என்னன்புத் தம்பிக்குத் திருமண வாழ்த்து…

மணமகன் : சேவியர்                                     மணமகள்: ஜெகா

நாள் : 23. 03. 2011                                              இடம் : கன்னியாகுமரி

டன் பிறந்த மூன்று பேரோடு
நான்காவதாய் சேர்ந்தவனே;
நாளும் பொழுதும் – நெஞ்சில் சுமந்து
பிறப்பின் தூரத்தை நட்பினால் அறுத்தவனே;

ன்பெனும் ஒற்றை வார்த்தைக்கு
உயிரை கடைசிச் சொட்டுவரை கொடுப்பவனே;
உண்மை நிலைக்கு அஞ்சி –
சத்தியம் போற்றும் சீலனே;

காலம் கடக்க கடக்க
அதன் மீதேறி நின்று தங்கைகளுக்காய் உழைத்தவனே,
தாய் சொல் காத்து,  தந்தை வழிநடந்து; ஊர்சொல்லும் மதித்து –
தீஞ்சொல்லுக்கு பயம் கொள்ளும் பண்பிற்குரியோனே;

ழைப்பின் உச்சத்தை ஒரு இசைபோல்
உடனிருப்பவருக்கும் உரைப்பவனே;
உன் பதைபதைக்கும் பேச்சுக்குள்  –
பிறர்நலம் பேணும் உணர்வுகளைக் கொண்டவனே;

ன்னொரு ஏக்கத்திற்கே இறைவன்
என் தோள் வலியச் செய்ததைப் போல்;

உன்னொரு ஏக்கத்திற்கே இறைவன்
என் தோள் வலியச் செய்ததைப் போல்; என் பல
வெற்றிக்கென  – உன்னொரு கையும் கிடைக்க
என் வெற்றிகளுக்கும் காரணமாய்; எண்ணத்தால் இருப்பவனே;

புன்னகையில் பூத்து  நிற்போனே; அன்பினால் எமை
அர்ச்சித்தவனே; அக்கரையில் தாய்போல் சிறந்தவனே;
என்னன்பு தம்பியே…….., எம் உடன்பிறப்பே….

நீ வாழி..
நீடு வாழி..
ன் குலம் சிறக்க வாழி..
ன் பெயர் நிலைக்க  வாழி..
ன் நலமும், வீட்டார் நலமும், உனை சேர்ந்தோர் நலமும்
குன்றாது வளம்பெற வாழி..

ல்லெண்ணங்கள் ஈடேற
ற்செல்வங்கள் பதினாறும் பெற்று
ந்தவள் பூரிப்பில் –

ரும் சந்ததி செழிக்க
பார்போற்ற; ஊர் போற்ற; எல்லாம் சிறக்க
ற்பெயரோடும் பல புகழோடும் நீடூழி வாழி!!

பேரன்புடன்..

அண்ணன்
வித்யாசாகர் மற்றும் குடும்பம்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்த்துக்கள்! and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to என்னன்புத் தம்பிக்குத் திருமண வாழ்த்து…

 1. தமிழ்த்தோட்டம் சொல்கிறார்:

  என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்..

  //நீ வாழி..
  நீடு வாழி..
  உன் குலம் சிறக்க வாழி..
  உன் பெயர் நிலைக்க வாழி..
  உன் நலமும், வீட்டார் நலமும், உனை சேர்ந்தோர் நலமும்
  குன்றாது வளம்பெற வாழி..

  நல்லெண்ணங்கள் ஈடேற
  நற்செல்வங்கள் பதினாறும் பெற்று
  வந்தவள் பூரிப்பில் –

  வரும் சந்ததி செழிக்க
  பார்போற்ற; ஊர் போற்ற; எல்லாம் சிறக்க
  நற்பெயரோடும் பல புகழோடும் நீடூழி வாழி!!//

  Like

 2. uumm சொல்கிறார்:

  தம்பதியர்க்கு..
  இனிய வாழ்த்துகள்

  Like

 3. கோவை கவி சொல்கிறார்:

  திருமண நல் வாழ்த்துகள்!……மணமக்கள் பல நலமும் பெற்று நீடூழி வாழ்க!…வாழ்க!…

  Like

 4. mandaitivu சொல்கிறார்:

  திருமண நல் வாழ்த்துகள்!……மணமக்கள் பல நலமும் பெற்று நீடூழி வாழ்க!…வாழ்க!…

  Like

 5. வித்யாசாகர் சொல்கிறார்:

  மிக்க நன்றி யூஜின், உமா, பிரணவம், சகோதரி, பர்வின் மற்றும் வாழத்திய உறவுகளே. சுய மனஓட்டம் கடந்தும், இழிநிலைக்கு மனமாற்றம் செய்யும் தருணம் நல்நோக்கம் கொள்ள இவ்வாழ்த்துக்கள் அவர்களுக்கு வாழ்வின் ஊக்கமாக அமையும்.

  திருமணத்திற்கு கன்யாகுமரி சென்று என் அன்புறவுகளை சந்தித்து வந்த அந்த மூன்று நாட்கள் வாழ்வின் மறக்க இயலாத மகிழ்வான தருணங்கள் ஆகும். தம்பியும் சகோதரி ஜெகாவும் நல்ல மனமும் எண்ணமும் கொண்டவர்கள் என்றாலும் உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் மேலும் அவர்களை மேன்மை படுத்தும்!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s