தலைப்பு: “பூவும் நானும்”
ஒரு பூவும் நானுமாகத் தான்
பார்க்க எண்ணுகிறேன் வாழ்க்கையை
ஆனால் பூ எனை வென்று தான் விடுகிறது;
ஒரு நாள் முழுக்க வெளிச்சத்தை
படிக்கிறது பூ,
காற்றினை அணைத்து
அன்பு செய்கிறது பூ,
கடவுளிற்கே வாசனை கூட்டி
சேவை ஆற்றுகிறது பூ,
சிறு உயிர்களான ஈ வண்டு பட்டாம்பூச்சிக்கு
தேனை உணவாக அளித்து பசி தீர்க்கிறது பூ,
பூத்தாலும் அழகு தருகிறது
காய்ந்தாலும் உரமாகிறது –
ஆனால், நான் இனி தோற்கப் போவதில்லை
பூ பூவாகவே வாழ்வதுபோல்
நானும் நல்ல மனிதனாக வாழ்ந்து
வெற்றி மலர்களாக திகழ்வேன்!
—————————————————–
வித்யாசாகர்
கனடாவில் பாடசாலைகள் இணைந்து நடத்திய முத்தமிழ் விழாவிற்கு மாணவர்களின் வாயிலாக படிக்க மூன்று தலைப்புக்களை கொடுத்து நம்மிடம் கவிதை கேட்டிருந்தார் அன்பு சகோதரி பிறேமி. மூன்றுக் கவிதையில் இரண்டே வாசிக்க முடிந்ததாம். வாசித்த இரு மாணவச் செல்வங்களும் முதற்பரிசினை பெற்றார்களாம். கவிதைகளின் தலைப்பு “இயற்கை” மற்றும் “பூவும் – நானும்”
பதில்
இன்னொரு தகவல் உறவுகளே; இது கனடா பாடசாலைக்கு இல்லையாம் லண்டன் பாடசாலைக்கு கேட்கப் பட்டதாம், இன்று சகோதரி நம் பதிவு கண்டுவிட்டு மீண்டும் தெரிவித்தார்.. லண்டன் வாழ் உறவுகள் மன்னிப்பீர்களாக!!
வித்யாசாகர்
nanraka erukkirathu
மிக்க நன்றி உறவே..
இதன் ரசனைக்கான வாழ்த்துக்களெல்லாம் தலைப்பு தந்த பிறேமி சகோதரியையே சாரும்..
இது ஒரு பன்னிரெண்டாவது படிக்கும் மாணவன் மேடையில் படிக்கப் போவதாக சொல்லி அவனின் மன நிலைக்கு ஏற்ப எழுதிய கவிதை இது உறவுகளே. மாணவர்களின் மனதில் ஒரு நல்ல நம்பிக்கயை எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்பதே தலைப்பை தாங்கி எழுதியதன் எண்ணமாக இருந்தது..