இதோ இதோ என் கண்ணே என்னைக் குத்துதே
மழை மழை அதன் சாரல் தீயாய் சுட்டதே,
அவன் அதோ தூரம் நின்று கொல்வதேன்
உயிர் உயிர் இருந்தும் இல்லா தானதேன்;
இதழ் வழி ஈரம் வற்றிப் போனதே
இரு விழி; திறந்தும் கனவுக் கொல்லுதே;
கணம் கணம் அவனைத் தேடி வாடுதே
கண்ணீர்மட்டும் காதலின்வழியே; உயிரைக்கொண்டுச் செல்லுதே;
காற்று வானம் இருந்தும் கண்ணை மறைக்குதே
அவன் பேசும் வார்த்தை ஒன்றைக் கேட்கத் தவிக்குதே,
கல்லில் வடித்த சிலையாய் நானும் ஆனதேன்
மௌனம் உடைக்கா கண்ணீர் பெருகி நோவதேன்;
கண்ணீர் துடைக்கும் கைகளிரண்டை
அவனை நோக்கிக் கேட்கிறேன் –
உலகம் மொத்தம் அவன் பார்வை தெரியும்
இரு கண்களை தேடிப் பார்க்கிறேன்;
காதல் காதல் கொள்ளை நெருப்பாய்
என்னைச் சுட்டுக் கொல்லுதே – அவன்
தொட்டுப் பூக்கும் பூவைப் போல – அவன்
வருகை நோக்கி வாழுதே;
அவன் இதயம் திறந்த கண்களிரண்டும்
மரணம் நோக்கி மூடுதே;
மரணம் கடந்தும் மரணம் கடந்தும் – அவன்
வருவானென்றே நம்புதே!!
——————————————————————————
வித்யாசாகர்
“ஓசை” திரைப்படத்திற்காக எழுதிய பாடலிது!
LikeLike
ஓ.. பாராட்டுக்கள்!!
// இதழ் வழி ஈரம் வற்றிப் போனதே
இரு விழி; திறந்தும் கனவுக் கொல்லுதே;
கணம் கணம் அவனைத் தேடி வாடுதே
கண்ணீர்மட்டும் காதலின்வழியே; உயிரைக்கொண்டுச் செல்லுதே;//
அழகான வரிகள்..
LikeLike
நன்றி உமா. இசையின் வழியே வருகையில் மேலும் சிறக்கலாம், நம் படைப்புக்களை பலரிடம் கொண்டு செல்லும் பாலமாகவும் அமையலாம் இப்பாடல்கள். பார்ப்போம். நம்பிக்கையோடிருப்போம்!!
LikeLike
நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் – ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே! …./////
சூப்பர்ப்
LikeLike
ஆம் நிசி. உறக்கம் தொலைத்த எழுத்துக்களே இங்கு அதிகம். அது என் உறவுகளுக்கு பயன்மிக்கதாய் அமையுமெனில், உறக்கமொரு போருட்டுமில்லை. ஒன்றை இழக்கிறோம் என்பதை விட, ஒன்றை அடைவதை நிறைகிறேன்!!
LikeLike