கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 15)

இதற்கு முன்..

விமானம் எப்படி வெடித்தது, ஏன் வெடித்தது, வாசலில் நின்று மிரட்டிய மாதங்கி யார்? அவள் ஏன் அப்படி செய்தாள் ஒன்றிற்குமே விடை கண்டுபிடிக்க இயலாமல் தவித்தனர் லண்டன் விமான நிலையத்தினர்.

சத்தியசீலன் முதலில் இறங்கிக் கொண்டமையால் யார் கண்ணிலும் படாமால் அவசர பயணியைப் போல் அங்கிருந்து வெளியேறி,  காவலாலிகளோ அல்லது மற்ற யாரோ சந்தேகப் படுவதற்குள் அலைபாய்ந்து ஓடிக் கொண்டிருந்த மக்களோடு மக்களாகக் கூடி தப்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினான்.

வெகு வேகமாக ஒரு மகிழுந்து பேசி எடுத்துக் கொண்டு நேராக வங்கிக்கு சென்று, அங்கு அவன் முன்பு சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் எடுத்து அமெரிக்க டாலராக மாற்றிக் கொண்டு லண்டனிலிருந்து விமானம் மூலம் வான்வழி போகாமல், வேறொரு மகிழுந்து பிடித்து தரைவழியே லண்டனைக் கடந்து வேறொரு ஐரோப்பா நாட்டிற்கு சென்று அங்கிருந்து மாதங்கி கொடுத்த அத்தனை புகைப்படங்கள் காணொளிகளை இணையம் மூலம் பதிவு செய்து சில முக்கிய நண்பர்களுக்கு அனுப்பினான்.

அனுப்பிவிட்டு அவர்களை அழைத்து இங்ஙனம் இங்ஙனம் நடந்ததென்றும் இனி அவசரத் திட்டமாக வேறு என்னசெய்யப் போகிறோம் என்ற தகவல்களையும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து இந்தியா ஏர்லைன் மூலம் சென்னை வந்து இறங்குகிறான்.

——————-*——————-*——————-

மாதங்கி  ஏன் அந்த விமானத்திற்கு வெடி வைத்து தகர்க்க வந்தாள், யார் அந்த விமானத்திற்குள் பயணித்தார்கள், அந்த கோர்ட் சூட் போட்டிருந்த ஆசாமி யார், ஏனவனைஅவள்  கொள்ளவேண்டும், அவள் அந்த சிவப்பு நிற பொத்தானை இயக்கிடாத போதும் வேறு யார் அந்த விமானத்தை வெடிக்கச் செய்திருப்பார்கள்’ என்ற எல்லா விவரமும்  பின்னர் அந்த காணொளிகளை கண்டதும் சத்ய சீலனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் புரிய வந்தது.

நண்பர்கள் நடந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்தும் மற்ற இதர விடயங்களை கேள்வியுற்றும் திகைத்துப் போனார்கள். ரகசியமாய் ஓரிடத்தில் மொத்தப்பேரும் கூடினார்கள். காணொளி மற்றும் புகைப்படங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அலசிப் பார்த்து அவைகளை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதை எல்லாம் தீர்மானித்துக் கொண்டார்கள்.

இடையே சில காட்சிகளை பார்க்க இயலாமல் கைவைத்து மறைத்தும் வாய்விட்டு அழவும் செய்தார்கள். இனி என் உயிரே போனாலும் போகட்டும் இதற்கு ஒரு முடிவு கட்டியே தீருவதென்று உறுதி ஏற்றார்கள்.

இனி வீடு உறவு உலகம் நியாயம் தர்மம் அத்தனையும் மறந்து புறப்பட்டார்கள். அவரவருக்கு பிரித்துக் கொள்ளப் பட்ட அவரவர் கடமைகளை ஆற்றுவதை தன் லட்சியமாகவும் ஈழம் ஒன்று மட்டுமே அவர்களின் இறுதி வெற்றி என்றும் தீர்மானங்கள் கொள்கின்றனர்.

