1
அப்பா சொல்லுடா என்றேன்
சொன்னாய்,
அம்மா சொல்லுடா என்றேன்
சொன்னாய்,
அண்ணா சொல்லுடா என்றேன்
சொன்னாய்,
போடா சொல்லு என்றேன்
போடா என்றாய்,
பொருக்கி சொல் என்றேன்
நீயுமென்னைப் பொருக்கி என்றாய்;
எதை கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளதோ
அதையே நானும் கற்றிருக்கிறேன் என்பதை
எனக்கும் புரியவைத்த – ஞாமடா நீயெனக்கு!!
—————————————————————————-
2
சிறகடிக்கும்
பறவைக் குஞ்சு போல்
எனைக்கன்டதும் அப்பே அப்பே என்று
தாவி தாவி பறப்பாய் நீ;
வயிற்றில் சுமந்த பட்டாம்பூச்சி பற்றி
எனக்குத் தெரியவில்லை என்றாலும்
மனதெல்லாம் உனை எண்ணி –
ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள்
சந்தோசமாய் பறக்கும்!!
————————————————————-
3
எப்படியோ உனக்கு என் மடி
சொர்கபுரியாய் சொக்குகிறதோ;
மடியில் படுத்ததும்
தூங்கிப் போவாய்
நான் உன் முகம் பார்த்தவாறே
தலை தடவி தடவி விடுவேன்;
தூக்கம் உனக்கு பரிசான
அந்த கணமெல்லாம் –
வாழ்க்கை எனக்கும் வசமாகும்!
————————————————————-
4
எதை மென்றாலும்
நாக்கு தட்டி கேட்பாய்;
நானும் மென்றதை எல்லாம்
நைய மென்று உனக்கு எச்சிலோடு
தருவேன்;
நீ ஆர்வத்தோடு தின்கையில்
தின்றது உனக்கு இனித்ததோ
அல்லது எச்சில் இனித்ததோ என்று
பூரிப்பில் முகமெல்லாம் பூத்துப் போவேன்
நீ மீண்டும் நாக்கு தட்டி தட்டி வருவாய்
உன்னை போல் இன்னும் நான்கு
குழந்தைகள் பிறந்தாலென்ன என்று
மனதார எண்ணிக் கொள்வேன்!!
—————————————————————–
5
சிலநேரம் உன் அழுக்கு ஆடை கழற்றி
நுகர்ந்துப் பார்ப்பேன்;
நுகர்ந்து நுகர்ந்து
உன் வாசத்தை எல்லாம்
உயிர் முழுக்க சேமிப்பேன்;
உனை விட்டு பிரிந்திருக்கும்
சிலநேரம்
உன் வாசத்தில் உயிரெல்லாம் மணக்கும்;
நினைவுகள் உள்ளிருந்து உன் நினைவாய் எனக்குள்
நீயாகவே பூக்கும்!!
————————————————————————
வித்யாசாகர்
// மடியில் படுத்ததும்
தூங்கிப் போவாய்
நான் உன் முகம் பார்த்தவாறே
தலை தடவி தடவி விடுவேன்//
ஆழமான பாசத்தின் வெளிபாடு..
மிக அருமை!!
LikeLike
மிக்க நன்றி உமா. நிறைய எண்ணுவதில் கொஞ்சமே எழுதப் படுகிறது. எழுதுவதன் பாடுபொருளும் வாழ்வின் பாடுபொருளும் அவர்களே… குழந்தைகள்!!
LikeLike
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
LikeLike
மிக்க நன்றி ஐயா… அவள் ‘பூ….. என்று உதடு குவித்து விடும் எச்சில் குமிழியிலிருந்து கூட நிறைய கவிதைகள் பூக்கிறது. எழுதவே முடிவதில்லை, எல்லாவற்றையும்!!
LikeLike
”சில நேரம் உன் அழுக்கு ஆடை கழற்றி முகர்ந்து பார்ப்பேன்..”
என் மனம் வெளுத்தக் கவிதை..!
LikeLike
மிக்க நன்றி ஐயா. வாழ்வின் பேரின்பங்களில் இப்படி சிலது கிடைத்து விடுகிறது; அவர்களோடு இருக்கும் தருனங்களாக..
LikeLike
அழகான ஞானப்பகிர்வாக அருமையான கவிதைப் பகிர்விற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
LikeLike
மிக்க நன்றி சகோதரி. தங்கள் அன்பும் பாராட்டும் எனைப் போன்றோரின் படைப்புக்களுக்கு பலம் சேர்ப்பதில் அடுத்த படைப்புக்களுக்கான தடமும் சேர்ந்து கிடைத்துவிடுகிறது.
LikeLike
சிறகடிக்கும்
பறவைக் குஞ்சு போல்
எனைக்கன்டதும் அப்பே அப்பே என்று
தாவி தாவி பறப்பாய் நீ;
வயிற்றில் சுமந்த பட்டாம்பூச்சி பற்றி
எனக்குத் தெரியவில்லை என்றாலும்
மனதெல்லாம் உனை எண்ணி –
ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள்
சந்தோசமாய் பறக்கும்!!
————————————————————-
ஆனாலும் சும்மா சொல்ல கூடாது இத்தனை அன்பும் தேக்கி
வச்சிருக்கீங்க எனக்கு ஒரே பொறாமையா இருக்கு.
LikeLike
மனதின் அன்பிற்கு வார்த்தைகளோ உருவகமோ அமைவதேயில்லை சுகந்தினி, இதெல்லாம் அன்பின் ஒரு துளி வெளிப்பட்டதன் சுவடு போல தான்…
செல்லங்களின் உடனிருக்கும் வாழ்க்கை; வாழ்க்கை என்பது மட்டும் உண்மை!!
LikeLike
தூக்கம் உனக்கு பரிசான
அந்த கணமெல்லாம் –
வாழ்க்கை எனக்கும் வசமாகும்!//
கவிதை வரிகளுக்குள் கரைவதுபோன்றொரு உணர்வு. அருமையான படைப்பு.. வாழ்த்துகள் சகோ..
LikeLike
என்னன்பு மல்லிகாவிற்கு அன்பு வணக்கமும் நன்றிகளும். இன்னும் பதியா பதிவுகளில் கரைந்தே இருப்போம். நம் கண்ணீர் கூட படைப்புக்களாகவே நிறையப் படட்டும்!!
LikeLike