எனக்கான அங்கீகாரத்தை தன் மகிழ்வாகக் கொண்டு பூரிக்கும், என்னன்பு உறவுகளுக்கும், என் படைப்புக்களை எனைகாட்டிலும் பெரிதாக மதித்து, என் உழைப்பினை தலைமேல் சுமந்து; எனை உலகமெலாம் கொண்டுபோய் சேர்க்கும் GTV தொலைக்காட்சிக்கும், குறிப்பாக பெரும் அன்பிற்குரிய தோழமை உறவு றேனுகா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளும் அன்பு வணக்கமும்!!
வித்யாசாகர்
ithuvellaam oru pozaippu!intha t.v. thaan messikkanum!
தொலைகாட்சி செய்தியில் வந்தபோது நாமே கூட பார்க்க இயலவில்லை. பின் இணையத்தில் காணொளி பதிவாக கிடைத்த பின் தான் காணக் கிடைத்தது. தன், வலையென்றாலும் போதுநோக்கோடு இருக்கட்டுமே ‘இது தன்னை பெருமை படுத்திக் கொள்ளுமாறு இருக்குமோ’ என்றே இதுவரை பதியாதிருந்தேன். பின் ஒரு சேகரிக்கும் நோக்கில் மட்டுமே இப்பதிவு தற்போது இடப்பட்டுள்ளது. அதன் காரணமாகத் தான் அதிக நேரம் முகப்பில் இருக்க வேண்டாமே என்று உடனடியாக நேர நெருக்கத்திலும் மாலையில் வேறு கவிதையை முகப்பில் பதிந்துவிட்டு வேறு பணிக்குச் சென்றேன். இது என் உரிமை, இதில் நீங்கள் இகழ்ந்து பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லலாம் திரு. சுப்ரமணியம் யோகராஜா அவர்களே.., ஆனால் உங்களின் கருத்தையும் பொதுவுடைமையாக ஏற்க எண்ணுகிறேன்.
யாரும் என்னை புகழ்ந்து எழுத காத்திருக்கவில்லை. எழுதுவதை கடமை என்று மட்டுமே எண்ணுகிறேன். இகழ்ந்துப் பேச ஆளானோமே எனும் சிறு வருத்தம் மட்டுமே நெருடுகிறது!! நல்லா இருங்க..
வாழ்த்துக்கள் வித்யா சாகர். எதிர்ப்புகளை விலக்கி தொடருங்கள் தங்கள் தமிழ்ப்பணியை…
கருத்துக்களை பதிவதற்கு அவரவருக்கு சுதந்திரமும் இருக்கிறதே. பிறர் கருத்தையும் எண்ண ஓட்டத்தையும் மறுப்பதற்கில்லை. தன் மனது எண்ணம் அனுபவப் படி தனக்கு இயலும் சுய சிந்தனைப் படி எல்லோரும் வாழட்டும், எல்லோரும் அவரவர் முகத்தை அவருக்கு சுமந்து திரியட்டும் என்பது தானே நம் முயற்சியே திரு.ரமணன் சகோதரர். இதில்; எதிர்ப்பென்று ஒன்றுமில்லை, நாடு கிடக்கும் இத்தனை தவிப்புகளில் நமக்கென்று இப்படி ஒரு புகழ் மாலை அவசியமோ என்று எண்ணுகிறார் போல். நம் தகவல்களை நாம் நம் வலைக்கு சேகரிக்காவிடில் பின் எங்கு சென்று வைக்க என்பது அவருக்கு புரிய நியாயமில்லைபோல்.
இதலாம் கடந்து தங்களை போன்றோரின் அன்பும் ஒத்துழைப்பு பலமும் மிக்க நன்றிக்கும் மகிழ்விற்குமுரியது என்றாலும், மழையில் நனைந்தும் வெய்யிலில் காய்ந்தும் மலரும்; காட்டுப் பூ போல, இயல்பான இச்சமூகத்து மத்தியில் உழன்றும் வாழ்ந்தும் எழுத்தாய் மணக்கவே என் போராட்டமும் ஒவ்வொரு நகர்வுகளும் இருக்கும் அன்புறவே..