அதன் முதல் படியாக, குழந்தைகள் சிதறி சக்கை சக்கையாக வாரிப் போட்டதிலிருந்து, மாதங்கியின் அண்ணன் பயித்தியமாய் திரிந்தது வரை, மலர்விழி வயிறு கிழித்து கர்ப்பத்திலிருந்து குழந்தையை எடுத்து சுட்டுப் போட்டது முதல், சின்ன வயசு பையன்களுக்கு சட்டி கழற்றிப் பார்த்து வெடி வைத்தது வரை, கணவனின் கண் முன்னாள் மனைவியையும், பிள்ளைகளின் கண் முன்னாள் பெற்றெடுத்தத் தாயையும் கர்ப்பழித்தது முதல் மாதங்கி வெடித்துச் சிதறி செத்தது வரை எல்லாமும் சாட்சிகளோடு கல்லூரி மாணவத் தலைவனுக்கு நண்பர்களால் காண்பிக்கப்படுகிறது.

பிறகு அவன் மூலம் இதர கல்லூரி நண்பர்களையும் அழைத்துப் பேசி சாட்சி விவரங்கள் காண்பித்து, மெல்ல அது தமிழகத்தின் மொத்த கல்லூரிக்கும் பரவி, தமிழக இளைஞர் அணிக்குத் தெரியப் படுத்தப் பட்டு, அவர்கள் ஒருபுறம் படை சூழ, மறுபுறம் மடை உடைத்து வரும் வெள்ளத்தினைப் போல் கல்லூரி மாணவர்கள் திரண்டு வர; எல்லா ஏற்பாட்டினையும் வெளியே யாரையும் அறியவிடாமல் செய்துக் கொண்டு திடீரென வெடித்த வெடிகுண்டுப் போல ஓர்தினம் நிர்ணயிக்கப் பட்டு,  அன்று தமிழகம் முழுக்க வெடிக்கிறதொரு ஈழத்திற்கானப் புரட்சி.

அனைத்துக் கல்லூரிகளுக்கும் பஞ்சினில் பரவிய தீ போலப் பரவி, காட்சிகள் ஆங்காங்கே ஒட்டப் பட்டு காண்போர் மனதையெல்லாம் கண்ணீரால் சுட்டுக் கதற வைத்தனர் இளைஞர் படையினர்.

இதுவரை எங்கோ இலங்கையில் சண்டை என்று கேட்டிருந்த மக்களுக்கும் மாணவர்களுக்கும், சண்டை ஈழத்தில் என்றும் அது தன் மக்களுக்கான இழப்பு மட்டுமே என்றும் அறிவிக்கப் பட –

தான் உண்டு; தன் படிப்புண்டு என்றிருந்த மாணவர்களுக்கு, குழந்தைகள் இப்படி செய்யப் பட்டுள்ளார்கள், அக்காத் தங்கைகள் இப்படி செய்யப் பட்டுள்ளார்கள், தாய்மார்கள் வயோதிகர்கள் இப்படி வன்முறைக்கும் வன்புணர்சிக்கும் ஆளாக்கப் பட்டுள்ளார்கள் என்பது ஆதாரத்தோடு அறியப் பட கோபத்தை அடக்கமுடியவில்லை அவர்களால்.

மொத்தக் கல்லூரி மாணவகளும் ஓரிடத்தில் தன் சுய சிந்தனையோடு யார் தலைமையும் இன்றி ஒன்றுகூடி ஈழத்திற்கென ஒட்டுமொத்தமாய் கொடி பிடித்தனர். தீர்பு இங்கே நிர்ணயிக்கும் வரை படிப்பு கிடையாது கல்லூரி கிடையாது ஒன்றும் கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்தனர். மீறி எங்களுக்கான கோரிக்கை நிறைவேறா விட்டால் சாகவும் துணிவோம், அவசியப் பட்டால் சாகடிக்கவும் துணிவோமென்று மிரட்டாமல் தன் துணிவினை ஒர்ருமையினால் காட்டினர்.

