காலம் எட்டி உதைக்காத நாட்களில்லை
விரலிடுக்கில் சொடுக்கினாற் போல் வருகிறது
வலிகளும்.. துக்கங்களும்!
சொல்லத் துணியா வார்த்தைகளுக்கிடையில்
மறுக்கவும் மறக்கவும் முடிந்திடாத – ஏக்கங்களுக்கு நடுவே
சிரிக்கத் துணிந்த வாழ்க்கையில் தான் –
சொல்லி மீளாப் போராட்டாங்கள் எத்தனை…எத்தனை(?)
நான் தான் மனிதனாயிற்றே என…. நெஞ்சு
நிமிர்த்திய போதேல்லாம் – கர்வம் தலையில் தட்டி
மார்பு உடைத்த நாட்கள் எண்ணிலடங்காதவை;
விட்டுக் கொடுப்பது தானே – வாழ்க்கையென
உணர்ந்து மன்னித்துவிடுகையில் ‘கோழை, பயந்தாங்கொல்லியெனப்
பெற்றப் பட்டங்களும் குறைவொன்ருமில்லை;
இரண்டுக்கும் நடுவே – விட்டும் கொடுத்து
கம்பீரமாய் எழுந்தும் நின்று வெற்றியென கர்ஜிக்கையில்
எழும் போட்டிகளும் பொறாமைகளும் – காண்கையில்
மிருங்கங்களுக்கு நடுவே வாழுதடா மனிதஜென்மமென
பயின்ற – பாடங்கள் ஏராளம்;
‘போடா மனிதா’ வென மனிதனை வெறுத்து
‘கடவுளே’ என இறைவனை வேண்ட அமர்கையில்
வேண்டுவதற்குக் கற்ற பாடங்களில் கூட –
கண்ணில் பட்டும் படாமலுமிருக்கும் குறைகள் கணக்கிலடங்காதவை;
ஆயிரம் கடவுள்கள்..
ஆயிரம் வேதங்கள்..
எல்லாம் உண்மையும் பொய்யுமாய் –
மனிதம் கொள்ளவும் துணிகிறதே என்ற – உதாரண வலிகள்
அறிவை உருத்தாமலில்லை;,
காற்றினைப்போல் – நறுமணம் போல் – மின்சாரம் போல் –
கண்ணில் படாது எங்கிருந்தோ – இயங்கும்
ஒரு இறைமையின் உணர்வு –
உள்ளே ஊடுருவி உயிரைத் துளைத்தெடுக்க;
இடையே –
எது உண்மை..? யார் சரி..?
யாரை வேண்டுவது..? எப்படி வேண்டுவது?
யாரை அறிவது? எப்படி நாடுவது?
எங்கிருக்கிறேன்? என்ன செய்கிறேன்?
எதற்கு பிறந்தேன்? ஏனிந்த வாழ்க்கை?
என்ன நரகமிது இறைவா யென
நெஞ்சு கணக்கையில் –
ஜென்மம் செத்து செத்து பிழைப்பதின்னும் – எத்தனை காலத்திற்கோ???????!!!!!!!!!!!!
நீள நெடுக்களிலெல்லாம் போராட்டம். மரணம். கொலை. கொள்ளை..
இன்னும் எத்தனை இலங்கை(?) எத்தனை பாலஸ்தீனம் (?)
எத்தனை காஸ்மீர் ?? எத்தனை மனிதர்கள்???
எத்தனை மரணத்தை – மண் தின்று மிஞ்சுமோ உலகத்தீரே??????!!!!!
நரம் தின்னத் தயங்கும் மனிதம்
உயிர் குடித்து -வெற்றியென கர்ஜிகையில் –
இன்னும் எத்தனை காலங்கள் – இப்படி
இரத்தமாய் சொட்டித் தீருமோ(?)!”
வெறும் செத்து மடிவதும் –
சாகப் பிறப்பதுமா
வாழ்கை?
எனில் – சாவதற்கும் வாழ்வதற்குமேடையே
மரண வாசத்தில் நொடிகள் நகர்வதா – காலமாற்றம்????
“ஏதோ ஒரு பயம் –
எப்போதோ ஒரு சந்தோஷம்:
“ஏதோ ஒரு பதட்டம்-
எங்கோ ஒரு நிம்மதி:
“எத்தனை எத்தனையோ தோல்வி –
யாரோ இழந்த வெற்றி:
“எதற்கோ கவலை-
எப்படியோ ஒரு சிரிப்பு;
“எது பாதையென்றே தெரியாமல் பயணம் –
எதையோ எட்டிவிட்டத் திமிர்;
எதுவுமே நிலைமாறாத வேதனை
மீண்டும் எல்லாம் பெற ஆசை – யென
வெறும் சில்லறை சப்தங்களாக தான்
நகர்கிறது வாழ்கை!!
