர்ந்து மலேசியாவின் மொத்த கடைகளிடமும் தமிழரிடமும் நம் படைப்புக்களை கொண்டு செல்ல இருப்பதாகவும் பூரிப்பு செய்தி தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு, மாணவர்களுக்கு பயன்படுவது போல ஊக்கம் தரும் சிந்தனை தூண்டும் சிறுகதை மற்றும் குறுநாவல்கள் நிறைந்த தொகுப்புகளாகிய திறக்கப் பட்ட கதவு, சாமி வணக்கமுங்க, வாயிருந்தும் ஊமை நான் மற்றும் கவிதை தொகுப்புகளாகிய வீழ்ந்தது போதும் வாழ்ந்து காட்டு, இதோ என் வீரமுழக்கம், எத்தனையோ பொய்கள், வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை மற்றும் பிற நூலகங்களுக்கு என பிரிவுக்குப் பின் கனவு தொட்டில் (நாவல்) மொத்தம் 850 புத்தகங்களை பெற்று மறைமுகமாக என் படைப்புக்களின் விற்பனைக்கு எனபதை விட என் புதிய புத்தகங்களுக்கான வழியை வகுத்தமைக்கு மலேசியாவின் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சார்ந்த நிர்வாகிகளுக்கு” என் மனம் நிறைந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
பிரசுரங்களுக்கு அனுப்ப வேண்டிய, செலவிட்ட பணம்தான் இதுவும், என்றாலும் அதை என் கையில் என் படைப்புக்களுக்காக என்று வாங்குகையில் என்னவோ நான் என் இத்தனை வருடம் எழுதி உழைத்த உழைப்பிற்கு முதல்மாத சம்பளம் பெறுவது போல் உணர்ந்தேன்!
பொதுவாக படைப்புக்களுக்கு குறைந்த விலையே வைக்கிறோம். பதிப்பகத்தாரிடம் வைக்கும் வேண்டுதலில் இதுவும் முக்கியமான ஒன்று. என்றாலும், என் படைப்புக்களின் முதலில் குறிப்பிட்டுள்ளவை போல, புத்தக வருமானத்தின் முதல் பாதி என் படைப்புக்களை வாங்கும் சமூகத்தின் ஏழ்மையை என்னளவு அகற்றவும், மறுபாதி புதிய ஆக்கங்களை கொண்டுவரவுமே இதுவரை பயன் படுத்தப் படுகிறது. உண்மையில் பார்க்க போனால், வராமலே கொடுத்தவை தான் அதிகம்.
ஐந்தாயிரம் புத்தகமெல்லாம் விற்றதாய் சொல்கிறார்கள். வெறும் சொல்கிறார்கள் அவ்வளவு தான். முதலாய், முதலாய் இப்போது தான் என் படைப்புக்களுக்கென மொத்தமாய் கொடுக்கப் பட்டுள்ளது. எனினும், இதில் பிரசுரங்களுக்கான அச்சு கோர்ப்பு செலவுத்தொகை போக, மீதியுள்ள எனக்கான பணத்தில் பாதி ஈழத்தில் மழைவெள்ளத்தால் துன்புறும் உறவுகளின் நிவாரண நிதிக்கும், மீதி புதிய புத்தகங்களின் அச்சு செலவிற்கும் கொடுக்கப் படுகிறது. (ஈழத்து உறவுகளுக்கான உதவி வழங்கிய பின் அதை அவர்கள் பெற்றுக் கொண்ட ரசீது இங்கே மறுமொழி இடுமிடத்தில் நகல் செய்து பதியப் படும்)
வாழ்வின்; நல்லவைக்கென சொட்டிய ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்; பிறகு கிடைக்க இருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி, இரட்டிப்பு மதிப்பு, இரட்டிப்பு வெற்றிக்கான மூலதனமின்றி, வேறில்லை; என்பதனை, வாழ்வின் நிறைய நிலைகளில் அனுபவமாய் உணர்ந்து வருகிறேன். அந்த உணர்தலின் விளிம்பில் சில சொட்டுக் கண்ணீர் துளிகள் மீண்டும் நன்றியாய் இறைவனை நோக்கியும் சிந்துகின்றன!!
எப்பொழுதும் என் எழுத்திற்கு பலமாய் இருக்கும் எல்லோருக்குமான நன்றிகளோடு..
வித்யாசாகர்
http://vidhyasaagar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/
விருதுகளும் வாழ்த்தும், நம் எழுத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம் தானே தவிர; நம்மை நிறம் மாற்றும் சாவியல்ல’ என்பதை திண்ணமாய் கொண்டுள்ளேன்..
நாம் செய்வதை செய்வோம், நடப்பவை எல்லாம் உங்களை போன்றோரின் அன்பினால் நன்றாகவே நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
வணக்கம்
அன்பு கவி மன்னனே. பெருமிதம்;
அண்ணன் தம்பி உறவுக்காய் உறங்காமல்
அனல் உடன் உன் கண்கள் சிவந்திருக்க
அத்தி பூத்தாற்போல் இல்லாமல்,
அன்றன்று அதிகாலை வேலையிலும்
அகந்துவிரியும் ஆதவன் போல்,
ஆற்றியப் பணிகளுக்கு ஆறுதல் தந்தவருக்கு
அளப்பரிய நன்றிகளும் வாழ்த்துக்களும்.
அன்புக்கு இனியவனே கவிக்கு மன்னவனே
அகிலம் முழுக்க உன் பெருமை சொல்ல
அடியேனின் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
அன்புடன் வாழ்த்திடும்
அன்பு சுவிஸ் ஸ்ரீ
என்னன்பு உறவிற்கு மிக்க நன்றியானேன். உங்களைப் போன்றோரும் என் அன்பு தோழர் லக்ஷ்மிநாதன் போன்றோரும் நிலா போன்றோரும் தான் என் விருதுகள் ஸ்ரீ. உங்களை போன்றோரின் அன்பு எனக்கான வரம். அதை தாண்டி இத்தனை வருட அங்கீகாரத்திற்கு கிடைத்த விருதுகளும், இதுபோன்ற மகிழ்வான நினைவுகளும் எழுத்திற்கான நல்ல அடையாளத்தையும், மேலும் உழைப்பதர்கான நம்பிக்கையையும் நிறைய தருவதில் இறைவனுக்கும் உங்களை போன்றோருக்கும் இந்த மலேசிய உறவுகளுக்கும் நன்றிக்கும் உரியவனாய் இருக்கிறேன்!!
ongi nirkum vanalavia marangalellam aadil irunthuthan thontriyathu enum solluketra
vagil valrnthu kondirukum en vidyavirku vetrigal valara valthukkal
lakshminathan
மிக்க நன்றி லக்ஷ்மி.. உங்கள் வாக்குப்படி இது ஆரம்பம் தான், பதின்மூன்று வருடம் கழித்து தான் நாம் அடையாளமே பட்டிருக்கிறோம், இனியேனும் நமக்கான காலம் இருக்குமென்று நம்புவோம் லக்ஷ்மி. அதிலும் உங்களைப் போன்றோரின் அன்பு அதற்கு முழு துணையாய் இருக்குமென்றும் நம்பிக்கை கொள்கிறேன்!!