கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 4)

இதற்கு முன்..

சற்று நேரத்திற்கெல்லாம், எதைஎதையோ யோசித்து அசை போட்டவாறே அயர்ந்து போனவனாக கண்களை மூடிக் கொண்டு இருக்கையின் மீது அமர்ந்தவாறே சாய்ந்து படுத்துக் கொள்ள, அந்த அண்ணன் மேகநாதன் நினைவிற்கு வந்தார். அவரோடு பேசியதெல்லாம் கூட நினைவிற்கு வந்தன. கைகளை மேலே உயர்த்தி உடம்பை சற்று முறுக்கி ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். ஒவ்வொன்றாய் எல்லாம் நினைவில் ஊரின…

“வாங்க சத்யா.., எங்க சொன்னீங்க துபாய்தானே”

“இல்லைண்ணே, லண்டன் போகணும் துபாய் வழியா இருந்தாலும் பரவாயில்லை”

“லண்டனா…., என்னைக்கு போனோம்..?”

“நாளைக்குண்ணே, முன்பே தொலைபேசியில் அழைத்து சொன்னேனே”

“ஓ.. மறந்து போனேன்யா…, நீ வருவியோ மாட்டியோன்னு யார் கண்டா…?”

“அதெப்படிண்ணே சொல்லிட்டு வராம, எப்பவும் எடுக்குறவக தானே..”

“சரி, என்னைக்கு வேணும்?”

“நாளைக்கு..”

“நாளைக்கா??!!!!!!! நாளைக்கு லண்டனுக்கு சீட்டு இல்லைன்னு சொன்னாப்ப்லையேப்பு…”

“பாருங்கண்ணே.., வேறு வழி மாறி போற மாதிரி ஏதாவது இருக்கான்னு பாருங்க”

“செத்த இரு, நான் எங்க பார்க்கிறது, கேட்டு தான் சொல்லணும்”

“சரி கேட்டு தான் சொல்லுங்க..”

அவர் சற்று சலிப்பாகவும் வீம்பாகவும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து தொலைபேசியை எடுத்து நகரத்து டிராவல்ஸ் ஒன்றின் தொடர்பு எண்களை அழுத்தி யாரிடமோ பேசினார். நலமெல்லாம் விசாரித்துப் பின் விவரம் சொன்னார். இவ்வளவு குசலாம் விசாரிப்பதிலேயே தெரிந்தது இவர் எத்தனைப் பேருக்கு இங்கே பயணச் சீட்டு பதிந்துக் கொடுக்கிறார் என்று.

இருந்தாலும் எனக்கும் இவரை விட்டால் வேறு வழியில்லை. நம்மால் நகரத்து தூரம் வரைச் சென்று விமானச் சீட்டு வாங்க இயலாது. நேரமும் போதுமானதாக இல்லை. போனமுறை இவர் எடுத்துக் கொடுத்த நம்பிக்கையில் தான் இம்முறையும் வந்தேன். அதற்குள் பேசிக் கொண்டே இருந்த அவர் என் பக்கம் பார்த்து தொலைபேசியின் ஒரு முனையை கையில் மூடிக் கொண்டு –

“ஸ்ரீலங்கா வழியா தான் இருக்காம் பரவாயில்லையா…?” என்றார். கண்ணாடி அவருடைய மூக்கின் மேல் இறங்கி அவரின் கண்களே என்னை கேள்வி கேட்டன. இருந்தாலும் ஸ்ரீலங்கா என்றதும் கொஞ்சம் பரபரப்பு கூடியது.

“ஸ்ரீலங்காவா!!!!!!!!!!!!!!!!? பரவாயில்லையாவா!!!!!!!!!!!? என்னண்ணே நீங்க, தாரளாமாக போடுங்க, புண்ணியமா போகும் உங்களுக்கென்றேன்.