————————————————–
வித்யாசாகர்
அருமையான வரிகள் அண்ணே
தம்பியின் வாழ்த்துக்கள்
LikeLike
மிக்க நன்றிப்பா. மனது சமூக சூழல் கண்டு; நம் சில்லறை சப்தங்கள் கவிதை தொகுப்பிற்கென எழுதியது.. காலமும் மனிதர்களும் நியாயத்திற்காய் நன்மைக்காய் விழிக்கவேண்டும். மனிதருக்கு காலத்தை மாற்றும் சக்தியும் உண்டு. எனவே, மனிதர் விழித்தாலே போதும்..
LikeLike
இந்த இதயம் விழித்துக் கொண்டது… வெற்றி உனதென்பேன்..
தோழரே..
LikeLiked by 1 person
மிக்க நன்றி தோழர்..
LikeLike
தம்பி தங்கள் படைப்புகள் மிக அருமையாக உள்ளது…. ஆனால் எனக்குத்தான் படிக்க நேரம் போதவில்லை..தம்பி……
LikeLike
மிக்க நன்றி சகோதரி.முடிந்தவரை படிக்க்கவும் படிப்பதை பகிர்ந்துக் கொள்ளவும் முயற்சிப்போம். படிப்பு நமை அறியாமல் நம்மையும் நம்மோடுள்ளவரையும்யும் வளர்க்கிறது சகோதரி. என்றாலும் தங்களின் அன்பிற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்..
LikeLike
மனிதபோராட்டங்கள் அத்தனையும் சொல்லிட்டிவிட்டீர்கள். அருமை
கடந்துவரும் பாதைகளில்
கல்லிருக்கும் முள்ளிருக்கும்
காலங்கள் செல்ல செல்ல
கஷ்டங்களும் கரைந்திருக்கும்
கடவுளும் வேதமும் பொய்யில்லை.
கண்முண்ணே நடப்பதெல்லாம் மெய்யுமில்லை
ஆய்ந்து உணர அறிவுகண் திறக்கவில்லையெனில்
அகிலத்தில் வாழ்ந்தும் நமக்குகொன்றும் பயனில்லை.
ஈ கரையில் ஒரு நண்பர் இக்கவிதை போட்டிருந்தார்http://www.eegarai.net/t56072-topic#505929 அதுவும் பாதியில் அதற்கு நான்போட்ட கருத்துக்கள் மேலே உள்ளவை..
மிக அருமையாக எழுதியிருக்கீங்க வித்யாசாகர். வாழ்த்துக்கள்
LikeLike
நன்றி என்னருமை மலிக்கா. நம் சுய விருப்பு வெறுப்புக்களை கடந்து, பொது பார்வை, பொது வலி, பிறர் துன்பம், பிறர் வருத்தம், பிறர் குழப்பம் என எல்லோரையும் சார்ந்த சமூகக் கண் கொண்டு எழுதிய ஒரு கவிதை. ஆழமாக எல்லாம் பற்றியும் சிந்தித்து கடைசியில் அதை சமூக செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தலைபிடித்து அமர்ந்தவனின் வலியின் வார்த்தை மட்டுமே இக்கவிதை..
LikeLike
வெறும் செத்து மடிவதும் –
சாகப் பிறப்பதுமா
வாழ்கை?
எனில் – சாவதற்கும் வாழ்வதற்குமேடையே
மரண வாசத்தில் நொடிகள் நகர்வதா – காலமாற்றம்????
“ஏதோ ஒரு பயம் –
எப்போதோ ஒரு சந்தோஷம்:
“ஏதோ ஒரு பதட்டம்-
எங்கோ ஒரு நிம்மதி:
“எத்தனை எத்தனையோ தோல்வி –
யாரோ இழந்த வெற்றி:
“எதற்கோ கவலை-
எப்படியோ ஒரு சிரிப்பு;
“எது பாதையென்றே தெரியாமல் பயணம் –
எதையோ எட்டிவிட்டத் திமிர்;nanraaha irukku. athilum kurippaaha eththanai eththanaijo vetty jaaro ilantha tholvi pidichiruku.
LikeLike
// வெறும் செத்து மடிவதும் –
சாகப் பிறப்பதுமா
வாழ்கை? //
வாழ்க்கையில் நடைபெறும் சகல நன்மை தீமைகளையும் உங்கள் படைப்பின் மூலம் அறியத் தந்துள்ளிர்கள்.
அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோதரன் .
LikeLike
மிக அருமை..
LikeLike