“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!

தலைப்பு : “இயற்கை”

யற்கை;
இறைவன் மறைந்து கொடுத்த கொடை;

யற்கை;
தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை;

விடையின் விளக்கம் சொல்கிறேன்
சற்று காது கொடுப்பீர்களா???!!!

வெளிச்சம் தந்ததால் இயற்கை
சூரியக் கடவுளானது;

ண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை
மழைதேவன்.. கடல்தேவியானது;

பூமியின் இருப்பினால் விளைச்சளால்
இயற்கை; பூமித் தாயானது;

காற்றின் சுவாசத்தால் இயற்கை
வாயுதேவன் ஆனது;

ணத்தின் ஆளுமையால் மரம் கூட
பணமும்; பணம் கூட லட்சுமியும் ஆனது;

டிக்கும் படிப்பு; அறிவு; பகிர்தல்; கற்பித்தல்
கலை கூட கலைவாணி ஆனது;

வாழவைத்த இயற்கைக்கு
வாஞ்சையாக நன்றி சொன்னால்
கேடுகளும் தீருமென நம்பினோம்; நம்பிக்கை பக்தியானது;

ரங்களின் பலனால்
மண்ணின் உடைமையால்
கற்களின்  உரசலால், மறைப்பினால்,
இயற்கை; மரத்திலும், மண்ணிலும், கல்லிலும்,
நெருப்பிலும் கூட கடவுளானது!

வ்வளவு ஏன் –
இயற்கைக்கு நன்றி சொல்ல
எழுதுகோல் எடுத்தேன் –
என் எழுத்து கூட கவிதையானது!!

ஆயினும்,

கடவுளை போற்ற மதத்தை படைத்து
மதத்தின் பேரில் மதம் கொண்டோம்;

கடைசியில் –
கடவுள் பேராலேயே
இன்று மனிதம் அழிகிறது.

மனிதனிலிருந்து விலங்குவரை
அழிக்கப் படுகின்றன;
அழிவை திருத்தி
மனிதன் உயிர்களை காக்க; மனிதம் காப்போம்

இயற்கையை –
வெறியின்றி வணங்குவோம்
வெறியில்லா மனிதத்தில்;
தெய்வீகம் இயற்கையாகவே பிறக்கும்!
—————————————————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.