செல்லம்மா வித்யாசாகரின் சிறுகதைகள்..

“தலைப்பு : பயணம்..”

ல்யாணியும் சாந்தியும் நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அலுவல் முடிந்து, எப்பொழுதும் அவர்கள் பேருந்தில் பயணம் செய்துதான் வீட்டுற்கு போவார்கள். அப்படி ஒரு நாள் பயணத்தின் போது –

“கல்யாணி சாந்தியிடம் கேட்கிறாள் நேற்று செய்தி பார்தியாடி, தேர்தல் நெருங்குகிறது ஆகவே சாலை சீரமைப்பு மற்ற எல்லாம் பணிகளும் நம் நாட்டில் விரைவாக செய்து கொண்டு வருகிறார்கள் தெரியுமா”

“அப்படியா” என்றால் சாந்தி.

“ஆம் நம் நாடு மிகவும் முன்னேறி கொண்டுதான் வருகிறது. ஆனால் அதை தடுக்க நம்மூரிலயே ஆட்கள் இருக்கிறார்களே அதை நினைக்கும் போதுதான் வேதனையாக உள்ளது”

“ஆம் நாலுபேர் நல்லவர்கள் இருந்தால், நாலு பேர் கெட்டவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்”

“நாடு முன்னேறுது முன்னேறுதுன்றோம், நாட்ல விலைவாசி பார்த்தியா?!!!!!”

“ஆமாண்டி கல்யாணி இப்பொழுது காய்கறி விலை கூட ரொம்ப அதிகமா இருக்கிறது” என்று பேசி கொண்டே இருந்த போது அங்கே கண்டக்டர் டிக்கெட் டிக்கெட் என்று சொல்லிக்கொண்டு வந்தார், உடனே கல்யாணி தன்னிடம் இருந்த ஐந்த ரூபாயை கொடுத்து இரண்டு ருபாய் டிக்கெட் இரண்டு கொடுங்கள் என்றாள். உடனே அவர் சில்லறை இல்லை என்னிடம் என்றார். இறங்கும் போது வாங்கி கொள் என்றார் . பின் கல்யாணி தன் தோழியிடம் சொல்கிறாள் இந்த கண்டக்டர்களே இப்படித்தான் எப்போ பார்த்தாலும் சில்லறை இல்லை என்று சொல்வதே இவர்களுக்கு வழக்கமாக போய் விட்டது. இதெல்லாம் கேட்க யார் இருக்கிறார்கள்.

“ஆமாம் கல்யாணி நீ சொல்வது உண்மைதான் இப்படி பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் எவ்வளோ ரூபா ஏமாற்றி இருப்பார்கள் இவர்கள்’ என்றாள் சாந்தி. ‘பார்க்கலாம் இவர் போகும்போது தருகிறாரா’ என்று.

“இதலாம் விட கொடுமை, நம் நாட்டில் மழை வேறு வந்து என்ன பாடு படுத்தியது மக்களை, பாவம் மக்கள் அடிமட்டத்தில் இருப்பவர்கள் தான் மிகவும் சிரமபட்டுக் கொண்டு இருகிறார்கள்” என்றாள் கல்யாணி.

‘’ஆம் இப்பொழுது வானம் கூட மக்களை பழி வாங்குகிறது”

“வானமா?”

“ம்ம.., இயற்கை கூட மனிதர்களை, ஏழைகளை தான் பழி வாங்குகிறது. இதனால் விவசாயம் எவ்வளோ பாதிப்பு அடைதுள்ளது தெரியுமா? நேற்று செய்தியில் இது பற்றித்தான் காட்டி கொண்டு இருந்தனர். நாம் சென்னையில் நகரப்பாங்கில் வசிப்பதால் நமக்கு கிராமமத்து வாழ்க்கை தெரிவதில்லை. அங்குள்ள மக்காளின் உழைப்பால் தான் நமக்கு உண்ண அரிசியும் காய்கறிகளும் கிடைக்கிறது. இந்த மழையால் இப்போது காய் கறிகள் எல்லாம் விலை ஏறி கிடக்கிறது” என்றாள் ஷாந்தி.

உடனே கல்யாணி “ஆம் ஷாந்தி ஒரு பக்கம் இப்படி இருந்தாலும், மறுபக்கம், சாப்ட்வேர் மற்றும் இதர தொழில்களில், விஞ்ஞானத்தில் கூட மிகவும் முன்னேறி வருகிறோம். அது அப்படி இருக்க, பாகிஸ்தானில் தாலிபான்கள் மூலம், பெண்கள் பள்ளிகளை தொடர்து எரித்து கொண்டு வருகிறார்கள். இது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியல. ஏன் இவர்களுக்கு இப்படி ஒரு மனசு இருக்கிறதோ தெரியவில்லை. இதலாம் கடந்தும் இக் காலத்தில் பெண்கள் கல்வி கற்று கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றுடி”

“ஆமாண்டி இப்போது, விண்வெளி போன ‘கல்பனா சாவ்லா எல்லாம் நமக்கு ஓர் முன்னோடி தானே, அந்த தாலிபான் போல நம் கல்வியை நமக்கு தடுக்க இங்கே அத்தனை கொடூரமானவர்கள் இல்லாதது பெரிய விசயம்டி. நம்மூரில் நம்மை முன்னேற்ற நம் சமுகம் உடன் நிற்கிறது.