“இல்லைப்பா, அங்க வேற சண்டை, பிரச்சனை, அது இதுன்றான்களே அதான் கேட்டேன்”

“ஆமாம், சண்டை தான் நடக்கிறது, காலங்காலமாய் போராடும் மண்ணிற்கான, உரிமைக்கான சண்டைண்ணே அது.. “

“அதான், அதனால தான், வேணுமான்னு கேக்குறேன்.., பொதுவா சிலபேர் இலங்கை வழி இல்லாம போடுங்கன்னு தான் கேட்டு வாங்குறாங்க”

“உண்மையாவா சொல்றீங்க???”

அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவரிடம் எதற்கோ சரியென்று சொல்லிவிட்டு இணைப்பினை துண்டித்து வைத்துவிட்டு –

“உண்மையைத்தான் சொல்றேன், பொய் சொல்ல எனக்கென்ன ஆசையா. அவன்தான் சண்டை போடுறானாமே அவனோட நாட்டுக்கு ஏன் வருமானம் தரதுன்னு தான்”

“ஆமாம்ணே; அதுவும் யோசிக்கவேண்டிய விஷயம் தான்”

“இருந்தாலும் நம்ம கிட்ட வரதே ஒன்னோ ரெண்டோ கஸ்டமர்தானேப்பு, அதுக வேணாம்னு சொல்லும்..? எதுக்கோ என்னவோ யார் கண்டா, போவ பயமோ என்னவோ; தமிழன்னு சொல்லி ஆர்மி காரன் அடிச்சிப் புட்டானா?”

அவர் நெக்கலாக என்னைப் பார்த்து கண் சிமிட்டினார். எனக்கு அந்த கண்ணைப் பார்த்து ஓங்கி ஒரு குத்து விடலாமா என்று கோபம் வந்தது.

“ஏன் அப்பு உன்னை அடிச்சிப் பிடுவான்னு பாக்குறியா?”

“மேல கைபட்டா தலைய திருவி; தமிழன்னா யாருன்னு காட்டுவேன்”

“இந்த வாய் ஒண்ணுதான் தமிழனுக்கு”

“ஒட்டுமொத்தமும் அப்படி இல்லைண்ணே”

“ஒட்டுமொத்தமும்னா ?”

“உன் போராட்டமும் என் போராட்டமும் சோத்துக்கும் தன் பிழைப்புக்கும் தான்,  அவர்கள் தமிழ் தேச உணர்வுக்காகவும்; தன் விடுதலைக்காவும் போராடுறவுங்கண்ணே “

“இலங்கை காரங்களா…, எல்லாம் ஒரு குட்டையில ஊறின மட்டை தானே?”

“என்னண்ணே பேசுற நீயி, தமிழன்னா உனக்கு என்ன நீயும் நானும்னு மட்டும் நினைச்சியா? உன்னை மாதிரி என்னை மாதிரி தன் வயித்துக்கு சாவுறவன்னு நினைச்சியா? காலங்காலமா தனகுன்னு ஒரு தேசமும் தன்னிடமிருந்து பறித்துக் கொண்ட மண்ணின் சுதந்திரத்தையும் வாங்க ரத்தமும் உயிரும் கொடுத்துப் போராடும் இனம்..”

மண்ணைப் பற்றி மண்ணுரிமை பற்றி பேச எழ சற்று உணர்ச்சிவயப் பட்டுப்  போனேன். அதையும் அவர் கண்டுபிடித்து விட்டார் போல். “சரி, அதுக்கு நீ  ஏன்பா இப்படி உணர்ச்சிவசப் படுற?”

“பின்ன என்னண்ணே; என்னமோ நீங்க நம்ம குழாயடிச் சண்டை மாதிரி அவுங்களையும் நினைச்சிப் பேசுறீங்க”

“வேறென்னவாம்; அவன் சண்டை போட்டா நமக்ககென்னப்பு???”

“அண்ணே, அது ஒரு இனத்தின் விடுதலைக்கான சண்டைண்ணே? அறுபது வருடமா தன் உரிமைகளை மீட்பதற்காக நடக்கும் போர் அது.. “

“ஆமா LTTE – க்கும் ஸ்ரீலங்கா காரனுக்கும் சண்டை நடக்கும்னுவாங்களே, அதானே”

“என்னங்க, எல்.டி.டி.ன்னு என்னமோ யாரையோ சொல்றா மாதிரி சொல்றீங்க”

“ஆமா. அவனுங்க எல்.டி.டீ தானே??????????”

