காதல் மறுக்கப் பட்ட காதலியின்
கால்கொலுசு சப்தங்கள்;
இதயம் மரணத்தினால் துடிக்கும்
துடிப்பு;
துரோகத்தால் புடைக்கும்
நரம்பு;
பிரிவின் வலியின்
அழுத்தம்;
திருட்டு கொள்ளைகளால் எழும்
பயம்;
குழந்தை கதறும் அலறலின்
கொடூரம்;
பெண் கற்பழிக்கப் படும்
காட்சிகள் மற்றும் கதைகள்;
கொட்டிக் கொடுக்கப் படும்
வட்டியின் வேதனை;
உறவுகளின்
சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும்
குடும்ப அரசியல்;
அலுவலக மேலதிகாரி
அரசியல்வாதி
காவல்துறை மற்றும் ரவுடிகளின் மிரட்டல்கள்;
சமுகம் சுற்றிக் கிடக்கும்
பொறுக்கமுடியா
அநீதிக் குப்பைகளென –
எல்லாமுமாய் சேர்ந்துக் கொடுத்தது
முப்பத்தைந்து நாற்பது வயதில் – ஒரு
பிரெசர் மாத்திரையும் –
இரண்டு வேலை உப்பில்லா சோறும்;
இதயவலி உடன் இலவச இணைப்பும்!!
——————————————————
வித்யாசாகர்
நல்ல கவிதை – வாழ்த்துக்கள்.
உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
LikeLike
சமூகம் சரியானால்; எல்லாம் சரியாகும் தோழர், முயற்சிப்போம்!
LikeLike
உண்மை தோழா…
LikeLike
வருத்தத்தின் ஒவ்வொரு தடமும் வாழும் சமூகமிடத்தே இருந்து பிறக்கிறது. எனினும் சமுகத்தின் பாடுபொருள் நாமென்பதால்; நாம் ஒவ்வொருவரும் நம்மை சரி செய்துக் கொள்ள எண்ணினால் சமுகம் சரியாகும். சமுகம் சரியானால் எல்லாம் சரியாகும் தான் ரமேஷ். மிக்க நன்றியும் அன்பும் உரித்தாகட்டும்!
LikeLike
காதலை பற்றி எனக்கு தெரியாததால் எனக்கு பதில் போட தெரியவில்லை இருந்தாலும் நன்றாக இருக்கு.
LikeLike
நன்றி சுகந்தினி. காதல் ஒரு உணர்வன்றி வேறென்ன. ஏற்றி வைப்பதுபோல் எரியும் விளக்கு எனலாம். அது ஒளியும் தருகிறது, சிலநேரம் வீட்டையும் எரிக்கிறது. எனினும், ஏற்றுபவரை பொருத்தது; காதல் வெளிச்சமாவதும், நெருப்பாவதும்!!
LikeLike
தாய் மடி உண்டு …தனக்கென
உருக ஓருயிர் உண்டு..!-
போய்விடும் எதுவும் ..
புதுநாள் நாளை…
சேய்களின் வானில்
சிறகை விரிப்போம்
நோய் எனும் வீட்டின்
நுழைவாயில் தானே
நொடியில் திரும்ப
உன்னால் முடியும்…!ஆம் ..
உன்னால் மட்டுமே முடியும்…!
எழுத்துக்குழைப்பவன்
இறையை மதிப்பவன்
கழுத்து வரைக்கும்
கவலை சூழ்ந்தாலும்
கழற்றிப் போட்டு
காலில் மிதிப்பவன்
பழுத்த நெஞ்சினன்
பதறா தோழனே…!
அழுத்திக் கூறுவேன்…
அன்பாய் பெருகுவாய்…!
LikeLike
உங்களின் நம்பிக்கை என்னை மேலும் பலப் படுத்துகிறதையா. நிச்சயம் எண்ணத்தினால் ஆன மாற்றம் மாத்திரைகளை விரைவில் குறைத்துவிடும். தமிழால் தெம்பூட்டிய உங்களின் ஆசி, ‘உங்களின் என் மீதான நம்பிக்கையை எள்ளளவும் குறைய விட்டுவிடாது. மிக்க நன்றிகளும் அன்பும் உரித்தாகட்டும் ஐயா!!
LikeLike