71, யாரையும் நோகாத கனவுகள்..

லிக்காமல்
சலிக்காமல்
நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல்
நிஜம் பூத்த மலர்களின் –
வாசத்தொடும்,
வரலாறாய் மட்டும் மிகாமலும்,
முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த
பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் –
மல்லிகைப் பூக்க,
ஒற்றை நிலாத் தெரிய,
மரம் செடி கொடிகளின் அசைவில் –
சுகந்தக் காற்று வீசும் –
தென்றல் பொழுதுகளுக்கிடையே;
வஞ்சனையின்றி –
உயிர்கள் அனைத்தும் வாழ
யாரையும் நோகாமல் ஒரு – கனவேனும் வேண்டும்!!
—————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to 71, யாரையும் நோகாத கனவுகள்..

 1. Prabakaran Krishna சொல்கிறார்:

  உங்கள் அளவுக்கு அதிகமான ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறவைனை வேண்டிக்கொள்கிறேன்.

  அதுயென்ன “வரலாறாய் மட்டும் மிகாமலும்” ???

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   பெயரில் மட்டும் பெரிய பெயராகவே வரலாறு நெடுக்க இருக்கிறோம் தமிழராய். ஆனால், உண்மையில் இன்று வாழும் நிலை என்பது வேறாகவே உள்ளது.

   அப்படி வரலாற்றிற்காக மட்டும் நம் வாழ்தல் இல்லாமல், வரலாறாக மட்டுமே நம் நகர்வுகள் காலத்தினூடே மிகாமல்;

   எப்பொழுதிற்குமாய்; உண்மை மகிழ்வுகளுடனேயே நாம் வாழ்ந்ததாகவும் வாழ்வதாகவும் நம் வாழ்க்கை மிஞ்சட்டுமே……, இருக்கட்டுமே…. எனும் ஏக்கத்தின் வரிகளது (என் அறிவிற்கு எட்டியவரை; பிரபா)

   Like

 2. இராஜ. தியாகராஜன் சொல்கிறார்:

  அச்சு அசல் பாரதியின் வடிவம்… இவன் கவிஞன்!

  Like

 3. Prabakaran Krishna சொல்கிறார்:

  சரியே !!!!

  பெயரளவில் மட்டும் இல்லாமல் வாழ்வோம்.
  உங்கள் சிந்தனை எனக்கும் கனவுகள் ஆகட்டும்!!

  Like

 4. lakshminathan சொல்கிறார்:

  கனவு காணுங்கள் — ஆமாம்; இன்னொரு அப்துல்கலாம்!

  லக்ஷ்மிநாதன்

  Like

 5. sivagnanam சொல்கிறார்:

  தங்களின் மின்னஞ்சல் மற்றும் பதிவுகளை காண்பதில் மகிழ்ந்தேன்..

  சிவா

  Like

 6. rupan சொல்கிறார்:

  உங்களின் எழுத்துப்பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் அண்ணா
  அன்புடன்
  ரூபன்

  Like

 7. nalayini thiyaglingam சொல்கிறார்:

  அருமையான ரசனை அன்பான வேண்டுகோள்…..

  உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்………

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s