கோபத்தின்
உச்சத்தில்
வாழ்வின் அவலங்களே
கைகொட்டிச் சிரிக்கின்றன;
நரநரவென்று மென்ற
பற்களின் நசுக்களில்
இரத்த உறவுகளே
சிக்கித் தவிக்கின்றன;
உணர்ச்சிப் பொருக்கா
நரம்புப் புடைப்பில்
உறங்கா இரவுகளே கோபத்தின்
சாபங்களாகின்றன;
கோபம் ஒரு ஆயுதமென்று
ஏந்தப்பட்ட கைகளில் – கூட
வாளாய் வீசி அறுக்கப் பட்ட இதயங்கள் தான்
கொட்டிக் கிடக்கின்றன;
இளமை தொலைந்தும்
முதுமை கடந்தும்
மரணத்தின் உச்சம்வரை
கோபத்தின் கறை அகலாமலே உயிர்களும் பிரிகின்றன;
நட்பு மறந்து, நன்றி துறந்து
கோபத்தால் துச்சப் படுத்தப்பட்ட உறவுகளை
மீண்டும் சிரித்துக் கொள்ளும் ஓர் நாளில்
கோபம்; முழுமையாய் மீட்டுத் தருவதேயில்லை;
கைகொட்டி சிரித்த
நான்கு பேர் சிரிப்பிற்கு,
காலம் முழுதிற்காய் வீழும்
ஒற்றை பழிச்சொல்லிற்கு,
நிறைய வீடுகளின் காரணம் –
வீண்கோபமெனும் ஒற்றை இழுக்கே;
இதயங்கள் அறுபடாத
கோபமும்,
உணர்ச்சிப் பெருக்கலில்
புரிதலும்,
நன்மை பிறப்பிக்கும்
நோக்கு-ம் கொண்டு –
தனக்குள் தானென்னும் செருக்கும் விடுப்பின்
அதையும் கடந்து வரும் – – – கோபமே
சமூகத்தின்; மீப்பெறு ஆயுதமென்று கொள்க!!
——————————————————————–
வித்யாசாகர்
தக்க இடமன்றி கோபம் தவிர்த்தல் நன்மை பயக்குமென்பதே கவிதைக்கான எண்ணம். கோபம் இத்தனை தீய விளைவினை விளைவிப்பதை எண்ணி தன்னை சரி செய்துக் கொள்ளும் நல்லவரின் கோபம் சமூகத்தின் நன்மை தீமை புரிந்ததாய் இருக்கும்; சுய விருப்புவெருப்பு கடந்து சமூகத்தின் நன்மைக்கு, பிறரின் நன்மைக்கு, தன் பாதுகாப்பிற்கு குரல் கொடுப்பதாய் இருக்கும் கோபம்; வேண்டவேப் படுகிறதிந்த உலகில்!!
LikeLike
கோபத்தின்
உச்சத்தில்
வாழ்வின் அவலங்களே
கைகொட்டிச் சிரிக்கின்றன;
நரநரவென்று மென்ற
பற்களின் நசுக்களில்
இரத்த உறவுகளே
சிக்கித் தவிக்கின்றன;
இளமை தொலைந்தும்
முதுமை கடந்தும்
மரணத்தின் உச்சம்வரை
கோபத்தின் கறை அகலாமலே உயிர்களும் பிரிகின்றன;
நட்பு மறந்து, நன்றி துறந்து
கோபத்தால் துச்சப் படுத்தப்பட்ட உறவுகளை
மீண்டும் சிரித்துக் கொள்ளும் ஓர் நாளில்
கோபம்; முழுமையாய் மீட்டுத் தருவதேயில்லை;
கைகொட்டி சிரித்த
நான்கு பேர் சிரிப்பிற்கு,
காலம் முழுதிற்காய் வீழும்
ஒற்றை பழிச்சொல்லிற்கு,
நிறைய வீடுகளின் காரணம் –
வீண்கோபமெனும் ஒற்றை இழுக்கே;
இந்த வரிகள் எனக்கு ரொம்பவும் புடிச்சிருக்கு கண்டிப்பா ஒவ்வொரு மனித ஜென்மத்திற்கும் போய் சேர வேண்டிய ஒரு செய்தி தான் ஒரு மனிதன் எவ்வளவுதான் உயரத்தில் இருந்தாலும் இந்த கோபமே அவனை ஒரு சாக்கடைக்குள் தள்ளிவிடும் என்பதை நன்றாக விளக்கி உள்ளீர்கள். அத்தனைக்கும் எனது வரவேற்பும் மரியாதைகளும் உரித்தாகட்டும்
LikeLike