தமிழக மூளை முடுக்கெல்லாம், பட்டிதொட்டியெல்லாம், எங்கு காணினும் ஈழத்து புகைப்படங்களும், கையின்றி காலின்றி தலையின்றி நிர்வாணப் படுத்தப் பட்டு, உடல் சள்ளடையாக்கப் பட்டு, குழந்தையின் தலை கூட சிதறடிக்கப் பட்டு பார்ப்பதற்கே உடம்பு கூசும் படங்களும், அங்கு நடந்த அத்தனை போர்க்குற்றத்திற்கும் ஆதாரம் காட்டும் விதமாகவும் ஒவ்வொன்றினையும் செய்தனர்.

மக்கள் ஆங்காங்கே நடந்ததை கண்டுத் துடித்து வெறி பிடித்து எழும் விதமாக அத்தனை இளைஞர்களும் தன்னாலியன்றதை செய்தனர். அவரவருக்கு இட்ட கட்டளைப் படி அவரவர் செயலாற்றினர். ஆண் பெண் பெரியவர் சின்னவர் என்று எல்லோருமாய் ஒன்று சேர்ந்து ஈழம் என்னும், தமிழர் என்னும் ஒரேயொரு ஒற்றைக் குடைக்குள் நின்றனர்.

பாவாடைச் சட்டை போட்ட பெண்குழந்தைகள் கூட தனித்தனியாக நின்று கோஷமெழுப்பி, பெரியோர்களுக்கும் இளைய சமுதாயத்திற்கும் முழு பலமாக நின்றனர். எந்த புள்ளியிலும் அடங்கி விடாமல், யார் சொல்வதையும் கெட்டுவிடாமல், எதற்கும் பயந்தோ விட்டுக் கொடுத்தோ சுயநலம் கொண்டோவிடாமல் மொத்த கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்க; விஷயம் தீ போல் பரவி, கல்லூரி மூலமாக மட்டுமின்றி  ஊடகங்கள் வாயிலாகவும் அண்டை மாநிலத்திற்கெல்லாம் தகவல் சென்றடைந்து, இரக்கப் பட்ட மனமெல்லாம், மனிதம் நிறைந்த மனமெல்லாம் ‘களத்தில் இறங்கி ஈழத்திற்கென பரிந்துப் பேசியது.

ஒரு கட்டத்தில் காவலாளிகள் அரசு சார்ந்தவர்கள் கூட மாணவர்களின் நியாயம் புரிந்து, மக்களின் எழுச்சி புரிந்து ‘அங்கு நடத்தப் பட்ட கொடுமைகள் அத்தனையும் அறிந்து; அந்த துரோகத்திற்கு ஒரு முடிவு கட்ட இதுவே சமயமென்றெண்ணி தன் கோபக் கண்களை மூடிக் கொள்ள; நாடு முழுக்க வெடிக்கிறதொரு ஈழப் புரட்சி; ஸ்தம்பித்து போகிறது இந்திய அரசு!

மாணவர்கள் மொத்தபேரும் ஒன்று திரண்டனர். இளைஞர்கள் ஒருவரும் எக்காரணம் கொண்டும் அசர வில்லை. விடயம் கட்டுப் படுத்த இயலாமல் போக சென்ரல் போலிஸ் வந்து தமிழகத்தில் குவிய ஆரம்பிக்கிறது. மொத்தபேரும் சத்திய சீலன் இருக்கும் கல்லூரியை முற்றுகை இடுகிறார்கள். ஆங்காங்கே 144 சட்டம் போடப் போவதாக அறிவிக்கப் படுகிறது.