“அப்போ அவர்கள் எல்.டி.டீ.ன்னா நீங்களும் எல்.டி.டீ இல்லையா?”

“அட ஏய்யா வெறுப்ப கிளப்பாம நான் ஏன் எல்.டி.டீ யாவனும்? என்ன புடிச்சி உள்ளே போடறதுக்கா??? நீ ஒரு காரியம் செய்யி; இங்க நம்மா மூனாவட்டம் தெருவு இருக்குல்ல அதுல போயி தலையில முக்காடு போட்டுக்குனு ஒரு ஸ்ரீலங்கா பொம்பளை இருக்கா, அவகிட்ட நீ என்ன எல்.டி.டீ.யான்னு கேளு காரி மூஞ்சில துப்புவா. நான் கேட்டேன், கேட்டதுக்கு என் மேல எப்படி சீறி வந்தான்னு எனக்குள்ள தெரியும். அந்த எல்.டி.டீ. காரங்க தான் எங்களை இப்படி நாடுகெட்டு அலைய விட்டானுங்கன்னு அவதான் சொன்னா(ள்)”

எனக்குக் கோபம் தலைக்கேறியது. இருந்தாலும் இதுபோன்ற மனிதரிடம் இனியும் பேசுவதில் எந்த அர்த்தமுமில்லை போல் தோன்றியது. “சரி விடுங்க சீட்டு இருக்கான்னு பார்த்து சொல்லுங்க நான் போறேன்”

“என்னப்பா நீயி லண்டன்லாம் போறவர, விவரம் போதலையே…, ஆமா நான் தெரியாம தான் கேட்கிறேன் ‘அவனுங்க சும்மா அடிச்சிக்கினு வெட்டிக்கினா நாமளா அதுக்கு பொறுப்பு?”

ஓங்கி ஒரு அரை விடலாமா என்றிருந்தது எனக்கு. பெரியவர் ஆயிற்றே என்று அடக்கிக் கொண்டேன்.

“ஏன்யா என்னைய முறைக்கிற?”

“வேற…” தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன் நான்.

“என்னய்யா, உனக்கு ஏன் இம்புட்டு கோபம் வருது, நாம என்ன இலங்கைக்கு பொறுப்பு சுமந்தா கெடக்குறவ….இங்க??????????????”

இதற்குமேல் என்னால் தாங்கமுடியவில்லை.

“ஆமாய்யா………., பொறுப்பு தான். நாம பக்கத்துலயே இருந்தும் நம்ம மக்கள் சாவுதே, நாம அதுக்கு பொறுப்பில்லையா? நாம் பொறுப்பில்லாம என்ன பக்கத்து நாட்டானா பின்ன வருவான். பக்கத்து வீட்டான் சண்டை போட்டா போய் கேட்குறியே எங்கயோ இருந்து வந்தவன் அடிக்கிறானே; பொறுப்பில்லாம எங்க போயிட்டோம்??? உன் மக்கள், உன் இனம், உன்னைய நம்பின சனங்க அடிபட்டா நீ தான்யா கேட்க போவனும்” கோபத்தில் எழுந்து மேஜை மேல் தட்டி கத்தியே விட்டேன்.

அவரும் சாதாரண ஆளில்லை. அவர் என்னைப்போல் நிறைய பேரிடம் இப்படி சண்டை போட்டிருப்பார் போல். சாவுதானமா எழுந்து நின்று –

“அடப் போப்பா நீயி..” என்றார். என்னை உசுப்பேத்துறாரோ என்றொரு எண்ணம். நான் சற்று பொறுத்துக் கொண்டு,

“’என்னண்ணே, நம்ம தமிழன்ண்ணே, நம்ம தமிழன் தான் அங்க நமக்குன்னு ஒரு நாடு கேட்டு செத்துக் கொண்டிருக்கிறாண்ணே. கொஞ்சம் கூட அத்தனை பேர் சாவறான்ற எண்ணம் கூட உங்களுக்கில்லையா?”

