1 ஆணலையும் பெண்ணலையும் அழகிய தீயாகி!!

டல் –
பல காட்சிகளை விழுங்கிக் கொண்டு
கரை வரும் போதெல்லாம்
ஒரு குறிப்பெடுத்தே உள்புகுகின்றன;

கால் நனைத்த கடலின் உப்புவாசத்தில்
ஒருதுளியும் –
மர்மமாய் தனக்குள் வைத்துள்ள
மரணத்தின் எண்ணிக்கையை
யாரும் தட்டிக் கேட்டிடாத மமதை
கடலுக்கு இருப்பதேயில்லை;

தோண்டத் தோண்டக் கிடைக்கும்
வரலாறுகளை
விழுங்கியதன் தடங்களை மறைத்து
அலையலையாய்
அடித்துக் கொண்டிருக்கின்றன கடலின்
ஒவ்வொருக் கரையுமென்பதை
காதில்
சொல்லிச் சொல்லியேப் போகிறது
ஆணலையும் பெண்ணலையும்..

உணர்வின் வழியே நின்று
எதையோ உசுப்பும்
ரத்தமென
கடல்
மணலின் உள்புகுந்து மேல்நின்று
உலகத்தின் அழிவை யாருக்கும் காட்டாமலே
உப்போடு கரைத்தே வைத்திருக்கிறது;

மூழ்காத கடலின் நடுவில் நின்றும்
தன் அழிவை மறந்து
ஆடும் மனிதர்களை
கடல்
எப்படியோ
மன்னித்தும் விடுகிறது,

சிலநேரம்  கடலும் தன்
கோரப் பல் இளித்து
ஆணலையையும் பெண்ணலையையும்
தன் கரையொழிக்கும் தீயாக்கி
நல்லோர் பொல்லாரையெல்லாம்
நடுக் கடலிலாக்கிக் கொன்றேத் தொலைக்கிறது; உயிர்
தின்றேத் தீர்க்கிறது; குடிசையெனத் தெரிந்தும்
பெற்றக் குழந்தையோடும் கலைக்கிறது…

கால் கை நறுக்கி மனிதரின் வரலாற்றை
முடமாக்கியே அமர்கிறது!!
————————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to 1 ஆணலையும் பெண்ணலையும் அழகிய தீயாகி!!

  1. nathnaveln சொல்கிறார்:

    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி ஐயா. கடலை காணும்போதெல்லாம், கடலைப் பற்றி நிறைய எழுத உள்ளதாய் நிறைய பேர் எழுதாததாய் ஒரு உறுத்தல் எழுத வேண்டி உந்துகிறது. உண்மையில் கடல் பார்க்க போனப் பின் காற்று வாங்கினேனோ இல்லையோ, நிறைய பொழுதுகளில் கவிதை வாங்கி வந்திருக்கிறேன்..

      Like

  2. suganthiny சொல்கிறார்:

    கடலலைகள் பாடும் அந்த இனிய இசையில் மயங்கிவிட துடிக்கையில்
    எதோ ஒரு ஓசை வந்து காதை குடையும் போது என்ன செய்வது என்று புரியாமல்
    ஏங்கிய இதயங்கள்…….

    மீதியில் ஒரு புதிய உண்மையை எமக்கு புகட்டிவிட்டு சென்ற அந்த
    கறை படிந்த அத்தியாயம்.

    என்னும் பொழுதெல்லாம் எம்மை எதோ எல்லாம் செய்யும் அந்த
    நாள்……..

    இவை ஒரு புறம் இருக்க வேலை வெட்டி இல்லாமல் காதலித்து,
    தொலையப்போகும் சந்தோசத்தை மெய் ஆக்கும் மணற்கரை.

    குடும்பத்தின் சுமை தீர்க்கும் மீனவரின்’ கடலே வீடு என எண்ணி, வாழ்ந்து வாழ்ந்து மாண்டு கொண்டிருக்கும் அவர்களின் சிம்ம சொப்பனங்கள்……..

    Like

  3. Umah thevi சொல்கிறார்:

    அற்புதமான கவிதை!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி உமா. எனக்கு பிடித்த மானசீகமான விசயங்களில் பெரிது கடலும். நான் மதிக்குமென் வணக்கத்திற்கு உரிய விஷயம் கடல். கடலைப் பற்றி இன்னும் நிறைய எழுத ஆசை. காலம் கடலை பற்றி மேலும் சொல்லித் தருமென்று நம்பியுள்ளேன்..

      Like

பின்னூட்டமொன்றை இடுக