மரணம் இரைந்த தெருக்கள்..

கைமாற்றி கைமாற்றிக்
கொண்டுவந்த
அறிவுத் திரள்களின் பிதற்றலில்
எப்படியோ கொப்பளிக்கிறது ஞானம்;
அல்லது மரணம்!

தீக்குச்சி உரசி வீசும்
நேரத்திற்குள்
அணைந்துவிடுகின்றன
உயிர் விளக்குகள்;
அல்லது பூத்துவிடுகிறது உயிர்ப் பூ!!

காற்றுப் பையின்
வெற்று இடத்தில்
கண்ணுக்குத் தெரிவதேயில்லை
மரணம்;
அல்லது பிறப்பின் காரணம்!

ஞானத்தை அடையாளம்
காட்டாமலேயே
மரணம் நிகழும்
கடவுளர்கள் வாழும் வீதி;
வீதி நிறைய கோபுரக் கோவில்களும்; குடிசைகளும்!!

கைநிறைய வைத்திருக்கும்
மரணத்தை
அவர்களின் விருப்பமின்றியே
வாரி இரைக்கிறது – ஒவ்வொரு
மரணம் நிறைந்த தெருக்களின் நெடுகும்;
நாம் தெரிந்தும்; தெரியாமல் செய்த தவறுகளும்!!
—————————————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to மரணம் இரைந்த தெருக்கள்..

  1. Rathnavel சொல்கிறார்:

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றியும் வணக்கமும் ஐயா. ஒரு ஒரு துளித் துளியாக சேர்ந்த பலரது உழைப்பின் செல்வங்கள் கோபுரங்களாய் கண்முன் நிற்கிறது. அதே கரிசனம் பக்தி மனிதனுக்கு மனிதன் மேல் ஏற்படாததில் தான் குடிசைகள் மிஞ்சுகின்றன.

      கோபுரம் நம் அனாவசியம் அல்ல; ஓட்டை குடிசையில் ஒழுகும் மழையில் நனையும் மனிதனுக்கு முன் கோபுரம் வீற்றிருக்கும் சாமி கூட ஒருவேளை அந்த கோபுரத்தையும் இந்த மனித சனத்தையும் கடிந்தே இருக்கும்!!

      Like

  2. Umah thevi சொல்கிறார்:

    //கைநிறைய வைத்திருக்கும்
    மரணத்தை
    அவர்களின் விருப்பமின்றியே
    வாரி இரைக்கிறது – ஒவ்வொரு
    மரணம் நிறைந்த தெருக்களின் நெடுகும்;
    நாம் தெரிந்தும்; தெரியாமல் செய்த தவறுகளும்!!//

    மிக அருமை!!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி உமா. நம் ஒவ்வொரு செயலுக்கும் நாமே காரனாமாகிறோம். நம் நன்மை நமக்கு நல்லதையும், தீமையே நம் மரணம் வரையிலும் நிச்சயிக்கிறது’ என்பதை சற்று நீளமாக நூல் பிடித்தால் புரிகிறது.

      உண்மையில், அதிகபட்சம் அவரவர் முடிவை அவரவர் கையில் வைத்தே திரிகிறோம். அதை நல்வழியில் முடித்துக் கொள்வதும் நல்லாரகவே வாழ்ந்து நீல்வதும் நம் கண்ணிய வாழ்வினைப் பொறுத்தே இருக்கிறது!!

      Like

  3. munu.sivasankaran சொல்கிறார்:

    ஒவ்வொரு படைப்பாளிக்கும் மாஸ்டர்பீஸ் ஒன்று இருக்கும் என்பார்களே.. அதை எனக்கு காண்பித்துவிட்டீர்கள்..!
    உங்கள் ஆண்மபலத்தின் வெளிப்பாடு இது..! பாராட்டுக்கள்..!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      வணக்கம் ஐயா, தங்களின் பெருந்தன்மை பூத்த பூரிப்பின் நன்றிக்குரிய உணர்வு மேலிடுகிறது. ஒவ்வொரு கவிதையும் நம் உணர்வின் வெளிப்பாடென்றாலும் இது வாழ்தலின் குறைதலின் நிறைதலின் யாதார்த்தம் அலசும் உணர்வொன்றை பதிவு செய்ய எண்ணிய படைப்பு, சிலருக்குப் புரிந்தும் புரியாமலும் பக்கம் நிறைகிறது!

      Like

  4. munu.sivasankaran சொல்கிறார்:

    முதலடியிலேயே என்னை முழுதாக அடித்து வீழ்த்திவிட்டீர்கள்…!

    Like

  5. வித்யாசாகர் சொல்கிறார்:

    இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே ஐயன் திருவள்ளுவர் சொல்லாததை நாம் சொல்லிடவில்லை. என்றாலும் இன்றும் சொல்ல வேண்டியுள்ளது பாருங்கள்…

    காலங்காலமாய் என்ன தான் சொன்னாலும் இயங்கும் உலகம் அதன் விருப்பாம் மாறாமலே தான் இயங்குகிறது போல்; அவ்வப்பொழுது அவைகளை முன்மாதிரி கொண்டு பதிந்து செல்பவர்கலாகவே இருக்கிறோம் நாம்!!

    Like

பின்னூட்டமொன்றை இடுக