40 விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு
விலைபோகும்
ஓட்டு எந்திரங்களல்ல – நாம்
நாளைய விதியை இன்றெழுதும்
தேர்தல் பிரம்மாக்கள்;

லவசத்தில் மதிமயங்கி
எடுத்து வீசிய ஊழல் பணத்தில்
வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம்
தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும்
மண்ணின் – உரிமை குடிகள்;

போட்டதை தின்று
விரித்ததில் தூங்கிப் போகும்
புரட்சியே யற்ற வெற்று குப்பைகளல்ல – நாம்
சரி தவறு அலசி; தக்கவரை நிறுத்தி – நாட்டின்
வளர்ச்சி குறித்து சிந்திக்கத் தக்க அறிவுள்ள மனிதர்கள்;

விரல்நுனியில் மை பூசி – இருக்கை பெற்றபின்
தலைக்கு நெருப்பிடும் கைகளை
முறித்துப் போடும் வாய்ப்புதனை அன்றிலிருந்தே
மீண்டும் மீண்டும் பெற்றவர்கள் – நாம்
மீண்டும் மீண்டும் இழக்கிறோமே தவறில்லையா??????

டித்தவனை
திருப்பியடிக்கத்
தயங்காத நம் கைகள் –
வயிற்றில் அடிப்பவர்களை மட்டும்
விட்டுவைத்ததில் சோடைபோனோமே; அதும் தமிழராய்???!!!

ரும் தலைமுறைக்கு
வாழ்வினை சேகரிக்கும் கடமையினை
ஒவ்வொருமுறை – கவனமின்றி பதிந்த ஒட்டுக்களுக்கும்
கொடுத்த விலை படி விற்றுவிட்டோமென்பது
சிந்திக்காத கேவலத்தால் –
நாம்  செய்த பெருங் குற்றமின்றி வேறென்ன???

ந்து வருடத்திற்கு
பணம் காய்க்கும் மரமென்றெண்ணி
ஒரு  குவளை சாராயம் ஊற்றிக் கொடுத்து
வெட்டிச் செல்பவர்களை – இனி
விரட்டித் துரத்துவோம்;

ஓட்டு போடுவதற்கென
அரிசி – யல்ல
அமிழ்தமே தந்தாலும்
தூக்கி முகத்தில் வீசுவோம்;

மக்களின்
சுய புரட்சியின் அர்த்தத்தை
தேர்தலால் அனைவருக்கும்
விளங்கவைப்போம்;

உனக்கும்
எனக்கும்
இத் தேசத்தின் நன்மைக்கும்
இனத்தின் மக்களின் ஒவ்வொரு குடிமகனின்
உரிமைக்கும் மதிப்பு கொடுப்பவர்
சிந்திப்பவர்
உழைக்க முடிந்தவர் எவரேனும் உண்டெனில்
அவருக்கென விரல் நுனியில் மையிடுவோம்;
நம் வாழ்வினை நாமே திருத்தியமைப்போம்!!
—————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 40 விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

 1. வித்யாசாகர் சொல்கிறார்:

  //நிறம் மாறாத பூக்கள் எனும் முகநூல் நண்பர் பகிர்ந்துக் கொண்ட கருத்து: இங்கு வாக்களிக்கும் உரிமைதான் மக்களுக்கு இருக்கிறதே தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்கள் கையில் இல்லை//

  //ஒரு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தையும், புதிய தேர்தல் முறையையும் உருவாக்கிக்கொள்வதன் மூலமே மக்கள் உண்மையில் தங்களுக்கான ஜனநாயகத்தையும், அதிகாரத்தையும் பெறமுடியும்//

  வித்யாசாகர் முகநூலில் எழுதியது: யதார்த்தம் கெடாத கருத்து தான். என்றாலும், இருக்கும் அதிகாரம் வைத்து முதலில் நல்ல அரசை தேர்ந்தெடுப்போம். ஓட்டு போடும் முன் பரவலாய் அக்கம் பக்கம் கலந்து பேசுவோம். தெரியாவிட்டாலும் தேர்தலை அணுகும் முன் சற்று கடந்த நாட்களின் வரலாற்றினை படித்து அறிந்து வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு கல்லாய் நகற்றி நாளையேனும் எண்ணிய சிகரத்தை அடையலாமே..

  Like

 2. மனோஜ் சொல்கிறார்:

  //அடித்தவனை
  திருப்பியடிக்கத்
  தயங்காத நம் கைகள் –
  வயிற்றில் அடிப்பவர்களை மட்டும்
  விட்டுவைத்ததில் சோடைபோனோமே; அதும் தமிழராய்???!!!//

  இந்த வரிகள் மிகவும் உணர்ச்சிமயமானவை ,
  ஒரு தமிழனாய் நெஞ்சு பொறுக்குதில்லையே..

  Like

 3. riyas சொல்கிறார்:

  அருமையான பதிவு

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி ரியாஸ். அரசியல் நம் முக்கியமான இடம். அது தான் வெகு சொல்பமாக கணக்கிடப் படுகிறது நம் மத்தியில். அத்தகைய எண்ணம் மாறி நமக்கு வேண்டியாவ்ர்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கும் நாளில் நம் தேவைகளும் நிறைவடையும்!!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s