எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி
எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட
உலகம் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க – எமக்கு
ஒற்றைத் தலைவனை காலம் – கணித்துப் பெற்றவளே ;
சொந்தம் கடலென மண் நிறைந்தும்
மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி
நிராகரித்த வஞ்சகத்தார் – சுவாசித்த சிறு மூச்சும்
வேண்டாமென விட்டவளே ;
உள் சுட்ட வடுக்கள் பல யிருக்க
இன்னும் தீராத ஏக்கம் வலி வலிக்க
போறாத காலம்பூண்டு – பக்கவாதம் தின்றுத் தீர்க்க
சிங்களனின் சிறையால் கூட செத்தவளே; சீவனைத் தொலைத்தவளே;
கட்டிய கணவன் மடியில் தாங்க
பெற்ற பிள்ளை வீரத் தோளில் சுமக்க
உதிராத பூவும் அழிக்காத பொட்டுமாய்
உறவுகளின் கண்ணீரில் போறவளே ; தனியாக போனாயோ?????
கொள்ளி வைக்க நாங்களிருக்கோம்
சந்தனத்தால் சேர்த்து எரிப்போம்
தமிழால் , கவியால், தீ மூட்டுவோம்; போனபின்னே
எல்லாம் செய்வோம் – இருந்தபோது விலகி நின்றோமே; மன்னிப்பாயா????
கட்சி புகழ் வாசனை ஆச்சி
நாற்காலி ஆசை உயிர்வரை பரவிப் போச்சி
உறவெல்லாம் அங்கே இறந்துக்கிடந்தும் – வெள்ளைச்சட்டையே பெருசாச்சி
வெட்கத்தால் அழுகின்றோம், வாழும் வரை தலைக் கவிழ்கின்றோம்;
ஒரு சொட்டுக் கண்ணீரை யேனும் –
உன் அஞ்சலிக்காய் விடுகின்றோம்!!
—————————————————————————-
வித்யாசாகர்
வித்யா, இந்தக் கவிதையை GTV தொலைக்காட்சியில் நான் வாசித்தேன். கேட்டீர்களா?
சிறந்ததாய் சிறந்த தாய்!
=======================
காலத்தால் அழியாதவளே காலனவன் பற்றினானோ!
சாலவும் சிறந்தமகனை பெற்றவளே! சாவுனை நாடியதோ!
மாளவில்லை நெஞ்சம்! மாதாவுனை இழந்ததாலே!
தாளவில்லை அம்மா! தரணிவிட்டு போனாயோ!
கொதித்தான் சிங்களன்… தமிழ்மகவைத் தாரினிலே
கொதிததான் உன்தூயமைந்தன் பிரபாகரன்! கூட்டினான் படை!
குதித்தான் போர்க்களம்! கொடிநாட்டினான் குலம்தளைக்க,
பதித்தான் பலசாதனைப் படிகள்! பாரின்பலதிக்கும் பறந்தன நின்மகன்புகழ்!
பெற்றாய் வீரப்புதல்வன், அதனால் பெற்றாய் பெரும்புகழ்
சிறந்ததாய் சிறந்த தாய்! சிறந்தவனைப் பெற்றதாலே
உற்றவளே! உரிமைத்தாயே! உறவுகள் நம்மஞ்சலிகளே!
பெருந்தாய்நீ போனாயோ பரமனடி போற்றுகிறோம் நின்னடி!
நிலா லண்டன்
LikeLike
என் கவிதையைத் தொடர்ந்து உங்கள் கவிதையையும் வாசித்தேன் கேட்டீர்களா?
LikeLike
//பெருந் தாய் –
நீ போனாயோ பரமனடி
போற்றுகிறோம் நின்னடி//
அன்பு வணக்கம் நிலா, இல்லையே நிலா, பாப்பாவிற்கு ஐந்தாம் மாத பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று விட்டு சற்று முன் தான் வந்தோம், வந்ததும் சாப்பிட்டு செல்லம்மாவும் குழந்தைகளும் படுத்துவிட்டனர். தொலைக்காட்சி திறக்கப்படவே இல்லை.
ஒருவேளை, நீங்கள் பேசிய பதிவு ஏதேனும் இருப்பின்; மின்னஞ்சல் செய்யவும். அந்த இனிய குரலில் சமர்ப்பிக்கப் பட்ட நம் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பார்வதியம்மாளின் அஞ்சலியை இங்கும் நம் தளத்திலும் எப்பொழுதிற்குமாய் ஒலிக்கச் செய்வோமே நிலா…
LikeLike
புறநானூற்றின் வீர சுமைதாங்கியே!
பிறர் மானம் காத்த நெசவுத்தாயே!
புறநானூறு உண்மையோ நாம் அறியோம்
பிறர் நாவூறு கொண்ட தாய் நீரே.
மெய்சிலிர்க்கும் உம் நினைவுகளை மீட்கையிலே
தாய்மைச் சிறப்புத் துளிர்க்கிறது மனங்களிலே
மெய்த் தன்மை பல கொண்டபெண்மை உம்மில்
தூய்மைச் சிறகுகள் முளைத்ததோ? விண்ணில் செல்ல
உத்தமர் உம் வாழ்வுகள் உணர்வகலாது
எத்தனையோ ஜென்மத்திற்கும் நினைவகலாது
இத்தனைக்கும் உம்மைப்போல் இன்னொரு தாயை
அத்தனாலும் படைத்திட மீண்டும் முடியாது.
அப்பனையும் அம்மையையும் விண் ணில் கண்டால்
தப்புலகில் தமிழர் எம் நிலையைச் சொல்லும்
இப் புவிக்கு மீண்டுவரா நிலையடைந்து
அப்படியே அவ்வுலகில் சாந்தி பெறும்.
உணர்விற்கு உயிர் தந்த உத்தமியே
உம்ஆன்மா சாந்திபெற வேண்டும் என்று,
உதிரத்தை நீராக்கி உள்ளத்தை பூவாக்கி
உருத்திரனின் பாதங்களை வேண்டுகின் றோம்.
-சிரபுரத்தான்-
LikeLike