என்றாலும், யாரால் எது நடக்கிறது, யார் இதை முதல் ஆரம்பித்தார்கள், யார் யார் கூட்டு, யார் இதற்கெல்லாம் மூலக் காரணமென்று ஒன்றுமே தெரிய வாய்ப்பின்றி மொத்த மாணவர்களும் இளைஞர்களும் ஆண்பெண் சமுகமென மொத்தப் பேரும் தமிழராய் மட்டும் கிளர்த்தெழுந்து நிற்க; வானம் நோக்கி முதல் எச்சரிக்கையாய் துப்பாக்கிக் கொண்டு சுடுகிறது மத்தியக் காவல் துறை..
——————————————————————————————-
தொடரும்…

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கொழும்பு வழியே ஒரு பயணம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

16 Responses to கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 15)

 1. Ramasamy NallamuthuPillai சொல்கிறார்:

  திரு. வித்யாசாகர் அவர்களுக்கு! இந்த சிறிய வயதில் உயர் பதவி, மேலோங்கிய எழுத்துத்திறமை எல்லாவற்றுக்கும் மேலாக உங்களின் Hero போன்ற வசீகர அழகு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது! உங்கள் கொழும்பு வழியே ……என்ற கதையை படித்த போது என் நினைவுகள் பின் நோக்கிச்செல்கின்றன காரணம் இலங்கை கண்டி என்ற ஊரில் வளர்ந்து பின் 1980 களில் கொழும்பில் குடியேறி அதன் பின் 1990 ல் தாய்நாடான தமிழகத்துக்கு புலம் பெயர்ந்து பின் 1995 ல் Canada க்கு வந்துள்ளேன். உங்கள் அறிமுகம் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கிறது. நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துகிறேன். நன்றி.

  Ramasamy Nallamuthupillai- Ottawa-Canada

  Like

  • மிக்க நன்றிகள் ஐயா. உங்களைப் போன்றோரின் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களே எனக்குத் துணை. எனைப் படிப்போருக்கு என் மக்களுக்கான வலியையும் அவர்களுக்கான விடியலின் சிந்தனையையும் பகிர்ந்துக் கொள்வதே என் நோக்கமாக இருக்கிறது. அதன் காரணம் எடுத்த முயற்சிகளும் அக்கறையும் எழுத்தின் வசீகரமாக இருக்கலாம். எதுவாயினும் நன்றிகளுடன் மேலும் என்னை மேன்மைப் படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் பக்குவப் படுத்திக் கொள்கிறேன்!!

   Like

 2. munu.sivasankaran சொல்கிறார்:

  தமிழனாய் பாராட்டுகிறேன் ..!
  நண்பனாய் பதட்டப்படுகிறேன்..!

  Like

  • நட்பிற்கு நன்றி பாராட்டும் வேளை; நம்மை நாம் தமிழனாகவே முதலில் முன்னெடுத்துக் கொள்வோம் ஐயா. பதற்றத்தின் காரணமும் உங்களின் மன ஓட்டங்களும் புரிந்தாலும் படிப்போர் கூட மனிதர் தானே; இத்தனை கொடுமைகளுக்கு பதில் கூற இயலாதார் என்னை மட்டும் வேறெந்த நோக்கத்தில் குற்றப் படுத்திவிடமுடியும்? மீறி அதையும் செய்வர் எனில் எதற்கும் துணிவோம் எனும் நிலையில் நம் இனத்தின் ஒரு பகுதி மக்களையேனும் காக்கும் கடமையில் தான் நாமும் இருக்கிறோம் என்பதும் சிந்திக்க வேண்டியுள்ளது. என்றாலும், இக்கதையின் முடிவு மக்களிடத்தே அமைதியை ஏற்படுத்தவே முயல்கிறதென்பதை முத்தாய்ப்பாக்க முயல்கிறேன்ந ஐயா. எல்லோரின் அன்பின் வாழ்த்துக்கள் எனை விட்டுவிடவாப் போகிறது. பார்ப்போம்; நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்!!