“அட ஏன்பா நீ வேற காலையில வந்து மனுசனை இப்படி படுத்துற. நீ வேணும்னா பாரு இவுங்க மட்டும் நீ சொல்ற ஈழத்தை புடிச்சிட்டா நாளைக்கே தமிழ்நாட்டை சல்லி காசுக்கு மதிக்கிறாங்களா பார், வேணும்னா நல்லா தூத்திப் பேசுவாங்க, நடக்குதா இல்லையான்னு பாரு. பெறவு இந்த அண்ணனை வந்து ஏன் சொன்னேன்னு கேளு..”

அவர் அவரை சரியாக மட்டுமே எண்ணிக் கொண்டு பேசினார். நிறைய பேர் இப்படி தான்; மண்ணை நனைத்த ரத்தத்தின் காரணம் புரியாமலே; அதன் இழப்பு புரியாமலே; உயிர்குடிக்கும் கயவர்களின் தந்திரம் புரியாமல், மோசடித்தனம் புரியாமல் பேசிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த போராட்டத்தின் காரணம் புரிந்துவிட்டால் பின் நிற்பவர்களில் முதலாய் ஆவார்கள் என்று சற்று நிதானித்துப் புரிந்துக் கொண்டேன். அவரையே அமைதியாக பார்த்தேன். அவர் –
——————————————————————————————-
தொடரும்…

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கொழும்பு வழியே ஒரு பயணம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 4)

  1. கோவை கவி சொல்கிறார்:

    ஜந்தாவது அங்கம் வாசிக்கும் ஆவலில்…..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      காலையில் எழுந்ததும் முதலில் செய்யும் வேலை இதுதான் சகோதரி. வேறு வேலைக்கு புறப்பட உள்ளேன். காலை எழுந்ததும் பதிவேன்.. மிக்க நன்றி உங்களின் தோர்ந்த கருத்தளிப்பிற்கு!!

      Like

  2. வித்யாசாகர் சொல்கிறார்:

    //சிவம் அமுதசிவம் எழுதியது:
    இதைத்தானே நான் கடந்த அஞ்சலில் குறிப்பிட்டிருந்தேன்!
    இந்த மேகநாதனைப்பார்த்து நீங்கள் இப்படிக்கோபப்படுகிறீர்களே ;
    இதைவிட 10 மடங்கு மேகநாதன்களைச் சமாளித்துக்கொண்டுதான்
    இப்போராட்டம் இதுவரையேனும் நின்றுபிடித்தது.
    இப்படிப்பட்ட பேர்வழிகள் எங்கும் உண்டு.
    இலங்கைக்கு – கருணா, டக்ளசு \ அரசியலில் சொதப்ப அமிர்தலிங்கம்
    இந்தியாவுக்கு சோ, சுப்புர சாமி \ அரசியலில் அள்ளிவைக்க கருணாநிதி
    இப்பேர்ப்பட்டதுகளை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளக்கூடாது.
    இவர் சொன்னதிலும் நியாயமில்லாமில்லைத்தான்.
    இஃதெங்குதானில்லை?
    இவ்வுலகம் தோன்றியகாலந்தொட்டு இருக்கும் பிரச்சினைதானே இது?
    இதனால் இப்பூமி சுழலமறுத்துவிட்டதா – என்ன?
    இறுதிவரை போராடு!
    இதுதான் நம்தலைவனின் தாரகமந்திரம்//

    //வித்யாசாகர் எழுதியது: ஆம்; ஐயா தனியே பேசிக் கொள்வோரை மொத்தமாய் உலகிற்குக் காட்டி சிந்திக்கத் தூண்டும், விடிவினை நோக்கி மீண்டும் புறப்பட வழிதேடும் ஒரு
    தொடரிது.. மிக்க நன்றி தங்களின் தொடர் ஊக்குவிப்பிற்கு//

    நன்றி: தமிழ் உலகம்!!

    Like

  3. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 3) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

  4. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 5) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

  5. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 3) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

  6. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 5) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s