நீடுவாழ்வாய்; உன் பேரும் வாழும்!!

மணமகன் : சா. சுரேந்தர் மணமகள்: க.ப்ரீத்தி மணநாள்: 03.06.2011

ல்லும் பூக்கிறது காயும் இனிக்கிறது
நெஞ்சம் நிறைத்துவிட அவள்வேண்டி
நெடுந்தூரம் வந்தோனின் நினைவெல்லாம் – இனி
அவள் வாசம் பொங்கும்; வசந்தத்தின் அர்த்தமினி பிரீத்தியும் என்றாகும்!

குறிஞ்சிப் பூக்கும் நடையில் பூத்தவளே
கொஞ்சும் தமிழ்போல் பேறு பல வாய்த்தவளே
சொல்லிமுடிக்காப் பல கதை கோர்த்து வாயேண்டி
சுரேந்தரன் மிச்ச நாளை; நீ நல்லது பேசியேத் தீரேண்டி;

நீ வந்த நாளினி வாழ்வும் புது அர்த்தப் படும்
காணாத கனவிற்கு அவன் சிரிப்பெல்லாம் காத்திருக்கும்
நெஞ்சார வாழ்த்தும் பல உள்ளத்தின் அன்போடு
வாழ்வின் கடைசி வரை இனி இனிப்பாய்; இனிப்பாய் இனிக்கும்!!

கால்கள் வலிக்காது குடும்பம் சுமந்தோனின்
நாட்கள் கனக்காது நிறைய நீ வந்தாய்
பாக்கள் சுகம் போல உன் பாதம் பதியட்டும்
தாங்கும் நெஞ்சினன் வாழ்வுமினி எப்போதும் சிறக்கட்டும்!

ஞ்சா மனதினன் ஆயுள் கூடட்டும் – செல்வங்கள் பதினாறும்
சொல்லாமலினி சேரட்டும்; பெற்றோரின் பிணைப்போடு
ஆனந்தக் கண்ணீரும் வாழ்த்தட்டும் – உற்றாரும்
அன்பும் அறமும் செழிப்புமாய் அவன்; நீடூழி உன் நெற்றியில் வாழட்டும்!!

மிக்க அன்போடும் வாழ்த்துக்களோடும்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்த்துக்கள்! and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நீடுவாழ்வாய்; உன் பேரும் வாழும்!!

  1. jramanujam சொல்கிறார்:

    வாழ்த்திய உங்களுக்கும்
    உளம்கனிந்த வாழ்த்தகள் உரித்தாகுக
    புலவர் சா இராமாநுசம்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s