   Like

 3. suganthiny75 சொல்கிறார்:

  ஒரு வாசகியாக நான் இதை வாசித்தாலும், ‘எனக்கும் நேர்ந்த பல அனுபவங்கள் அதுபோல் உள்ளன. அதை என்னால் இப்போது தான் உணர முடிகிறது..

  Like

 4. suganthiny சொல்கிறார்:

  ஒரு வாசகியாக நான் இதை வாசித்தாலும், ‘எனக்கும் நேர்ந்த பல அனுபவங்கள் அதுபோல் உள்ளன. அதை என்னால் இப்போது தான் உணர முடிகிறது

  Like

 5. suganthiny சொல்கிறார்:

  ஒரு வாசகியாக நான் இதை வாசித்தாலும், ‘எனக்கும் நேர்ந்த பல அனுபவங்கள் அதுபோல் உள்ளன. அதை என்னால் இப்போது தான் உணர முடிகிறது..

  Like

 6. suganthiny75 சொல்கிறார்:

  வித்தியா அண்ணா வணக்கம். தங்களின் கொழும்பு நோக்கிய ஒரு பயணம் தொடர் இன்னும் முடிவடையவில்லை என நினைக்கிறேன். கண்டிப்பாக நான் உங்களை பாராட்டியே ஆக வேண்டும் ஏனெனில் உங்களின் ஒவ்வொரு தொடரிலும் என் மனதைப் பறிகொடுத்து அந்தக் கதையில் நானும் ஒரு பாத்திரமாக இடம்பெறுவது போலவே உணர்கிறேன்.

  தவிர, //நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் – ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே// இதில், ஒரு இதயம் விழித்துக்கொண்டாலும் கூட, நான் வெற்றிபெற்று விடுவேன் என்று நீங்கள் கூறியது உங்களிற்கு சரி என்று பட்டாலும் எனக்கு அது சரியாக படவில்லை ஏனெனில் அந்த வார்த்தையை சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் அது உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை நீங்களே இழப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. கவலைப்பட வேண்டாம் உங்கள் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நாளை உங்கள் வீட்டு வாசல் கதவை உடைத்துக்கொண்டு உங்களை வந்து சேரும் என்பதில் எவ்வித ஜயமுமில்லை.

  Like

 7. suganthiny75 சொல்கிறார்:

  neengal seithathai ungal santhathium seijja iraivanai piraaththikkiren.

  Like

 8. suganthiny75 சொல்கிறார்:

  neengal seithathai ungal santhathium seijja iraivanai piraaththikkiren. marupadium thangalin veruthodatitku coments eluthum paakijam enakku kidaikkumaa??????

  Like

 9. nalayini thiyaglingam சொல்கிறார்:

  கொழும்பு வழியே ஒரு பயணம் முலம் பலவற்றை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.
  “ஏவுகணை எதுவும் வேண்டாம் எழதுகோல் ஒன்றே போதும்” சகோதரனே

  Like

 10. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம் – ஈழ விடுதலையுடன் – நிறைவுறுகிறது!! | வித்யாசாகரின் எழுத்து பயணம்

 11. பட்டுக்கோட்டை சத்யா சொல்கிறார்:

  ஈழத்தில் பிறக்காவிடினும் தானே நேரில் அனுபவித்தது போன்று இந்த நெடுங்கதையை மிக மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்! இன்றைய தமிழகத்தில் நடக்கும் எழுச்சி மிக்க மாணவர் போராட்டங்கள் உங்கள் தீர்க்கதரிசனத்தை நிச்சயமாய் பறை சாற்றுகிறது! ஒரு சிறந்த படைப்பாளிக்கு இதைவிட அவர்தம் இலக்கியத் தரத்தை நிரூபித்திடும் உரைகல் வேறு எதுவும் இல்லை! மனப்பூர்வமான பாராட்டுக்கள் அய்யா! உங்கள் சுதந்திர ஈழக் கனவு நிறைவேறிட பல கோடி வாழ்த்துக்கள்!! 🙂 !!

  Like

வித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s