திருக்குறள் பெருமை!!
அகர(ம்) ஆதி அடங்கிய முதன்மறை
அகில உலக அனுபவப் பொதுமறை
அறம் பொருள் காமத் திருமறை
ஆதாரம் புதைந்த நிதர்சன வழிமுறை!
எறும்புகள் ஊர்ந்திட மலையும் தேயும்
குறுவெண் பாவில் இதயம் கரையும்
குறலின் உன்னதம் கற்றவர் அறிவர்-மற்றவர்
குருவின் பயிற்சியில் தெளிவு அடைவர்!
வள்ளுவப் பெருந்தகை எழுதுகோல் எடுத்தார்
வான் மண்ணை மறந்தே அமர்ந்தார்
வாழ்வியல் சூத்திரம் கேள்வியாய் தொடுத்தார்-காலம்
வாழும் சரித்திரம் பதிலாய் தந்தார்!
காலத்தால் அழியா அறிவை கற்க-நாம்
கைப்பிடித் தழைத்தது எப்பா லென்றாள்
தப்பாமல் சொல்வேன் உறுதியாய் அறிவர்-அது
தாய்பால் தமிழ்பால் திருக்குறட்பா வென்று!
நித்தமொரு சப்தம் உலகின் மொழியில்
நிற்குமா அவலம் மனிதனின் வழியில்
உரைத்தார் அண்ணல் ஊன் நின்று- கால
வரைமுறை சொல்லி நன்மறை பயிற்று!
இயற்கையும் இல்லாலும் இனிமையின் இணைகள்
இதற்கேதும் உண்டிங்கோ ஈடிணை என்றார்
இளமையில் இனிமை கரைந்திட விழைந்தார்-காம
இலைமறை கனியாய் காதலை விதைந்தார்!
மூச்சின் பேச்சில் முக்தியை மறைத்தார்
மூழ்கி முத்தெடுத்து வாழ்ந்திடச் சொன்னார்
ஆட்சி பீடத்தில் மக்களை அமர்த்தி-மனிதன்
ஆண்டாள் மகத்துவம் பெருகிடும் என்றார்!
கனவுகள் காணுங்கள் உற்சாகம் என்றார்
கடமைகள் திறம்பட செயலில் கொண்டார்
உழைப்பை ஒருபடி மறுபடி உயர்த்தி-நல்
ஒழுக்கத்தில் அமைதியை முறைப்படி கண்டார்!
இன்றைய தேசத்தின் இறையாண்மை காத்து
திருக்குறள் பறைசாற்றும் நெறிமுறை பயின்று
வாழ்வியல் கடமையை நிறைவுற செய்தால்-நாமும்
நீதிநெறி கண்டு அவ்வழி வாழ்ந்து நிதர்சனம் பெறுவோம்!
———————————————————————————————————————
முகுந்தை உ.கு.சிவக்குமார், குவைத்.
திருக்குறளின் பெருமையை, கவிதை வடிவில் மிக அருமையாக சொல்லி உள்ளார்..
பாராட்டுக்கள் அவருக்கு..
LikeLike
ஆம் உமா. மிக நல்ல கவிதை. திருக்குறளை புரிவதே ஒரு ஞானம் வெளிப்படுத்தும் செயல்தான். திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களுக்கு தேவைப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இங்கு பொங்குதமிழ் மன்றத்தினர் வாரந்தோரும் அனைவரையும் அழைத்து மிக சிறப்பாக திருக்குறள் வகுப்பு நடத்துகின்றனர். அதுபோல் தமிழர் வாழும் பகுதிகளில் தேசங்களில் குறிப்பாக தமிழகத்திலும் இதுபோல் திருக்குறளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்தல் நம் வாழ்வியலை நெறிபட்ட முறைக்கு மாற்றும் என்று நம்பிக்கை உண்டு. அதன் வழியில், திருக்குறளையும் போற்றும் விதமாய் திருவள்ளுவரைப் பற்றி எழுதிய இக்கவிதை மிக்க பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியதாகும். ஐயா திரு. சிவகுமார் அவர்கள் அயரா தமிழார்வம் கொண்டு இதுபோன்ற பல படைப்புக்களை படைத்து வருகிறார்கள். அவரை நம் தோழமை உறவுகளின் மூலம் ஊக்கப் படுத்தும் விதமாகவும் கௌரவப் படுத்தும் விதமாகவும், என் மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கும் பொருட்டாகவுமே அவரின் கவிதைகள் இங்கு இனி வெளியிட உள்ளன..
LikeLike
இரண்டு வரி கவிதைக்குள் இத்தனை சுவாரஸ்யம் இருக்கு என்பது இப்ப
தான் புரியுது. இதை இணையத்தில் மட்டும் இல்லாம பத்திரிக்கை மூலமாகவும்
வெளியிட்டா நல்லா இருக்கும்.
LikeLike
அன்புத் தங்கைக்கென் அன்பும் வணக்கமும். நிச்சயம் செய்வோம்மா நீங்கள் சொன்னதர்காகவே இக்கவிதையினை பிற இதழ்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.. கவிஞருக்கும் உங்களின் பாராட்டினை தெரிவிக்கிறேன்!
LikeLike