“எல்லா இடத்திலும்னு சொல்ல முடியாது. ஒரு சில கிராமங்களில் பெண்கள் பள்ளிக்கு செல்வதில்லை, ஆனால் இது போன்று பள்ளிக்கு தீவைப்பது, பெண்கள் வன்முறையை திணிப்பது என்பது நம் தமிழ் நாட்டில் இல்லை”

பின் அவர்கள் இருக்கும் இடம் வர இருக்க, போய் கண்டக்டரிடம் மீதப் பணத்தை கேட்கப் போனார்கள். உடன் அவரும் கொடுத்துவிட்டார்.

“பரவாயில்லைடி. இவர் நல்லவர் போல, அதுதான் கேட்ட உடனே கொடுத்து விட்டர். இல்லையா கல்யாணி”

சாந்தியும் ஆம் ஆம் அவர் காதில் கேட்டு விடப் போகுது வா இறங்க தாயார் ஆகலாம் என்றாள். அதற்குள், அலைபேசி அழைக்கும் சப்தம் சாந்தியிடம் இருந்து வர, எடுத்து பேசுகையில், அவளுடைய அம்மா வரும்போது நம் தெரு முனையில் இருக்கும் கடையில் பால் வங்கி வா பணம் பிறகு கொடுத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு தொலைபேசியினை வைத்தாள்.

கல்யாணி என்ன என்றாள். அம்மா அழைத்தாள்’டி, பால் வேணுமாம். போன வாரமெல்லாம் பால் கிடைப்பதே அரிதாய் இருந்தது. பால் வியாபாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக. எல்லாம் இந்த அரசியல் காரணம் தான்.

“ஆம், ஏன் நம் நாட்டில் அரசியில்வாதிகள் இப்படி இருகிறார்கள் என்று தெரியவில்லை. பாவம்டி, அவர்களே கூலிக்கு உழைப்பவர்கள், அவர்ளுக்கு ஒரு ருபாய் ஏற்றி கொடுத்தால் தான் என்ன என்று தெரியவில்லை” அதற்குள், பேருந்து நின்றது. அவர்கள் இறங்கும் இடம் வந்துது இருவரும் இறங்கி அவரவர் வீட்டிற்குச் சென்றார்கள்.

எபப்டியோ, சமூகம் சார்ந்த சிந்தனைகளால், இவர்களின் இன்றைய பயணம் மிகவும் நல்ல பயணமாக அமைந்தது.
————————————————————————————————
செல்லம்மா வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to செல்லம்மா வித்யாசாகரின் சிறுகதைகள்..

  1. ரவிசாரங்கன் சொல்கிறார்:

    //பாகிஸ்தானில் தாலிபான்கள் மூலம், பெண்கள் பள்ளிகளை தொடர்து
    எரித்து கொண்டு வருகிறார்கள். இது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏன் இப்படி
    இருக்காங்கன்னு தெரியல. ஏன் இவர்களுக்கு இப்படி ஒரு மனசு இருக்கிறதோ// கோபித்துக் கொள்ள கூடாது தம்பி படித்த உங்களுக்கே செல்லம்மாவை வெளிக்கொணர இத்தனை நாளாயிற்றே. மூட நம்பிக்கையில் ஊறித்திளைத்தவர்கள் அவர்கள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      கோபமெல்லாம் இல்லை சகோதரர். உங்களிடத்தில் வராது.

      ஒரு நாளில் வெடித்து பொறிந்து விடுவதல்ல வாழ்க்கை; மெல்ல அவர்கள் இயல்பு போல அவர்கள் வெளிவரட்டும். என் விருப்பத்தை என் பிள்ளைகளிடத்தில் கூட திணிக்க வேண்டாமென்றே இருக்கிறேன்.

      ஆர்வம் கொடுப்பது நானாக இருந்தாலும், துணிந்து; தானே வெளிவருவதே அவருக்கு இயல்பாக இருக்கும்; அன்றி வற்புறுத்தலேயாகும்..

      Like

  2. Shanthi Ravichandar சொல்கிறார்:

    Wow!!!!!!!!
    talent runs through the Family!! congrats Chellamma, You Have done a great Job,looking forward to many more stories !

