புத்தகத்திற்கும் பூவிற்கும் கல்யாணம்!!

ணமகன்: ராமநாதன்  ரவி தமிழ்வாணன்

ணமகள்: சிந்தாமணி நாராயணன்

நாள்: 07.02.2011

நல்லுள்ளங்களுக்குப் பிறந்த வெள்ளை மனங்களுக்கு வாழ்த்து!!

வெள்ளை வானத்தில் –
வீழாநட்சத்திரங்கள்
இன்று இவர்களை எண்ணி மின்னுமோ..

அடர்ந்த அமைதியில் ஒளிரும் நிலவு
இன்று இரவு மட்டும் தன் கண்களை மூடிக் கொண்டு
இருட்டிற்குள்ளிருந்து இவர்களின் வாழ்வின் வாசல்தனை
வெளிச்சம் நோக்கித் திறக்குமா…

காலையில் உதித்த சூரியன்
தனக்கான தீஞ்சுடர் கைகள்தனை கட்டிக் கொண்டு
உளம்குளிர இவர்கள் –
வையகம் போற்ற வாழட்டுமே யென்று வாழ்த்துமோ..

அல்லது –

வானத்திற்கு கீழே
பூமியில் பூத்த மலர்கள் வாசத்தினை எல்லாம்
இவர்களுக்காய் கொடுத்துவிட்டு –
வாழ்த்துக்களாக மட்டுமேப் பூத்துக் குலுங்குமோ..

அல்லது –

புத்தகங்கள் சேர்ந்து வாழ்த்துமோ..
எழுத்துக்கள் ஒன்று கூடி பூமழையாய் தூவுமோ..
தமிழின் ஆதிவேர் ஒன்று – முன்வந்து
இந்த தமிழ்வாணரின் பேரன்.. பேத்தியை..

லேனா ரவியின் பிள்ளைகளை
உலகத்தின் முன்னிலையில் – நிறுத்தி
பாசத்திற்கு சாட்சி இவர்களெனக் கைகாட்டி
அட்சதைகளை இட்டுப் போகுமோ?!!!!!!!

போகும்;
போகும் போகும்..

உலகப் புரட்சிகள் வெடிப்பது
எழுதுகோல் முனையி லிருந்துமெனில் –
அந்த எழுதுகோலின் தலையெழுத்தினை நிர்ணயித்த
புத்தகங்களின் பிறப்பிற்கு –
பல படைப்பாளிகளின் பிறப்பிற்கு –
காரணமான அத்தனை நன்றியின் உணர்வுகளும்
ஆசியாய் வந்து உங்களை வாழ்த்திப் போகுமென் அன்புள்ளங்களே!!

உலகின் வேர்களில் தனக்கான
அடையாளத்தை பதித்து வைத்த –
அன்பிற்கும் பண்பிற்கும் பாசத்திற்கும்
விலாசம் தந்த பெற்றோர்;

அந்த விலாசத்தில் உயிர் பதித்து வாழும் –
பெரிய தகப்பன் தாய்; உறவுகள்,

நல்ல சுற்றம்; போதுமான கல்வி;
உரித்தான பணியமர்வு; எல்லாம் மிகுந்து

வாழ்வின் வசந்தங்களை கொண்டு வர அன்பு மனைவியும்,
நல்வரங்களாய் பிள்ளைகளும், வெற்றியும், கொண்டாட்டமுமாய்
செல்வங்கள் பதினாறும் பெற்று
எல்லாம் நல்லாசைகளும் நிறைவேறி
வாழ்வின், பிறப்பின் – காரணத்தை வெற்றிகளால் நிரப்பி
நீடு வாழ, பெருவாழ்வு வாழ –
என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் இறை வேண்டுதலும் உரித்தாகட்டும்!!
———————————————————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்த்துக்கள்! and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to புத்தகத்திற்கும் பூவிற்கும் கல்யாணம்!!

 1. lakshminathan சொல்கிறார்:

  iru manam valthini puthu mugamai sonna vidyairku nanrti

  en kavithai thokupu ready,enga yara pakanum nu sollunga

  nantri

  lakshminathan

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   PDF அல்லது வேர்ட் மூலம், தட்டச்சு செய்யப் பட்ட படிவம் ஒன்றினை mukilpublications@gmail.com என்ற மின்னசல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். கண்டு, பின் விவரம் உங்களுக்குத் தெரிவிக்கப் படும்.

   மிக்க வாழ்த்தும் அன்பும் நன்றிகளும் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும் லக்ஷ்மி..

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s