உள்ளெரிந்த நெருப்பில்
ஒரு துளி போர்த்தி வெந்தவளே,
உனை நெருப்பாக்கி சுடப் போயி
எம் மனசெல்லாம் எரிச்சியேடி..
மூணு உயிர் காக்க உடம்பெல்லாம்
தீ மையிட்டுக் கொண்டவளே,
தீ’மையில் உன் விதியெழுதி – எம்
பொய்முகத்தை உடச்சியேடி..
விடுதலை விடுதலைன்னு
வெப்பம்தெறிக்க கத்துனியா?
அதை கேட்காத காதெல்லாம்
இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி..
செத்தா சுடுகாடு, சும்மா இருந்தா
நீதி ஏதுன்னு; ஒரக்கக் கத்திப் போனவளே,
நீ நெருப்போட புரண்டபோதே
தமிழன் வரலாறே கருகுச்சேடி…
பாரதத் தாய் அஹிம்சை நெருப்பில்
உன் உயிர்பட்டுத் துடிதுடிக்க –
உன் ஒருத்தி மரணம் போதும் போதும்
உலக கண்ணெல்லாம் ரத்தமேடி..
இப்படி கெட்ட பேரு வாங்கிவர
மரணம் தான் சொல்லுச்சாடி ?
இந்த சின்னவயசு கனவுகளை
வரலாற்றில் எரிச்சியேடி..
இனி கத்தியழ யாரிருக்கா
இப்படி ஒன்னொன்னா போச்சுதுன்னா?
நாளை குரல்கொடுக்க யாரிருக்கா
நீயெல்லாம் எரிந்துப்போனா?
உன்னொருத்தியோட நிருத்திக்கடி
வேண்டாமே இனி ஓரிழப்பு
போராட்ட குணத்திற்கு –
தற்கொலைதான் பேரிழப்பு;
நீ விட்ட உயிரு மீட்டிடாத
கண்ணீர் – மனசின் பெருநெருப்பில் பொசுங்குதேடி
இனி மொத்த நாடும் சேருமோ இல்லையோ
சேரா தமிழர் ஒற்றுமைக்கு செங்கொடியே காவலடி!!
————————————————
வித்யாசாகர்
“போராட்ட குணத்திற்கு –
தற்கொலைதான் பேரிழப்பு;” aam. aam.
LikeLike
மனம் நெடுகும் பயம் ஐயா. எங்கு முத்துக்குமாருக்குப் பின் வந்த நான்கு சகோதரர் போல வேறு இன்னும் எவரேனும் இப்படி செய்து விடுவார்களோ என்று. அந்த எண்ணத்தை அவர்கள் கொல்லும் முன் நாம் திரண்டெழுந்து நம் ஒற்றுமையின் பலத்தை காட்டி உயிரிழப்பின் அவசியமில்லை என்பதைக் காட்டி போராட்டத்தின் வலிமையை திடப்படுத்த எல்லோரும் தோள் சேர்வோம்!
LikeLike
“மூணு உயிர் காக்க உடம்பெல்லாம்
தீ மையிட்டுக் கொண்டவளே,
தீ’மையில் உன் விதியெழுதி – எம்
பொய்முகத்தை உடச்சியேடி!”..
போலிகள் நாளை காட்சிக்கு வரும்!
உன் புனிதம் காக்க தமிழினம் திரண்டு எழும்!
உன் தியாகம் ஒரு போதும் வீண் போகாது!!
தீர்ப்புகள் நாளை திருத்தி எழுதப்படும்!
தாயே! மகளே! அமைதி கொள்ளம்மா!
உன் பாதம் பணிகின்றோம்!
LikeLike
நிச்சயம் நம்மினம் திரண்டு எழும். செங்கொடியின் தீக்கதறல் அநீதி இழைத்தோரை சும்மா விடாது. நீதி வெல்லும் ஐயா..
LikeLike
ம் …
LikeLike
இனி ஒரு உயிர், ஒரு உயிரையும் வெறுமனே விட்டுவிடவேண்டாம், வீழ்ந்து வீழ்ந்து உலகிற்கு நம் இழப்பை காட்டிய இனம் இனி வாழ்ந்து எம் வலிமையை காட்ட துணியும் வேளையில் ஒரிழப்பும் பேரிழப்பே!!
LikeLike