    Like

  3. Dolly Balu சொல்கிறார்:

    வித்யா, செல்லமாவின் இந்த திறமையை வெளிபடுத்த உங்களுக்கு கூட இத்தனை நாட்கள் தேவையாக இருந்ததா? நல்ல துவக்கம் செல்லம்மா .

    Like

  4. ரவிசாரங்கன் சொல்கிறார்:

    ஜெய் ஸ்ரீமன் நாராயணா. அழகான பயணம். வீட்டினில் பெண்ணை பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் நடுவே அருமையாய் பயணம் செய்ய வைத்திருக்கிரீர்கள் செல்லம்மாவை வாழ்த்துக்கள் ஸ்ரீராமன் எப்போது சந்தோஷத்தையும் மிகுந்த ஆற்றலையும் தரட்டும்

    Like

  5. வித்யாசாகர் சொல்கிறார்:

    மிக்க நன்றி உறவுகளே…

    முட்டையிலிருந்து ஓடுடைத்து குஞ்சினை வெளிக் கொணரும் தாயிற்குத் தான் தெரிகிறது அது வெளிவரப் போதுமானப் பக்குவமும். விரைவில் கொண்டு வருவதை எண்ணி அரை அவையத்தில் கொண்டு வர இயலாதே சகோதரி..

    இனி நிறைய எழுதுவார். அவர் அப்படி எழுதவேண்டும் இன்னும் நிறைய கொண்டுவர வேண்டும் என்று தான் வேறு ஒரு போட்டிக்கு எழுதவைத்ததை இங்கே பதிந்து அவருக்கென தனிப் பக்கத்தையும் திறந்தேன்.

    நல்ல படைப்புக்கள் வர நாளாகிறதுபோல்; உங்களின் வாழ்த்துக்கள் என் நிறைவோடு சேர்ந்து அவருக்கு பலமாக அமையட்டும்..உறவுகளே!!

    Like

  6. sathya narayanan சொல்கிறார்:

    ayya vanakkam! “payanam” sirukathai padiththen! mikavum arumaiyaai irunthathu!
    Aangilatthil solvaarkal-“simply superb” appadi irunthathu! irandu ilam penkal-thozhigal perunthil payanam seithaale thankaludaiya aadai poruthamaaka irukkirathaaa ? alankaaram kalainthu ullathaa? paruthiveeran kaarthi naditha “naan mahan alla” padam paarthaakivittatha? allathu thankalathu melaalar thankalidam vidum jollai patriyothaan pesuvaarkal endra samooka poali karutthakkathai udaithu erivathaai amainthullathu! Bharathikkoru sellammaa poal intha ilakkiyar vidhyasagaarukkum intha sellammaa poalum! oru verubaadu-antha sellamma sirukathai ilakkiyam padaikkavillai-intha sellammaa than kanni muyarchiyileye kathai punaivathil vetri petrirukkikar! Nal vaazhtthukkal! thankal padaippukkalai thodarnthu ethir noakkum sakotharan- Pattukkottai Sathya

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      பேரன்பும் பெருநன்றியும் சத்தியன். உங்களைப் போன்றோர் வாயால் செல்லம்மா பாராட்டப் படுவது மகிழ்வாக இருக்கிறது. நிச்சயம் அவருக்கான ஒரு நல்ல திறமையோடு விரைவில் வெளிவருவார்… வர உடன் காத்திருப்போம்!

      Like

  7. munu. sivasankaran சொல்கிறார்:

    பயணத்தின் துவக்கம்..!
    குடும்ப பொறுப்புகளோடு சமூகச் சிந்தனை இழையோடிய கருத்தாடல் சுவையாக இருந்தது..! அந்த பயணத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரின் வெளிப்பாடுபோல ஏதுவான நடை.. இயல்பாக இருந்தது..! மகளின் கிறுக்கலை ரசிக்கும் ஆவலோடு நுழைந்தால்…கிழக்கென மிளிர்ந்தது ஓர் ஓவியம்…! மனம் நிறைந்த பாராட்டுக்கள்..! காலம் கடந்தமைக்கு வரும்பொழுது நான்கு நாட்களுக்கு தேநீரில் இனிப்பிடாமல் தந்து தண்டிக்கவேண்டும்…! நன்றி..!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி ஐயா அறியாது செய்த பிழைக்கு தண்டனைக் கொடுத்து தவறை ஏற்க விருப்பமில்லை, உங்களின் தாயன்பு பெரிது. அதை இனிப்போடு உள்ளத்தின் ஆழம் வரை வைத்து பூஜிப்போம்.. பெருநன்றியும் வணக்கமும்!

      செல்லம்மாவிடம் சொன்னேன் மிக சந்தோசப் பட்டது. ஒரு தேக்கரண்டி சர்க்கரையை தேநீரில் கூடுதல் போடணுமாம்…

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s